• Download mobile app
02 Jul 2025, WednesdayEdition - 3430
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பொள்ளாச்சி அருகே தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட 20 வீடுகள் – 2 வயது குழந்தை மாயம்

August 10, 2019 தண்டோரா குழு

பொள்ளாச்சி அருகே கனமழை சர்க்கார் பதி மலைவாழ் மக்கள் கிராமத்தில் 20 வீடுகள் தண்ணீரில் அடித்து செல்லப் படனர் 2 வயது குழந்தை மாயம் படுகாயங்களுடன் 5 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள பொள்ளாச்சி வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இரண்டு நாட்களாக வால்பாறை ஆழியார் உள்ளிட்ட மலைப் பிரதேசங்களில் கனமழை பெய்து வருகிறது அங்குள்ள சிற்றோடைகள் இல் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது மழை காரணமாக இன்று கோவை மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க மாவட்ட ஆட்சித்தலைவர் ராசாமணி உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் நேற்று இரவு விடிய விடிய கனமழை பெய்தது பொள்ளாச்சி அடுத்த சர்க்கார் பதி அருகே உள்ள காண்டூர் கால்வாயில் இருந்து திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. பலத்த மழை பெய்து கொண்டிருந்ததால் மலைப்பகுதியிலிருந்து ராட்சத பாறை உருண்டு காண்டூர் கால்வாயில் விழுந்து இதன் காரணமாக தண்ணீர் கசிவு ஏற்பட்டு பகுதியை ஒட்டி உள்ள சர்க்கார்பதி மலைவாழ் மக்கள் குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ள நீர் புகுந்தது இதில் 20 வீடுகள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டன. அங்கிருந்த மக்கள் அலறி அடித்தபடி மரக்கிளைகளை பிடித்து தப்பினர் அப்போது குஞ்சப்பன் என்பவரது இரண்டு வயது மகள் சுந்தரி தண்ணீரில் அடித்து செல்லப்பட்டனர்
மேலும் படுகாயமடைந்த குஞ்சப்பன் அவரது மனைவி அழகம்மாள் மகன் கிருஷ்ணன் மற்றும் இடிபாடுகளில் சிக்கிய பாப்பாத்தி , லிங்கசாமி, தனலட் தமி உள்ளிட்டவர்கள் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் இதில் விக்னேஷ் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

வீடுகளை இழந்த மலைவாழ் மக்கள் மின் வாரிய அலுவலகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்
வெள்ள நீரில் அடித்து செல்லப் பட்ட இரண்டு வயது குழந்தை சுந்தரியை அப்பகுதி மக்கள் உதவியுடன் வனத்துறையினர் தேடி வருகின்றனர்.

மேலும் படிக்க