• Download mobile app
20 Mar 2019, WednesdayEdition - 1134
FLASH NEWS
  • கருணாநிதி பிறந்த ஜூன் 3-ல் மோடியின் ஆட்சி முடிவுக்கு வருகிறது – மு.க.ஸ்டாலின்
  • நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாது – ராமதாஸ்
  • 11 மாத சிறைவாசத்துக்குப் பின் மதுரை சிறையில் இருந்து ஜாமீனில் இன்று வெளியே வந்தார் நிர்மலாதேவி
  • மக்களவை தேர்தலுக்கான அதிமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்
  • கோவா மாநிலத்தின் புதிய முதலமைச்சராக பாஜகவை சேர்ந்த பிரமோத் சாவந்த் பதவியேற்பு
  • தமிழகம் முழுவதும் வேல்ஸ் கல்விக்குழுமம் தொடர்புடைய 27 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை
  • மக்களவை தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின்
  • தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் உண்மை குற்றாவாளிகளை கண்டறிய இவர் தான் சரியான ஆள்? யார் இவர் ?

March 13, 2019 தண்டோரா குழு

பெண்களிடம் ஆசை வார்த்தைகளைக் கூறி, அவர்களை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ பதிவு செய்து மிரட்டி பணம் பறிக்கும் வேளையில் ஈடுபட்டதாக கல்லூரி மாணவி ஒருவர் கொடுத்து புகாரின் அடிப்படையில் இந்த வழக்கில் தொடர்புடைய சபரி ராஜன், சதீஷ், வசந்த் குமார் மற்றும் தலைமறைவான முக்கிய குற்றவாளி திருநாவுக்கரசு ஆகியோர் கைது செய்யப்பட்டனர். தமிழகத்தையே உலுக்கிய இந்த சம்பவத்தை கண்டித்து பல்வேறு அரசியல் தலைவர்களும், திரை பிரபலங்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதற்கிடையில், கைது செய்யப்பட்ட சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார், திருநாவுக்கரசு ஆகிய 4 பேரையும் குண்டர் சட்டத்தின்கீழ் ஒரு ஆண்டு சிறையில் அடைக்க கோவை மாவட்ட ஆட்சியர் நேற்று உத்தரவு பிறப்பித்தார். அதைபோல் இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு மாற்றி டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் நேற்று ஆணை பிறப்பித்தார். சி.பி.சி.ஐ.டி. போலீசாரும் உடனடியாக விசாரணை நடவடிக்கையை தொடங்கினார்கள்.சிபிசிஐடி போலீசார் விசாரணைக்கு உத்திரவிட்ட சில மணி நேரத்தில் இந்த வழக்கு தொடர்பான விசாரணையை சி.பி.ஐ.-க்கு மாற்ற தமிழக அரசு நேற்று அதிரடியாக முடிவு செய்தது. இதுதொடர்பாக தமிழக அரசு சார்பில் மத்திய அரசுக்கு பரிந்துரை அனுப்பப்படுகிறது. மேலும், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். எனினும் இந்த கொடூர சம்பவங்களுக்கு பின்னர் இன்னும் பலர் இருக்கிறார்கள். அரசியல் தலையீடும் உள்ளது நேர்மையான விசாரணை நடந்து குற்றவாளிகளை என எதிர்கட்சிகள் உட்பட பொதுமக்களும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இதற்கிடையில், சமூக வலைதளங்களிலும் பலரும் தங்களுக்கு தெரிந்த நேர்மையான அதிகாரிகளை இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என பதிவிட்டுவருகிறார்கள். இதில் சைலேந்திர பாவும் ஒருவர். ஏனெனில் சில வருடங்களுக்கு முன்னர் கோவையில் நடந்த முஸ்கான் ரித்திக் வழக்கில் நடந்த என்கவுண்டர் தான் அதற்கு காரணம். ஆனால், இந்த வழக்கை பொறுத்தவரையில் குற்றவாளிகள் இவர்கள் மட்டுமின்றி இவர்களுக்கு பின்னர் பலரும் உள்ளனர் என்பதே. அதனால் நேர்மையான அதிகாரியால் முறையாக விசாரணை நடந்தால் பல குற்றவாளிகள் அடையாளம் காட்டப்படுவார்கள். அந்த வகையில் சமூக வலைதளவாசிகளின் பார்வை ஐபிஎஸ் அதிகாரி அஸ்ரா கார்க் பக்கம் திரும்பியுள்ளது.

யார் இந்த அஸ்ரா கார்க்?

2004ம் ஆண்டு ஐ.பி.எஸ்.,தேர்வில் வெற்றிபெற்று தமிழத்திற்கான அதிகாரியாக பணிநியமிக்கப்பட்டவர் அஸ்ரா கார்க். திருநெல்வேலி, மதுரை, திருப்பூர், தர்மபுரி என இவர் பணியாற்றிய இடங்களில் எல்லாம் அதிரடி காட்டியவர். முதன்முதலில் திருப்பத்துாரில் ஏ.எஸ்.பி.,யாக பணியை துவக்கியவர் நெல்லையில் 2008ல் எஸ்.பி.,யாக நியமிக்கப்பட்டார். திருநெல்வேலி மத்திய சிறைக்குள் நேரடியாக சென்று ஆய்வு செய்து அதிலும் அதிரடி காட்டியவர் ஜாதிக்கலவரங்களாலும், கந்துவட்டி, நிலஅபகரிப்பு என அடித்தட்டுமக்களை கசக்கி பிழியும் பிரச்னைகளில் பாராமுகமாக நடந்து கொள்ளமால் ஒவ்வொரு புகாரிலும் நேரடியாக தலையிட்டு தீர்வு கண்டார். திருநெல்வேலியில் கலக்கிய இவர் பின்னர் திருப்பூர் எஸ்பியாக நியமிக்கபட்டார். அங்கு அவரது பாணி வேறு விதத்தில் இருந்தது குழந்தை தொழிலாளர் மீட்பு, பிழைக்க வந்த இடத்தில் தவறுகள் செய்யாதவாறு நைஜீரியர்களை நல்வழிப்படுத்தியது, செங்கல்சூளைகளின் முறைகேடு என அவர் பணியாற்றிய ஒன்றிரண்டு மாதங்களிலேயே முத்திரைப்பதித்தார். அதன் பின் மதுரை தருமபுரி மாவட்டங்களில் நேர்மையாகவும் பல உண்மை குற்றவாளிகளையும் கண்டறிந்து கைது நடவடிக்கை எடுத்தார். பின்னர், தமிழக போலீஸ் அதிகாரிகளில் நேர்மையானவர்கள் தேர்வு செய்யப்பட்ட இவர் தற்போது சென்னையிலேயே தமிழகத்திற்கான சி.பி.ஐ., அதிகாரியாக சி.பி.ஐ.,யில் பணியாற்றி வருகிறார்.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கை தமிழக அரசு சிபிஐ வசம் ஒப்படைக்கவுள்ள நிலையில் இந்த வழக்கை அஸ்ரா கார்க் வசம் ஒப்படைக்க வேண்டும் என்பதே பலரது வேண்டுகோளாக உள்ளது. அப்போது உண்மையியல் பொள்ளாச்சி பாலியல் வழக்கில் என்ன நடந்தது? இதன் பின்னணியில் யார் உள்ளார்கள்? அரசியல் தலையீடு உள்ளதா? என பல உண்மைகள் வெளிவரும். வழக்கின் விசாரணை நேர்மையாக நடக்க அஸ்ரா கார்க் வசம் இந்த வழக்கு ஒப்படைக்கப்படுமா? என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம்.

மேலும் படிக்க