• Download mobile app
12 Nov 2019, TuesdayEdition - 1371
FLASH NEWS
  • என்னுடைய மனசாட்சி மறுக்கிறது! ஆர்.சி.ஈ.பி ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்த பிரதமர் மோடி
  • திருவள்ளுவர் எந்த மதத்தையும் சார்ந்தவர் அல்ல: கி.வீரமணி
  • விருதுநகர் : சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து – உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்..

பொருளாதார நெருக்கடியை திசைதிருப்ப வள்ளுவரை அவமதிக்கிறது பாஜக ஜி.ராமகிருஷ்ணன் குற்றச்சாட்டு

November 7, 2019 தண்டோரா குழு

மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜக வரலாறு காணாத வேலையிண்மை உள்ளிட்ட காரணங்களால் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் இதனை எதிர்கொள்ள முடியாமல் ஆர்எஸ்எஸ் தலைமையிலான சங்பரிவார அமைப்புகளை கொண்டு திசைதிருப்பும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இதன் ஒருபகுதியாகத்தான் இந்துமக்கள் கட்சி வள்ளுவரை அவமதித்து மலிவான விளம்பரத்தை தேடிக்கொண்டிருக்கிறது என கோவை ஜி.ராமகிருஷ்ணன் குற்றம்சாட்டினார்.

நவம்பர் புரட்சிதினத்தையொட்டி உலகெங்கிலும் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் இடதுசாரி இயக்கங்கள் புரட்சிதின கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்ஒருபதியாக கோவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு அலுவலகத்தில் நவம்பர் புரட்சி தின செங்கொடியேற்றுதல் நிகழ்வு வியாழனன்று நடைபெற்றது. மாவட்ட செயலாளர் வி.இராம்மூர்த்தி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் செங்கொடியேற்றிவைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி நவம்பர் புரட்சிதின நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய ஜி.ராமகிருஷ்ணன்,

மனித குல விடுதலைக்கு மார்க்சியமே மாமருந்து என்பதை ரஷ்யபுரட்சி வித்திட்டது. இப்புரட்சி தின நாளை நாடு முழுவதும்
மார்க்சிஸ்ட் கட்சி கொண்டாடி வருகிறது.மத்தியில் அதிகாரத்தில் உள்ள பாசிச பாஜகவை எதிர்த்து மார்க்சிஸ்ட் கட்சி தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறது. இரண்டாவது முறையாக அதிகாரத்தில் அமர்ந்துள்ள பாஜக அரசு மக்கள் பிரச்சினைகளை சிறிதும் தீர்க்கவில்லை. இதன்காரணமாக 50 ஆண்டுகளில் இல்லாத வேலை இழப்பு, பொருளாதார பிரச்சினைகள் தற்போது ஏற்பட்டு உள்ளது. கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு கோடிகோடியாக சலுகையை அள்ளித்தரும் இவர்கள் மக்களின் துன்ப துயரங்கள் குறித்து சிஞ்சிற்றும் கவலைப்படவில்லை. இதன்காரணமாகவே தொழில்நசிவு, வேலையிண்மை போன்ற காரணங்களால் நாடு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. இந்நெருக்கடிகளை எதிர்கொள்ள முடியாத பாஜக அரசு தொடர்ந்து நாடு முழுவதும் திசைதிருப்பல் நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒருபகுதியாகத்தான் தமிழகத்தில் வள்ளுவரை முன்வைத்து அரசியல் திசைதிருப்பல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

ஆர்எஸ்எஸ் சங்பரிவார அமைப்புகளில் ஒன்றான இந்து மக்கள் கட்சி மலிவான விளம்பரத்திற்காக வள்ளுவர் சிலைக்கு காவி உடை போர்த்தி அவமானப்படுத்தி இருக்கின்றார். வள்ளுவரை அவமதித்த அர்ஜூன் சம்பத் மீது சாதாரண வழக்கு போடப்பட்டுள்ளது. இவர்மீது பொது சொத்துக்கு சேதம் விளைவித்த பிரிவில் வழக்கு பதிவு செய்து கடுமையாக தண்டிக்க வேண்டும்.
காந்தியை கொன்ற இவர்களே காந்தியை கொண்டாடுவதும், விவேகானந்தருக்கு காவிஉடை அணிவிப்பதும், பிறப்பால் ஏற்றத்தாழ்வுகளை கூடாது பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற வள்ளுவருக்கு காவிசாயம் பூசி இழிவான செயலில் சங்பரிவார் அமைப்பினர் ஈடுபடுகின்றனர். இவர்களின் நடவடிக்கையை தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்கமாட்டார்கள். மத்திய அரசின் மக்கள் விரோத நடவடிக்கைக்கு எதிரான போராட்டத்தை மார்க்சிஸ்ட் கட்சி தீவிரப்படுத்தும். நவம்பர் புரட்சிதின கொண்டாட்டம் அதற்கு உத்வேகம் அளிக்கும்என்றார்.

முன்னதாக இந்நிகழ்ச்சியில் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், மாநிலக்குழு உறுப்பினர் சி.பத்மநாபன் உள்ளிட்ட கட்சியின் முன்னணி தலைவர்கள் மற்றும் கட்சி ஊழியர்கள் ஏராளமானோர் நவம்பர் புரட்சி தின செங்கொடியேற்றுதல் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

மேலும் படிக்க