• Download mobile app
05 Dec 2025, FridayEdition - 3586
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பொள்ளாச்சி அருகே மலைவாழ் மக்கள் குடியிருப்பு பகுதியில் புகுந்த ஒற்றை காட்டு யானை

December 7, 2022 தண்டோரா குழு

ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி வனச்சரகம் ஆழியார்,பட்டர்பிளை பார்க், நவமலை,கவி அருவி,சின்னார் பதி மலைவாழ் மக்கள் பகுதிகளில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கேரளாவில் இருந்து இடம் பெயர்ந்த ஒற்றைக் காட்டு யானை நடமாட்டம் இருந்தது.வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் காட்டு யானையை அடர் வனப்பகுதிக்கு விரட்டினர்.

இந்நிலையில் கடந்த சில தினங்களாக ஒற்றைக் காட்டு யானை காட்டூர் கால்வாய் வழியாக பட்டர்பிளை பார்க்க அருகில் முகாமிட்ட இருந்தது.நேற்று மாலை வனப்பகுதி விட்டு வெளியே வந்த ஒற்றைக் காட்டு யானை மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதியில் நடமாடியது. வனத்துறையினர் யானை மலைவாழ் மக்கள் குடியிருப்பு பகுதிக்கு வராமல் தடுக்க சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர்.

மேலும் படிக்க