• Download mobile app
20 Feb 2019, WednesdayEdition - 1106
FLASH NEWS
  • இந்தியா தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுப்போம் – பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்
  • தமிழகத்தில் அதிமுக, பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடுவது திமுக கூட்டணிக்கு சாதகம் – திருமாவளவன்
  • “குற்றத்தை தடுக்கவும் சிசிடிவி உதவுகிறது” – ஆணையர் விஸ்வநாதன்
  • “உறுதியானது மகாராஷ்ட்ர பாஜக, சிவசேனா கூட்டணி
  • நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஓரிரு நாட்களில் அதிமுக முடிவு அறிவிப்பு – ஓபிஎஸ்
  • உயிரிழந்த தமிழக வீரர்களின் இறுதி சடங்கில் பங்கேற்கிறார் பொன்.ராதாகிருஷ்ணன்
  • வீரமரணமடைந்த தமிழக வீரர்களின் உடல்கள் திருச்சி விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டன…
  • இஸ்லாம் மதத்துக்கு மாறினார் டி.ராஜேந்தர் மகன்!
  • புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் வீரமரணமடைந்த தமிழக வீரர்களின் குடும்பங்களுக்கு பாரிவேந்தர் இரங்கல்

மத்திய அரசிடம் மாநில அரசுகள் பிச்சையெடுக்கும் நிலை உள்ளது – தம்பிதுரை காட்டம்

February 11, 2019 தண்டோரா குழு

ஜிஎஸ்டி மூலம் மாநில அரசுகளின் அதிகாரத்தை மத்திய அரசு பறித்துவிட்டது. ஜிஎஸ்டி வரி வசூலில் தங்கள் பங்கைப் பெறுவதற்கு, மத்திய அரசிடம் மாநில அரசுகள் பிச்சையெடுக்கும் நிலைமையில் உள்ளன என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை பாராளுமன்றத்தில் கூறியுள்ளார்.

மத்திய அரசு தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட் மீதான விவாதம் பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்றது. இந்த விவாதத்தில் அதிமுக சார்பில் மூத்த
உறுப்பினரும் மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரை பேசினார். அப்போது பேசிய அவர் மத்திய அரசின் செயல்பாதுடுகள் குறித்து கடுமையாக விமர்சித்தார்.

தம்பிதுரை பேசுகையில்,

நம் நாட்டில் விரைவில் பொதுத்தேர்தல் வரவுள்ள இந்த சூழலில் தாக்கல் செய்துள்ள இந்த இடைக்கால பட்ஜெட் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இது இடைக்கால பட்ஜெட்டாக இருந்திருக்க வேண்டும். ஆனால், இதில் மக்களைக் கவரும் ஏராளமான கவர்ச்சித் திட்டங்கள் இருக்கின்றன. மத்திய அரசு கடந்த 4 ஆண்டுகளில் இதை அறிவித்திருக்கலாம். ஆனால், அப்போதெல்லாம் இவகையான கவர்ச்சித் திட்டங்களை அறிவிக்கவில்லை. நாட்டில் வேலையில்லாத இளைஞர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. பணமதிப்பிழப்பு நீக்க நடவடிக்கையால் சிறு, குரு தொழில்கள் அழிந்துவிட்டன. பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள தாக்கம் என்ன? வேலையில்லா திண்டாட்டம் தான் பெருகியுள்ளது. கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத வகையில் வேலையில்லா திண்டாட்டம் கடந்த 4 அரை ஆண்டு கால பாஜக ஆட்சியில் 6 சதவீதம் உயர்ந்துள்ளது. படிப்பை முடித்த இளைஞர்கள் வேலையின்றி தவிக்கிறார்கள். கடந்த 2018-2019 பட்ஜெட்டை தாக்கல் செய்த அருண் ஜெட்லி, வேலையில்லா திண்டாட்டத்தை தீர்க்க பல்வேறு நடவடிக்கைகளை எடுப்பதாக கூறினார். அப்போது 7 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதாக கூறினார். ஆனால் தற்போதைய இடைக்கால பட்ஜெட்டில் 2 லட்சம் வேலை வாய்ப்புகள் மட்டுமே உருவாக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இது என்ன எண்ணிக்கை என தெரியவில்லை என்றார்.

மேலும், வேளாண் சார்ந்த பிரச்சினைகள் இந்த ஆட்சியில் தொடர்கின்றன. ஏறக்குறைய 3 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவோம் என்று வாக்குறுதி அளித்தது என்னாயிற்று? விளைபொருட்களுக்கு ஆதார விலை உயர்த்தப்பட்டாலும், வருமானம் இரட்டிப்பாக்கப்படவில்லை. பிரதமரின் விவசாயிகள் திட்டம் என்பது நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு மட்டும் பொருந்துகிறது. நிலம் இல்லாத விவசாயிகளுக்கு உதவவில்லை. மாநில அரசின் உரிமைகளை பறிப்பதில் காங்கிரஸ் அரசுக்கும் பாஜக அரசுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. ஜிஎஸ்டி மூலம் மாநில அரசுகளின் அதிகாரத்தை மத்திய அரசு பறித்துவிட்டது. ஜிஎஸ்டி வரி வசூலில் தங்கள் பங்கைப் பெறுவதற்கு, மத்திய அரசிடம் மாநில அரசுகள் பிச்சையெடுக்கும் நிலை உள்ளது. மாநிலங்களுக்கு தர வேண்டிய நிதியை முறையாக மத்திய அரசு அளிக்கவில்லை. இதுதான் கூட்டாட்சி தத்துவமா? புயல்களால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு நிவாரண நிதி முழுமையாக வழங்கப்படவில்லை. வாக்கெடுப்புகளில் மத்திய அரசு மீது நம்பிக்கை வைத்து பலமுறை வாக்களித்தோம். ஆனால் எங்கள் அரசு மீது மத்திய அரசு நம்பிக்கை வைக்கவில்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

மேலும் படிக்க