• Download mobile app
31 Aug 2025, SundayEdition - 3490
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து முடிவு எடுக்கப்படும் – தர்மேந்திர பிரதான்

March 20, 2017 தண்டோரா குழு

ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்து தமிழக விவசாயிகள் மற்றும் நெடுவாசல் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து முடிவு எடுக்கப்படும் என்று பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் மக்களவையில் திங்கள்க கிழமை கூறியதாவது;

“நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது போன்ற திட்டங்களை எந்த அரசு கொண்டு வந்தாலும் அதற்கு முறையான சுற்றுச்சூழல் ஆய்வு நடைபெறும்.

ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் நெடுவாசல் பாலைவனமாக மாறும் என்ற கருத்து ஏற்க கூடியதல்ல. ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் விவசாயம் பாதிக்கும் என நெடுவாசல் கிராம மக்கள் அச்சப்படத் தேவையில்லை.

நம் நாட்டில் வாகனங்களுக்கு எரிபொருள் தேவை அதிகம் உள்ளது. தற்போதைய சூழலில் 80 சதவீத எரிபொருள் இறக்குமதி செய்யப்படுகிறது. எனவே ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்து தமிழக விவசாயிகள் மற்றும் நெடுவாசல் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து முடிவு எடுக்கப்படும்”

இவ்வாறு தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.

மேலும் படிக்க