• Download mobile app
01 Dec 2024, SundayEdition - 3217
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மூளைக்குள் கரப்பான் பூச்சி, அகற்றியது ஸ்டான்லி மருத்துவமனை

February 3, 2017 தண்டோரா குழு

பெண்ணின் மூளைக்கு அடியில் உயிருடன் உலாவிக் கொண்டிருந்த கரப்பான் பூச்சியை சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் மருத்துவ நிபுணர்கள் அகற்றி, பெண்ணின் உயிரைக் காப்பாற்றினர்.

சென்னை ஈஞ்சம்பாக்கத்தைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர் செல்வி (42). இவர் தனது வீட்டில் இரவு தூங்கிக்கொண்டு இருந்தபோது, மூக்கினுள் பூச்சி நுழைந்துவிட்டது. உடனே, அவர் தன் மருமகனின் உதவியுடன் அருகில் இருந்த மருத்துவ நிலையத்திற்கு சென்றுள்ளார். ஆனால், அங்கே உரிய சிகிச்சை கிடைக்கவில்லை.

பிறகு, சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையின் காது-மூக்கு-தொண்டை சிகிச்சைப் பிரிவில் சேர்ந்துள்ளார். மருத்துவர்கள் அவருக்கு “என்டோஸ்கோபி” பரிசோதனை செய்தனர். அதன் முடிவில், கரப்பான் பூச்சி மண்டையோட்டின் அடிப்பகுதியில், இரண்டு கண்களுக்கு இடையே மூளைக்கு அடியே உயிருடன் இருப்பது தெரிய வந்தது.

அவருக்குச் சிகிச்சை அளித்த ஸ்டான்லி அரசு மருத்துவமனையின் காது-மூக்கு-தொண்டை நிபுணர் டாக்டர் எம்.என். சங்கர் கூறுகையில், “என்னுடைய 3௦ ஆண்டு மருத்துவப் பணியில் இது போல் பார்த்ததில்லை. இதுவே முதல் முறையாகும். அந்தக் கரப்பான் பூச்சி மண்டையோட்டின் அடிப்பகுதியில், இரண்டு கண்களுக்கு இடையில் உயிருடன் இருந்தது. அதை வெளியே எடுத்திருக்காவிட்டால், நோய்த்தொற்று ஏற்பட்டு மூளையைப் பாதித்திருக்கும். உறிஞ்சும் கருவி மற்றும் கவ்விப் பிடிக்கும் உபகரணம் ஆகியவற்றைக் கொண்டு 45 நிமிடம் போராடி, கரப்பான் பூச்சியை வெளியே எடுத்தோம்” என்றார்.

இது குறித்து செல்வி கூறுகையில்,

“என்னுடைய மூக்கில் பூச்சி நுழைந்துவிட்டதே அப்போதே நன்கு உணர முடிந்தது. இரவில் உறக்கத்தில் இருந்தபோது, மூக்குக்கு உள்ளே இருந்த பூச்சி நகரும்போது கண்களில் அதிக எரிச்சலும், தண்ணீர் வரும். இரவு முழுவதும் சரியாக தூங்கமுடியால், உட்கார்ந்து கொண்டிருப்பேன். என் முதலாளியிடம் இருந்து மருத்துவர் குறிப்பு கடிதத்தைப் பெற்றுக்கொண்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு எப்போது சென்று சிகிச்சை பெறுவேன் என்று காத்துக் கொண்டிருந்தேன். இப்போது குணமாகிவிட்டது” என்றார்.

மேலும் படிக்க