• Download mobile app
15 Jul 2019, MondayEdition - 1251
FLASH NEWS
  • “நியூசிலாந்து போல திமுக தோற்கும்!” – அமைச்சர் ஜெயக்குமார்
  • தொழில் நுட்பக் கோளாறு.. கடைசி நேரத்தில் நிறுத்தப்பட்ட ‘சந்திரயான்-2’…!
  • பயங்கரவாத அமைப்புக்கு நிதி திரட்டியதாக டெல்லியில் 14 பேர் கைது

மு.க ஸ்டாலின் ஆட்சி அமைத்தவுடன் கேபிள் இலவசமாகவே கொடுப்பார் – வைகோ

May 12, 2019 தண்டோரா குழு

மு.க ஸ்டாலின் ஆட்சி அமைத்தவுடன் கேபிள் இலவசமாகவே கொடுப்பார் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சூலூரில் பேசியுள்ளார்.

கோவை மாவட்டம் சூலூர் இடைத்தேர்தல் திமுக வேட்பாளர் பொங்கலூர் பழனிச்சாமி ஆதரித்து சூலூர் திடலில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தலைமையில்
மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட தொண்டர்கள், கூட்டணி கட்சி நிர்வாகிகள், என பலரும் கலந்து கொண்டனர். முன்னாள் அமைச்சர் ஏவா, வேலு, கோவை நாடாளுமன்ற வேட்பாளர் பி.ஆர் நடராஜன் என பலரும் கலந்து கொண்டனர்.

பொதுக்கூட்டத்தில் வைகோ பேசியதாவது,

தேர்தல் வாக்கு எண்ணிக்கை பின்பு திமுக ஆட்சி, மு.க ஸ்டாலின் தலைமையில் அமையும். 50 ரூபாய் கொடுத்து கேபிள் டிவி பார்த்தீர்களே? இன்று 250 தாண்டி 300 ரூபாய் எட்டுகிறது. அதேபோல் 350 கொடுத்து வாங்கியா கேஸ் உருளை 800 தாண்டுகிறது. மு.க ஸ்டாலின் ஆட்சி அமைத்தவுடன் கேபிள் இலவசமாகவே கொடுப்பார், அதற்கும் திட்டம் வைத்திருப்பார்.மத்தியில் வெறிபிடித்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் நேரம் வந்துள்ளது. நடுநிலை தவறிவிட்டது, தலைமை தேர்தல் ஆணையம் என முன்னள் தேர்தல் அதிகாரி குர்சி கூறுகிறார்.

ராகுல்காந்தி கேரளாவில் போட்டி இடுகிறார், மோடி மதத்தை கூறி அவர் போட்டி இடுவதாக கூறுகிறார், மதத்தை சொல்லி வாக்கு சேகரிப்பது தவறு. இரண்டு தவறுகளை தேர்தல் ஆணையம் கண்டிக்கவில்லை.
மோடி தரம் தாழ்ந்து பேசி வருகிறார். மோடியை பார்த்து கேட்கிறேன் யார் சிந்திய இரத்த துளிகளை வைத்து வாக்கு சேகரிக்கிறர்கள். இந்தியா பல தேசியங்களை கொண்ட நாடு, நான் ஆயிரம்முறை சொல்லுவேன்.

மோடி கூட்டத்துக்கு அடிமை பணி செய்வது எடப்பாடி அரசு. உயர் மின் கோபுரங்கள், கெயில் , பெட்ரோலியம், நீர் என பல திட்டங்கள் பகுதிக்கு ஒன்று என மக்களையும், நிலத்தையும் அழித்து வருகிறார்கள் தமிழகத்தை அழிக்க வேண்டும், பூத்துக் குலுங்கும் இயற்கை வளத்தை அழிக்க வேண்டும். 13 பேர் சுட்டுக்கொண்டது கைக்கூலி அரசு எடப்பாடி அரசு. கஜா புயலில் 89 பேர் இறந்தார்கள், தானே புயலில் 19 பேர் இறந்தார்கள், பிரதமருக்கு தெரியுமா? எதை வைத்து தமிழக மக்களிடம் பிரதமர் வாக்கு கேட்கிறார்.நீட் தேர்வில் மாணவிகளை மனிதாபம் இல்லாமல் நடத்தினார்கள், மாணவிகளின் அணிகலன் அகற்ற சொன்னார்கள், துப்பட்டாவை அகற்ற சொல்கிறார்கள். அவர்கள் எப்படி பதட்டம் இல்லாமல் தேர்வு எழுத முடியும். நான் கேட்கிறேன், ஐ.ஏ. எஸ், ஐ.பி.எஸ் தேர்வுகளுக்கு வைத்துள்ளீர்களா? இல்லை?

மாணவர்களின் சட்டை கிழித்தார்கள், மாணவன் பேண்டில் மெட்டல் ஜிப் உள்ளது. வேறு பேண்ட் அணிந்துவா? என்று சொன்னவர்கள். அடிப்படை அறிவு உள்ளவர்கள் இதை செய்வார்களா?

22 தொகுதிகளில் திமுக வெற்றி அடையபோவது உறுதி எனவும், ஜெயலலிதா சுய நினைவுடன் இல்லாதபோது அவருடைய ரேகை இல்லை, மேலும் அவர்கள் பெற்ற வெற்றி செல்லாது. ஜனநாயகத்தை காலில் போட்டு மிதிக்கும் கேடுக்கட்ட அரசு தொடரக்கூடாது. அகற்றப்பட வேண்டும். தமிழகத்தை பாலைவனமாக மாற்ற ஆட்சியாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.

பொள்ளாச்சி பகுதியில் 300 பெண்கள் நாசம் செய்துள்ளார்கள். அவர்களின் வாழ்க்கை நாசம் செய்துள்ளார்கள். மருத்துவமனையில் குழந்தைகள் கடத்தப்படுகிறது. இப்போது 100க் கணக்கான குழந்தைகள் கடத்தப்பட்டுள்ளன. 20 ஆயிரம் , 30 ஆயிரத்துக்கு ஏழ்மையில் இருப்பவர்களிடம் வாங்கி 1 லட்சத்துக்கு விற்ற கொடுமை தமிழகத்தில் நடந்துள்ளது.

குழந்தைகள் போற்றிய நாடு தமிழகம், ஆனால் அதே குழந்தைகளுக்கு கொடுமை நடந்துள்ளது. கீரையோ கீரையோ என்று கூவி விற்பது போன்று, தற்போது பிள்ளையே பிள்ளை என கூவி விற்கும் நிலை தற்போது தமிழகத்திற்கு வந்துள்ளது. ஆம் செய்தி தாள்களில் செய்தி வருகிறது , குழந்தைகள் விற்பனை என இதை 30 வருடங்களுக்கு முன்பே பராசக்தியில் கருணாநிதி குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் படிக்க