• Download mobile app
15 Dec 2025, MondayEdition - 3596
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மாநகராட்சியின் பொறியாளர்களுக்கு கூடுதல் பொறுப்புகள் வழங்கி பணியிடமாற்றம்

May 18, 2022 தண்டோரா குழு

கோவை மாநகராட்சியில் பணிபுரியும் செயற்பொறியாளர்கள், உதவி செயற்பொறியாளர்கள், இளம் பொறியாளர்களுக்கு பணியிட மாற்றம் மற்றும் கூடுதல் பொறுப்புகள் வழங்கி கோவை மாநகராட்சி கமிஷனர் ராஜ கோபால் சுன்கரா உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மத்திய மண்டலம், ஸ்மார்ட் சிட்டிதிட்ட பணிகளின் செயற்பொறியாளர், மற்றும் ஜேஎன்என்யுஅர்ம் பிரிவின் செயற்பொறியாளர் சசிப்பிரியா தற்போது ஜேஎன்என்யுஅர்ம் பிரிவிற்கு மட்டும் செயற்பொறியாளராக பணியமர்த்தப்பட்டுள்ளார்.

மத்திய மண்டலத்தின் உதவி செயற்பொறியாளர் புவனேஸ்வரி, ஏற்கனவே கவனித்துவரும் பணிகளுடன் கூடுதலாக மத்திய மண்டலத்தின் செயற்பொறியாளராக பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.அதேபோல, மத்திய மண்டலத்தின் உதவி செயற்பொறியாளர் (திட்டம்) பாபு தற்போது,ஏற்கனவே கவனித்துவரும் பணிகளுடன் கூடுதலாக தெற்கு மண்டலத்தின் உதவி செயற்பொறியாளராக (திட்டம்) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

மத்திய மண்டலத்தின் 67ம் வார்டு பணிகளை கவனித்து வரும் உதவி செயற்பொறியாளர் இளங்கோவன் பணியிலிருந்து விடுபடுவதால், அப்பணிக்கு தெற்கு மண்டலத்தின் உதவி செயற்பொறியாளர்(திட்டம்)(பொ) ஐசக் அர்தர் நியமிக்கப்பட்டுள்ளார். பணிமாற்றம் மற்றும் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டவர்கள் உடனடியாக பணியில் சேர்ந்து, பணிசேர் அறிக்கையை அனுப்பிவைக்க வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கபட்டுள்ளது

மேலும் படிக்க