கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாட்டில் புறநகர வளர்ச்சி மற்றும் சமூக பொருளாதார மாற்றங்கள் காரணமாக விளைநிலங்கள் அதிக அளவில் விவசாயம் அல்லாத இதர பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளதால், அதிக அளவில் மனை வரைபடங்கள் நகரமைப்பு துறையால் அங்கீகரிக்கப்பட்டு வருகிறது.
இந்த உட்பிரிவுகள் வருவாய் கணக்குகளில் உடனுக்குடன் கொண்டு வரப்படாமல் மனுதாரர்கள் வட்டாட்சியர் அலுவலகங்களுக்கு சென்று மனு செய்த பின்னர் நில அளவையாளர், கிராமத்திற்கு சென்று ஒவ்வொரு உட்பிரிவுகளையும் அளந்து, தயார்செய்து வட்டாட்சியர் உத்தரவு பெற்று, அதன்பின்னரே வருவாய் கணக்குகளில் மாறுதல் மேற்கொள்ளும் நடைமுறை தற்போது இருந்து வருகிறது.
இந்த சிரமத்தை தவிர்க்கும் பொருட்டு, ஒரு புதிய மென்பொருள் தயார் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, மனை அபிவிருத்தியாளர்கள் பொதுசேவை மையத்தின் மூலம் உரிய கட்டணத்துடன் மனுவை சமர்ப்பித்து, அங்கீகரிக்கப்பட்ட மனை வரைபடத்தின்படி புதிய உட்பிரிவுகளை தமிழ்நிலம் மற்றும் கொலாப்லேண்ட் மென்பொருளில் உடனுக்குடன் ஒப்புதல் மேற்கொண்டு வருவாய் கணக்குகளிலும் மாறுதல் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த வசதியினை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.
கோவை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் – 45 மனுக்கள் மீது சுமூகமான தீர்வு
கோவையில் அன்னையர் நினைவாக, தாய்மையை போற்றும் விதமாக தாய் – சேய் சிலை திறப்பு
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு