• Download mobile app
07 Dec 2022, WednesdayEdition - 2492
FLASH NEWS
  • அதிமுக பொதுக்குழு வழக்கு : உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு – ஓ.பி.எஸ் அறிவிப்பு
  • தமிழகத்தில் 10 முதல் 11 நாட்கள் வரை நிலக்கரி கையிருப்பில் உள்ளது-அமைச்சர் செந்தில் பாலாஜி
  • அக்னிபாத் திட்டத்தின்கீழ் இந்திய விமானப்படையில் சேர்வதற்கு ஜூன் 24ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்!
  • தமிழக நிதிநிலை அறிக்கை ஏமாற்றமே – தேமுதிக தலைவர் விஜயகாந்த்
  • 14.40 லட்சம் பேரின் நகைக்கடன்கள் தள்ளுபடி அதிரடி அறிவிப்பு
  • 12 டூ 18 வயசுக்கு இனி கோவாக்சின்.. அனுமதி கொடுத்தது மத்திய அரசு!
  • 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் மசோதா மக்களவையில் நிறைவேற்றம்
  • “பாஜகவை விட வேளாண் சட்டங்களை பழனிசாமிதான் அதிகமாக ஆதரித்தார்!” – முதலமைச்சர் ஸ்டாலின்
  • ஏன் இந்தி மொழியை கற்க கூடாது? – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள்
  • 3 வேளாண் சட்டங்களும் வாபஸ் – பிரதமர் மோடி அறிவிப்பு !

மூட்டு அழற்சி நோயாளிகளுக்கு தனிப்பட்ட சிகிச்சையுடன் கூடிய மூட்டு மாற்று அறுவை சிகிச்சை – டாக்டர். ராஜசேகரன் தகவல்.

November 23, 2022 தண்டோரா குழு

உடல் இயலாமைக்கு நான்காவது பொதுவான காரணங்களில் மூட்டு அழற்சி(மூட்டுவலி) முக்கியமான ஒரு காரணமாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த நோயினால், நோயாளிகளின் உடல் இயக்கம் குறைவதுடன் அதிக உடல் உபாதைகளைஎதிர்கொள்கின்றனர். வலியால் அவதியுற்று தங்களது வாழ்கை தரத்தைகுறைத்துக் கொள்கின்றனர்.

ஜான்சன் & ஜான்சன் மெட்டெக் இந்தியா மற்றும் கங்கா மெடிக்கல் சென்டர் &ஹாஸ்பிடல் இணைந்து இன்று ஒரு அகக்காட்சி அமர்வு ஒன்றை நடத்தி,அதிகரித்து வரும் மூட்டுஅழற்சி பற்றியும், நோயாளிகளுக்கு சிறந்த சிகிச்சை பலனை அளிக்கும் வகையில் சமீபத்திய சிகிச்சை முறையில் ஏற்பட்டுள்ள மேம்பாடுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திவருகிறது. மூட்டு மாற்று அறுவை சிகிச்சை, முற்றிய மூட்டு அழற்சிக்கான மிகவும் பாதுகாப்பான மற்றும் வெற்றிகரமான தீர்வாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுதுள்ளது.

2022 ஆம் ஆண்டில் இந்தியாவில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மூட்டு மாற்று அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டன.இந்த எண்ணிக்கை அறுவை சிகிச்சைஅவசியம் என கருதப்படும் 60 லட்சம் நோயாளிகளின் ஒரு பகுதியே. வாழ்க்கை நிலை தொடர்பான நோய்களின் அதிகரிப்புடன் மூட்டு வலியால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.நோயாளிகள் ஒருவருக்கொருவர் வேறுபடுவது போலவே ஒவ்வொருவரின் முழங்காலும் தனித்துவமானது.

அறுவை சிகிச்சை நிபுணர்கள் நோயாளியின் விளைவுகளை மேம்படுத்துவதையும், நோயாளிகளின் மீட்பு நேரத்தைக் குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டிருப்பதால் இவர்கள் பெரும்பாலும்சமீபத்திய தொழில்நுட்பங்களை பயன்படுத்த விரும்புகின்றனர். புதுமையான ரோபாட்டிக்ஸ்-அஸிஸ்டட் தொழில்நுட்பத்தின் வருகையினால் தனிநபர்களின் தேவைகளின் அடிப்படையில் மூட்டுமாற்று அறுவை சிகிச்சையில் துல்லியம் மற்றும் தனிப்பயனாக்கம் அதிகரித்துள்ளது.

ஒவ்வொரு நோயாளியின் தனிப்பட்ட உடற்கூறுகளின் அடிப்படையில் செயற்கைமூட்டுக்களை ரோபாடிக்-தொழில்நுட்பத்தின் உதவியால் இப்போது மாற்றியமைக்கலாம். இந்த தொழில்நுட்பம் நோயாளிகளை விரைவாக குணப்படுத்தும் நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஜான்சன் & ஜான்சன் மெட்டெக் இந்தியாவின் நிர்வாக இயக்குநர் சந்தீப் மக்கர் கூறுகையில்,

“தற்போது, இந்தியாவில் சுமார் 20,000எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் உள்ளனர்.அவர்கள் சுமார் 130 கோடி மக்கள் தொகையின் தேவைகளை பூர்த்தி செய்து வருகிறார்கள்.மேலும் மேம்பட்ட சிகிச்சைகளுக்கான வசதிகள் பெரிய நகரங்களில் மட்டுமே அதிகரித்துள்ளது. இது சுகாதார அமைப்பில் பெரும் சுமையை ஏற்படுத்துகிறது. ஜான்சன் ஜான்சன் மெட்டெக் இந்தியா எதிர்காலத்தில் இந்தியாவில் உள்ள சுகாதார நிபுணர்களுக்கு,சிக்கலான அறுவை சிகிச்சைகள் துறையில் உலகளாவிய மருத்துவத்தரங்களுக்கு இணையான புதுமையான தொழில்நுட்பங்கள் மற்றும் ரோபாட்டிக்ஸ் உள்ளிட்ட சாதனங்களை பாதுகாப்பாகவும் திறமையாகவும் கையாளும் வகையில் பயிற்சி அளித்து அவர்களை நவீன தொழில்நுட்பத்திற்கு ஏற்றவகையில் தயார்படுத்த உறுதிபூண்டுள்ளது.

விர்ச்சுவல் ரியாலிட்டி, டேட்டா சார்ந்த தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட உலகத் தரம் வாய்ந்த பயிற்சி கருவிகள் மூலம், மெட்ரோ நகரங்களில் மட்டுமின்றி, டயர் 2-3 நகரங்களிலும் சிறந்த சிகிச்சை பலன்கள், விரைவாக குணமடைதல், நோயாளிகளுக்கு தனிப்பட்ட சிகிச்சை மற்றும் கவனிப்பை உறுதி செய்ய முடியும் என்றார்.

கங்கா மருத்துவ மையம் மற்றும் மருத்துவமனைகளின் எலும்பியல், எலும்பு முறிவு, முதுகுத்தண்டு அறுவை சிகிச்சை துறையின் தலைவர் டாக்டர் (பேராசிரியர்) எஸ் ராஜசேகரன் கூறுகையில்,

“ஆரோக்கியம் பற்றி சமீபகாலமாக பேசப்படும் வார்த்தை ‘மொபிலிட்டிஇஸ் லைஃப் அண்ட் லைஃப் இஸ் மொபிலிட்டி.கடுமையான மூட்டுவலி இருக்கும் போது, நோயாளிகள் தங்கள் மூட்டுகளில் கடுமையான வலியை உணர்கின்றனர்.இது அவர்களது இயக்கத்தை கணிசமாகக் கட்டுப்படுத்துகிறது.இது நோயாளிகளின் உடல் மற்றும் மனதில் பலவிதமான தாக்கங்களை ஏற்படுத்துகின்றது. முதலாவதாக, வலியினால் ஏற்படும் இயலாமையானது அன்றாட வாழ்க்கையின் செயல்பாடுகளை மிகவும் கடினமானதாக்கும். மற்றும் சில நேரங்களில் இரவு தூக்கத்தையும் இது பாதிக்கலாம்.

இரண்டாவதாக,ஒரு நபர் தன்னிச்சையாக செயல்பட முடியாமல் வேறொருவரை சார்ந்திருக்கும் நிலையை ஏற்படுத்துகிறது.மிக முக்கியமான மூன்றாவது,இது நோயாளிக்கு நம்பிக்கையின்மை மற்றும் சுயமரியாதை இழப்பை ஏற்படுத்துகிறது. மூட்டு மாற்று அறுவை சிகிச்சை இந்த பிரச்சனைக்கு மிகவும் பயனுள்ள தீர்வாக இருக்கும்.மேலும் இது அவர்களுக்கு மற்றொரு புதிய வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுக்கும்.மொத்த மூட்டு மாற்று சிகிச்சை என்பது மிகவும் வெற்றிகரமான செயல்
முறையாக இருந்தாலும், ரோபோடிக்-அஸிஸ்டட் தொழில்நுட்பம் இந்தத் துறையில் அடுத்த மிகப்பெரிய கண்டுபிடிப்பாக இருக்கும்.

இது நோயாளியின் குறிப்பிட்ட உடற்கூறியல் படி செயற்கை உறுப்புகளின் அளவையும் இடத்தையும் துல்லியமாக கணிக்க உதவுகிறது. இதில் முழுமையான சமநிலையை அனுமதிக்கும் அதிநவீன மென்பொருட்கள் உள்ளன. இதனால் மூட்டானது இயக்கத்தின் முழு வீச்சிலும் மென்மையான இயக்கத்தைப் பெறுகிறது. இவை அனைத்தும் வலியின் தன்மையை குறைப்பதோடு மட்டுமல்லாமல், குறிப்பிட்ட காலத்திற்கு முன்னதாக குணமடைதல்,குறுகிய நாட்கள் மட்டுமே மருத்துவமனையில் தங்குதல் மற்றும் உட்பதிப்பிற்குப் பின்னரும் நீண்ட காலம் செயல்படுதல் போன்றவற்றை சாத்தியமாக்குகிறது. ரோபாட்டிக்ஸ்-அஸிஸ்டட் தொழில்நுட்பமானது அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கு நோயாளியின் தனிப்பட்ட தேவைகளின் அடிப்படையில் செயல்பட உதவுவதுடன் அறுவை சிகிச்சையின் போது தரவு-பகிர்வு முலம் துல்லியமான வழிகாட்டுதலை வழங்க முடியும்.மேலும், அறுவை சிகிச்சை தளத்தின் நிகழ்-நேர படத்தை வழங்குவதன் மூலம் இந்த ரோபோ-அஸிஸ்டட் தீர்வுகள் சில அடுத்த தலைமுறை அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கு செயற்கை மூட்டுமாற்று பொருத்தல்களைக் காட்சிப்படுத்தி வைக்க உதவுகின்றன.
இது நோயாளிகளுக்கு ஏற்படும் தேவையற்ற கம்ப்யூட்டட் டோமோகிராபி (CT)ஸ்கேன் கதிர்வீச்சுகளின் வெளிப்பாடுகளின் தேவையை குறைக்கிறது.

நோயாளியின் பிரத்யேகத் தேவைகளை அடிப்படையாகக் கொண்ட இத்தகைய தனிப்பட்ட செயற்கை மூட்டு மாற்று அறுவை சிகிச்சையானது நோயாளி நோயிலிருந்து விரைவாக மீண்டு வரவும் , அவர்களின் கால்களின் இயக்கம் மேம்படவும் வழிவகுக்கிறது.ரோபாட்டிக்ஸ்-அஸிஸ்டட் தொழில்நுட்பமானது நோயாளிகள்,அறுவை சிகிச்சை நிபுணர்கள் மற்றும் பராமரிப்புக் குழுக்களுக்கு எலும்பு மருத்துவம் தொடர்பான அனுபவத்தை மேம்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. சுகாதார மையங்களில் இந்த தொழில்நுட்பம் அணுகக்கூடிய வகையில் இருப்பதால்,தனிப்பட்ட கவனிப்பை வழங்குவதற்காக அறுவை சிகிச்சை நிபுணர்கள் மற்றும் ரோபாட்டிக்ஸ் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த மருத்துவ நிபுணத்துவத்தின் மூலம் நோயாளிகள் பயனடைய முடியும்.இது எதிர்காலத்தில் அறுவை சிகிச்சைகள் செய்யப்படும் முறையை மாற்றி நோயாளியின் சிகிச்சைகளுக்கு சிறந்த பலன் ஏற்பட வழி வகுப்பதுடன் மூட்டுவலி தொடர்பான நோயின் சுமையையும் வெகுவாக குறைக்கும் என்றார்.

மேலும் படிக்க