• Download mobile app
19 Sep 2025, FridayEdition - 3509
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

போற்றுதலுக்குரிய தலைவர் நல்லகண்ணுவுக்கு அரசு உடனே வீடு ஒதுக்கவேண்டும் – ஸ்டாலின்

May 11, 2019 தண்டோரா குழு

பொதுவுடைமை இயக்கத் தலைவரான நல்லகண்ணுவுக்கு நெருக்கடி ஏற்படுத்தாமல், அரசு சார்பில் உடனடியாக வேறு ஒரு வீடு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு இதுநாள் வரை அரசு ஒதுக்கியிருந்த வீட்டில் வசித்து வந்தார். இதற்கிடையில் வீட்டை காலி செய்ய கூறி நோட்டீஸ் விட்டுள்ளதையொட்டி அவர் அரசு ஆணையை மதித்து வீட்டை காலி செய்து, வேறு வாடகை வீட்டிற்கு இடம் பெயர்ந்துள்ளார். இந்த செய்தியை அறிந்த பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தமிழக அரசின் இந்த செயலுக்கு எதிராக தங்களது அதிருப்தி மற்றும் கண்டனத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் நல்லகண்ணுவுக்கு நெருக்கடி ஏற்படுத்தாமல், அரசு சார்பில் உடனடியாக வேறு ஒரு வீடு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில்

போராட்டமும் தியாகமுமே வாழ்க்கை முறையாகக் கொண்ட நல்லக்கண்ணு ஐயா அவர்கள், 12 ஆண்டுகளாக வசித்து வந்த அரசு குடியிருப்பில் இருந்து வெளியேற்றி இருப்பது கண்டனத்துக்குரியது. தோழர் நல்லக்கண்ணு ஐயா அவர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தாமல் அரசு சார்பில் உடனடியாக வீடு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

மேலும் படிக்க