• Download mobile app
02 Oct 2023, MondayEdition - 2791
FLASH NEWS
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி
  • மகளிர் இடஒதுக்கீடு அமலுக்கு வராது – ப.சிதம்பரம்
  • முதல்வர் பதவியை பாஜக கேட்கவில்லை – கே.பி.முனுசாமி

மருதூர் ஊராட்சி மன்ற தலைவர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு

June 9, 2023 தண்டோரா குழு

கோவை மாவட்டம் காரமடை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மருதூர் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் பூர்ணிமா (வயது 40). இவர் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் தனியார் நிறுவன ஊழியர்கள்,நில உரிமைாயர்கள் உள்பட தகுதியற்ற நபர்களுக்கு 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் அடையாள அட்டை வழங்கியதுடன், அரசிற்கு பல லட்ச ரூபாய் நிதி இழப்பு ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதன் அடிப்படையில் கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் மருதூர் ஊராட்சி மன்ற தலைவர் பூர்ணிமாக மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க