• Download mobile app
24 Aug 2019, SaturdayEdition - 1291
FLASH NEWS
  • 10,000 ஊழியர்களை வேலைநீக்கம் செய்ய பார்லே நிறுவனம் முடிவு!
  • சிதம்பரத்துக்கு துணை நின்று உண்மைக்காகப் போராடுவோம்! பிரியங்கா காந்தி ஆதரவு
  • முன்ஜாமின் கோரி உச்சநீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனு தாக்கல்

பெண்கள் மாதவிடாய்க்கான எமோஜிகள் உட்பட புதிதாக 230 எமோஜிகள் !

February 8, 2019 தண்டோரா குழு

வாட்ஸ்அப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் எனச் சமூகவலைதளங்களில் உரையாடுவது தற்போது அதிகரித்துள்ளது. இப்படியான உரையாடல்களில் வார்த்தைகளைவிட எமோஜிகள் (உணர்ச்சி குறியீடுகள்) முக்கிய பங்காற்றி வருகின்றது. இந்த வருடம் 230 புதிய எமோஜிகள் வரவிருக்கின்றன. உலகிலுள்ள அனைத்து மொழிகளையும் அதற்கேற்ற வடிவில் ஒருங்கிணைத்து கணினி மொழி வடிவில் தரும் யூனிகோடு (unicode) நிறுவனம் இந்த எமோஜிகளை வெளியிட உள்ளது.

சேலை கட்டிய பெண், வெங்காயம், சொட்டும் ரத்தம், குறிப்பாக இந்த முறை மாற்றுத்திறனாளிகளுக்கான எமோஜிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. சக்கர நாற்காலி, சக்கர நாற்காலி பயன்படுத்துவோர், காது கேட்காதவர்கள், கண் பார்வை இல்லாதவர்கள், செயற்கை கை, கால் பொருத்தியவர்கள் போன்ற எமொஜிகளும் இதில் இடம் பெற்றுள்ளன. இதுமட்டுமின்றி பெண்கள் மாதவிடாய்க்கான எமோஜிகள் இடம் பெற உள்ளன. சொட்டும் ரத்தம் போல் உருவாக்கப்பட்டுள்ள எமோஜி ரத்தத்தானம் மற்றும் மாதவிடாயையும் குறிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் இது மாதவிடாய் குறித்தான தயக்கத்தை நீக்க உதவும் எனவும் யுனிகோட் கான்சோர்டியம் தெரிவித்துள்ளது. இதில் 59 புதிய எமோஜிகள், 171 ஆண், பெண் மற்றும் முக வேறுபாடுகளுடனாக (skintone) மொத்தம் 230 எமோஜிகளாக உள்ளன.

இத்தகைய எமோஜிகள் புதிதாகவும், வித்தியாசமாகவும் இருப்பதால் பயனாளர்களிடம் வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இவை இந்த வருடம் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க