• Download mobile app
28 Jan 2022, FridayEdition - 2179
FLASH NEWS
  • 12 டூ 18 வயசுக்கு இனி கோவாக்சின்.. அனுமதி கொடுத்தது மத்திய அரசு!
  • 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் மசோதா மக்களவையில் நிறைவேற்றம்
  • “பாஜகவை விட வேளாண் சட்டங்களை பழனிசாமிதான் அதிகமாக ஆதரித்தார்!” – முதலமைச்சர் ஸ்டாலின்
  • ஏன் இந்தி மொழியை கற்க கூடாது? – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள்
  • 3 வேளாண் சட்டங்களும் வாபஸ் – பிரதமர் மோடி அறிவிப்பு !

பைக்கிங் செய்ய பாலினம் எதற்கு? – 30க்கும் மேற்பட்ட நகரங்களை பைக்கில் சுற்றி வந்த பெண்கள் !

January 13, 2022 பா. ஸ்ருதி

பயணம் செய்ய நம்மில் யாருக்கு தான் பிடிக்காது? பள்ளியில் நண்பர்களுடன் பிக்னிக் பயணம் முதல், குடும்பத்தாருடன் ஒரே வாகனத்தில் கோவில் பயணம் வரை ஒரு இனிய அனுபவமே.லேசான குளிர் காற்று, இளையராஜா பாடல், பறவை சத்தம், ரயிலில் டீ, காபி விற்கும் அண்ணா, பேருந்தில் பக்கத்தில் அமரும் நபர் தூக்கத்தில் நம் மீது சாயமல் இருக்க வேண்டும் என பிரார்த்தனை செய்த நாட்கள் என்று நம்மில் பலரும் நினைத்து சந்தோஷப்படக்கூடிய பயண அனுபவங்கள் உண்டு.

ஒவ்வொரு கால கட்டத்திற்கு ஏற்றவாரு பயணங்கள் மாறிக்கொண்டே இருக்கிறது. நொங்கு வண்டி செய்து ஓட்டிய நாட்கள் முதல், இப்போது மச்சான் கோவா போலாமா? லடாக்குக்கு பைக்கிள் செல்லலாமா? பைக்கிங்(biking) போலாமா? என நம் பயணங்கள் மேற்கொள்ளும் முறை மாறி விட்டது. சம்பாதிக்க சென்ற பயணகாலம் மாறி, இப்பொழுது இளைஞர்கள் மன அமைதி, சாகச பயணம் மேற்கொள்கிறார்கள்.

பைக்கிங் என்றாலே நம் மனதில் தோன்றுவது, அது ஆண்களுக்கான விஷயம். பைக் என்றாலே ஆண்களுக்கான வாகனம் என்று தானே இருக்கிறது?ஏன் பைக் என்பது போக்குவரத்திற்க்கான ஓர் கருவி, அதை ஆண் கையாள்வது போல் பெண் கையாள்வத்தில் என்ன இருக்கிறது. ஆண்கள் ஸ்கூட்டி ஓட்டுவதை சாதாரணமாக பார்க்கும் இந்த சமூகம், ஏன் பெண் பைக் ஓட்டுவதை ஒரு புருவ தூக்கலுடன் பார்க்கிறது?

சினிமா, அரசியல், மருத்துவம், பொறியியல், அறிவியல், நிதி, சட்டம் என பல்வேறு துறைகளில் பெண்கள் உயர்ந்த பதவி வகுத்து வருகிறார்கள்.சில வருடங்களுக்கு முன்னால் வீட்டில் அண்ணன் அல்லது தந்தையின் சைக்கிளை ஓட்ட ஆரம்பித்த அவர்கள் இப்போது விமானிகளாகவும் வளம் வருகிறார்கள்.சமையல், வீட்டு நிர்வாகம் மட்டுமே தெரிந்த பெண்களின் காலம் போய், சரித்திரம் உருவாக்கும் பெண்கள் ஏராளம்.

இருப்பினும், ஓர் சில விஷயங்கள் இந்த சமுதாயம் ஆண்களுக்கு மட்டும் என்ற நெறி உள்ளது. அதில் பைக்கிங்கும் ஒன்று.அந்த நெறியை மாற்றி, ஓர் கருவியை கையாள திறமையிருந்தால் போதும், அதற்க்கு பாலினம் தேவையில்லை, பாலினம் ஒரு தடையில்லை என காட்டும் வகையில், கியர் அப் கிளப்(gear up club) மூலம், முப்பதிற்கும் மேற்பட்ட நகரங்களை பைக்கில் சுற்றிவந்த மாட புறாக்களில் பிரதிக்க்ஷாவும் ஒருவர்.

இனி அவரது பயண அனுபவங்கள் பற்றி கேட்போம்

“நான் பள்ளி பயிலும் போது கியர் பைக் ஓட்ட ஆரம்பித்தேன். என் ஊரில், நான் தான் முதல் பெண் அந்த வயதில் வாகனம் ஓட்ட ஆரம்பித்தது. இவ பைக் ஓட்றா இதுயெல்லாம் எங்க உருப்பட போகுது என்ற வசனம், நான் போகுமிடம் எல்லாம் ஒலித்துக்கொண்டே இருக்கும்.

ஆனால், எனக்கும் எனது பைக்கிற்கும் உண்டான உறவு, உணர்வு, ஒரு தாய் மகள் போன்றது. எந்தவித கவலை, எரிச்சல் இருந்தாலும், பைக்கை ஓட்டிக்கொண்டு ஒரு வலம் வந்தாள் ஆனந்தம், அமைதி, தாய் மடியில் சாய்ந்து கொண்டது போல் நிம்மதி உருவாகும்.

பைக்கை ஓட்டிக்கொண்டு, நீண்ட பயணம் மேற்கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதற்கு, கியர் அப் கிளப் ஒரு வாய்ப்பாக அமைந்தது. வெவ்வேறு கலாச்சாரம், வெவ்வேறு வயது, வெவ்வேறு வாழ்க்கை சூழல் என பலவகை பெண்கள் இந்த கிளப்பின் உறுப்பினர்கள். ஐந்து பெண்களுடன் ஆரம்பித்த பயணம் இப்பொழுது, 150 பெண்களுடன் தொடர்கிறது.

கடந்த மூன்று வருடங்களில் சுமார் முப்பதிற்க்கும் மேற்பட்ட நகரங்களுக்கு பைக்கில் சென்றிருக்கிறோம்.ஒரு குழுவாக பைக்கில் வெளியூர் செல்வது,இந்த சமூக பார்வையில் அது பொறுப்பற்று வாகனத்தை ஓட்டிக்கொண்டு செல்வது அதில் சாகசம் மேற்கொள்வது என்றுதான் பிரதிபலிக்கும்.

ஆனால் பைக்கிங் அப்படிப்பட்ட விஷயமல்ல, இது எந்த பாலினத்திற்கும் பொருந்தும். முறையாக பயிற்சி மேற்கொண்டு, சரியான பாதுகாப்பு அம்சங்களுடன் ஓர் ஒழுங்கை பின்பற்றி ஒருவரின் அமைதிக்காக மேற்கொள்ளும் பயணம்.எனக்கும் பைக் ஓட்ட தெரியும் பார் என்று காண்பிப்பதற்காக இல்லை, இயற்கையும் அந்தப் பயணத்தின் அமைதியையும் ரசித்து நிம்மதி காண்பதற்கான பயணம்.

இந்த சமூகத்தில் ஓர் ஆண் பைக்கிங் செய்தால் ,அது அவனுடைய சந்தோஷத்திற்காக செய்கிறான். அதே ஒரு பெண் பைக்கில் மேற்கொண்டால் அவளை பொறுப்பற்றவள், இது எல்லாம் உனக்கு தேவையா என்று கேட்கிறது. பெண்தானே ஓட்டுகிறாள், நாம் அவள் பைக் அருகில் வேகமாக சென்று பதைபதைக்க வைப்போம் என்று சில ஆண்கள் வருவார்கள்.

எந்தத் துறையில் பெண்கள் கால் பதித்தாலும், சில விஷயங்களை கையாள தேவை இருந்து கொண்டே தான் இருக்கிறது. பாலினம் மற்றும் உடை ஒரு தடை அல்ல. ஒரு இயந்திரத்தை கட்டுப்படுத்த பாலின வேறுபாடு அவசியமற்றது என்று காண்பிக்கும் வகையில் எங்களின் ஒரு பயணத்தை நாங்கள் சேலை அணிந்து கொண்டு மேற்கொண்டோம்.

பைக்கிங்கை நாங்கள் எங்கள் மன நிம்மதி மற்றும் வாழ்க்கை சூழலுக்காக பைக் வசதியாக இருக்கிறது என்று ஓட்டுகிறோம்.இது சகஜமாக பார்ப்பதற்கான விஷயம் தானே தவிர விமர்சிக்கக்கூடிய விஷயமில்லை.
எப்படி சமையலறையிலிருந்து பெண்கள் கல்வி கற்க புரட்சி ஏற்படுத்தி வந்தார்களோ அதேபோன்று பெண்கள் கியர் பைக் ஓட்டுவது ஒரு புரட்சி செய்வது போல் தெரியும். இவ்வாறு செய்யும் பெண்கள் பெண்ணியம் பேசக்கூடியவர்கள் என்று இப்போது இந்த சமுதாயம் சித்தரித்தாலும், பெண்கள் பைக் ஓட்டுவது, அவர்கள் கல்வி பயிலுவது போல் ஒரு சாதாரணமான சம விஷயமாக விரைவில் மாறக்கூடும் என நம்புகிறோம்.”என்று முடித்தார்.

மேலும் படிக்க