• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மாவட்ட வேலை வாய்ப்பு அதிகாரி சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி

May 25, 2023 தண்டோரா குழு

கோவை மாவட்ட வேலை வாய்ப்பு அதிகாரியாக பணிபுரியும் சத்ய பார்வதி (27), சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்று தேசிய அளவில் 518-வது இடம் பிடித்துள்ளார். இவர் தனது 4-வது முயற்சியில் இந்த வெற்றியை பெற்றார்.

இதுகுறித்து சத்ய பார்வதி கூறியதாவது: எனது சொந்த ஊர் தூத்துக்குடியாகும். கடந்த 2019-ம் ஆண்டு குரூப்-1 தேர்வு எழுதி வெற்றி பெற்று தற்போது கோவையில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலராக பணிபுரிகிறேன். தந்தை ஓய்வு பெற்ற அரசு அதிகாரி. எனது 4-வது முயற்சியில் சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. கடந்த முறை தேர்வில் வெற்றி பெற்று நேர்காணல் முடிந்த பின்னர் மதிப்பெண்ணில் எனது வெற்றி பறிபோனது. இதையடுத்து தீவிரமாக படித்து வந்தேன். சிவில் சர்வீஸ் தேர்வு எழுத நினைப்பவர்கள் அரசு அளிக்கும் இலவச பயிற்சியை பயன்படுத்தி கொள்ளலாம்.

சமச்சீர் புத்தகங்கள், கடந்த கால கேள்விகளை படித்து வந்தாலே இந்த தேர்வில் வெற்றி பெற முடியும். முதல் முறையே வெற்றி பெறாவிட்டாலும் தொடர்ந்து முயற்சி செய்யுங்கள் வெற்றி கிடைக்கும்,’’ என்றார்.

மேலும் படிக்க