• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

போத்தனூரில் மூன்று வேப்பமரங்கள் வெட்டும் பணி தடுத்து நிறுத்தும்

June 30, 2022 தண்டோரா குழு

கோவை போத்தனூரில் மூன்று வேப்பமரங்கள் வெட்டும் பணி நிறுத்தப்பட்டு மரங்கள் காப்பாற்றப்பட்டது.

கோவை போத்தனூர் சாலை கருப்பராயன் கோவில் பின்புறம் மூன்று வேப்பமரங்கள் வெட்டப்படுவதாக மாவட்ட வருவாய் துறைக்கு தகவல் வந்துள்ளது. அதன் அடிப்படையில் கிராம நிர்வாக அலுவலக உதவியாளர்,மாவட்ட பசுமை குழு உறுப்பினர் செயது ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று மூன்று வேப்பமரங்கள் வெட்டும் பணி நிறுத்தப்பட்டு மரங்கள் காப்பாற்றப்பட்டது.

மேலும், மரம் வெட்டும் பணியில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இது குறித்து மாவட்ட பசுமை குழு உறுப்பினர் செயது கூறுகையில்,

இதுபோன்ற மரங்களுக்கு எதிரான செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியது மிகவும் அவசியம்.குற்றம் உறுதி செய்யப்பட்டால் வருவாய்த்துறையின் பரிந்துரையின் அடிப்படையில் காவல்துறை FIR போட வேண்டும். இதுவரை பல புகார்கள் காவல் நிலையங்களைக்கு வழங்கப்பட்டுள்ளது.

மரங்களை வெட்டுவதற்கு வருவாய் துறையிடம் தான் முறையான அனுமதி பெற வேண்டும். வேறு யாரும் அதற்கு அனுமதி அளிக்க முடியாது. மரங்களுக்கு நீதி வழங்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை வேண்டுகிறோம். கோடிமரங்கள் நடப்பட்டாலும் வளர்ந்த மரங்களை வெட்டப்படாமல் பாதுகாப்பது என்பது மிக அவசியமானதாகும் என்றார்.

மேலும் படிக்க