• Download mobile app
23 Feb 2020, SundayEdition - 1474
FLASH NEWS
  • பிப்.24 பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாள் – முதல்வர் அறிவிப்பு
  • உயர்நீதிமன்றம் தடையை மீறி போராட்டம்! #CAAProtest
  • காஷ்மீர் எல்லையருகே 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

முப்படைகளுக்கும் ஒரே தளபதி உருவாக்கப்படுவார் – பிரதமர் மோடி

August 15, 2019 தண்டோரா குழு

நாட்டின், 73வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி, தொடர்ந்து ஆறாவது முறையாக, டில்லி செங்கோட்டையில் கொடியேற்றினார்.

நாட்டின் 73 வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதற்காக டெல்லி செங்கோட்டையில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. முதலில் டெல்லியில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி முப்படை வீரர்களின் மரியாதையை ஏற்றார். இதன் பின் நரேந்திர மோடி செங்கோட்டையில் கொடியேற்றிய பின் மக்களுக்கு உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர்,

விடுதலைக்காக போராடியவர்களுக்கு எனது வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன். சுதந்திர தினத்திற்காக உயிர் தியாகம் செய்தவர்களுக்கு என்னுடைய வணக்கங்கள்.புதிய அரசு பதவியேற்று மீண்டும் எனக்கு கொடியேற்ற வாய்ப்பு கிடைத்துள்ளது. நாட்டு மக்கள் எங்கள் மீது வைத்த நம்பிக்கை நிறைவேற்ற ஒரு மணித்துளி நேரத்தையும் வீணாக்காமல் செயல்பட்டு வருகிறது மத்திய அரசு.காஷ்மீர் சுமுக நிலையில் கொண்டுவர பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது. rஜம்மு-காஷ்மீரின் 370-வது சட்டத்தை நீக்கியதன் மூலம் வல்லபாய் பட்டேலின் கனவு நினைவாகியுள்ளது.

சட்டப்பிரிவு 370 நீக்கத்தின் மூலம் ஒரே நாடு ஒரே அரசியல் சட்டம் என்ற எண்ணம் இன்று நனவாகியுள்ளது.குழந்தைகள் நலனுக்காவும், பாலியல் குற்றங்கள் குறைவதற்காகவும் சட்டங்கள் கடுமையாக்கப்பட்டுள்ளன.இஸ்லாமிய தாய்மார்கள், சகோதரிகளின் உரிமைகளுக்காகக் முத்தலாக் முறை நீக்கப்பட்டது. விவசாயிகளின் நலனுக்கான பல்வேறு நடவடிக்கை, நீர்வளத்தை காக்க ஜல் சக்தி அமைச்சகம் உருவாக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 2-ம் தேதி முதல் நாடு முழுவதும் ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்கைத் தடை செய்வது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும். விரைவில் திறந்த வெளியில் மலம் கழிக்காத நாடாக இந்தியா மாறும்.

ஒற்றுமையை உறுதி செய்யவும் திறமை வாய்ந்த தலைமையை வழங்கவும் முப்படைகளுக்கும் ஒரே தளபதி உருவாக்கப்படுவார்.ஒரே நாடு, ஒரே தேர்தல் முறையை அமல்படுத்தப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படும். 1 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக உள்ள இந்தியா, அடுத்த 5 ஆண்டுகளில் 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் கொண்ட நாடாக மாறும்.

உள்கட்டமைப்புத் துறையில் ரூ.100 லட்சம் கோடி முதலீடு செய்ய முடிவெடுத்துள்ளோம். தொழில்புரிய எளிமையான நாடுகளின் பட்டியலில் முதல் 50 இடங்களுக்குள் இந்தியா வர வழிவகை செய்யப்படும்.ஜிஎஸ்டி வரி மூலம் இன்று ஒரே நாடு ஒரே வரி என்ற கனவும் நடைமுறைக்கு வந்துள்ளது.

ஊழலையும் கறுப்புப் பணத்தையும் ஒழிக்க மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு முயற்சியையும் வரவேற்கிறோம்; இவைதான் கடந்த 70 ஆண்டுகளாக இந்தியாவின் அச்சுறுத்தலாக இருந்தன.2014-ல் பாஜக ஆட்சிக்கு வரும்போது, பல்வேறு சவால்கள் எனக்கு இருந்தன. இருந்தாலும் நாட்டு மக்களின் ஆதரவால் ஒவ்வொரு அடியாக நாங்கள் எடுத்து வைத்தோம்.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களின் துயரங்களை நீக்குவதற்கு முக்கிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மருத்துவ சேவைகளை விரிவுபடுத்த மருத்துவக் கல்வியில் திருத்தும் செய்யப்படும்.

பொறுப்பேற்ற 10 வாரத்திற்குள்ளாகவே மத்திய அரசு பல முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் நாட்டு மக்களுக்கு சேவையாற்ற பல புதிய திட்டங்களைசெய்ய தொடங்கிவிட்டோம்.நாட்டு மக்கள் எங்கள் மீது வைத்த நம்பிக்கையை நிறைவேற்ற, ஒரு மணித்துளி நேரத்தையும் வீணாக்காமல் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

மேலும் படிக்க