• Download mobile app
23 Oct 2025, ThursdayEdition - 3543
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பெரியநாயக்கன் பாளையத்தில் ஆறு கால்களுடன் பிறந்த அதிசிய ஆட்டுக்குட்டி

November 21, 2019

கோவை பெரியநாயக்கன்பாளையம் அடுத்துள்ள ஜல்லி மேட்டு புதூர் பகுதியில் வசிப்பவர் ராமசாமி. இவரது தோட்டத்தில் தேவையாம் பாளையத்தை சேர்ந்த விஜயன் என்பவர் ஆடு வளர்த்து வருகிறார். இவர்களிடம் 120க்கும் மேற்பட்ட ஆடுகள் உள்ளன. இவர் கடந்த 35 வருடங்களுக்கு மேலாக ஆடுகளை வளர்த்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று அவரது ஒரு ஆடு ஆறு கால்களுடன் கூடிய ஆண் குட்டி ஆட்டை ஈன்றுள்ளது. பிறந்த இந்த ஆட்டுக்குட்டிக்கு வயிற்றின் அருகே புதிதாக இரண்டு கால்கள் முளைத்துள்ளன. இந்த ஆடு ஆறு கால்களுடன் நடந்தது. மேலும் நேரில் வந்து ஆய்வு செய்த கால்நடை மருத்துவர் ஆட்டின் உயிருக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லை என்று கூறினார்.

இதுகுறித்து விஜயன் கூறும்போது,

பல வருடங்ளாக ஆடுகள் வளர்த்து வருகிறேன். ஆனால் 6 கால்களுடன் ஆட்டுகுட்டையை தற்போது தான் பார்க்கிறேன். மேலும் இந்த ஆடு நல்லமுறையில் உள்ளது. இது பெரும் அதிசயமாக கருதப்படுகிறது என்று கூறினார். இந்த தகவல் அந்த பகுதியை பரவியது. அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அந்த ஆட்டுக்குட்டியை பார்ப்பதற்கு கூட்டமாக வந்தனர்.

மேலும் படிக்க