• Download mobile app
30 Jun 2022, ThursdayEdition - 2332
FLASH NEWS
  • அக்னிபாத் திட்டத்தின்கீழ் இந்திய விமானப்படையில் சேர்வதற்கு ஜூன் 24ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்!
  • தமிழக நிதிநிலை அறிக்கை ஏமாற்றமே – தேமுதிக தலைவர் விஜயகாந்த்
  • 14.40 லட்சம் பேரின் நகைக்கடன்கள் தள்ளுபடி அதிரடி அறிவிப்பு
  • 12 டூ 18 வயசுக்கு இனி கோவாக்சின்.. அனுமதி கொடுத்தது மத்திய அரசு!
  • 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் மசோதா மக்களவையில் நிறைவேற்றம்
  • “பாஜகவை விட வேளாண் சட்டங்களை பழனிசாமிதான் அதிகமாக ஆதரித்தார்!” – முதலமைச்சர் ஸ்டாலின்
  • ஏன் இந்தி மொழியை கற்க கூடாது? – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள்
  • 3 வேளாண் சட்டங்களும் வாபஸ் – பிரதமர் மோடி அறிவிப்பு !

பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி இந்திய ஜனநாயக கட்சியின் சார்பில் கோவையில் ஆர்ப்பாட்டம்

June 22, 2022 தண்டோரா குழு

பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி இந்திய ஜனநாயக கட்சியின் சார்பில் கோவையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பெட்ரோல் டீசல் விலை உயர்வை தடுப்பது, சிலிண்டர் விலை உயர்வைக் கட்டுப்படுத்துவது, ஜிஎஸ்டி வரியை குறைப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய ஜனநாயக கட்சியின் சார்பில் அதன் மாநில இணைப் பொதுச்செயலாளர் லீமா ரோஸ் தலைமையில் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கோவை மாவட்டத்தில் சீரான குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும், மேலும் இளைஞர்களை சீரழிக்கும் ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த லீமா ரோஸ்,

கோவை மாநகராட்சி பகுதிகளில் குண்டும் குழியுமாக உள்ள சாலைகளை விரைந்து செப்பனிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். மேலும் பொது மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் சொத்து வரி உயர்வை உடனடியாக குறைத்திட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கோவை மாநகர மாவட்ட தலைவர் முத்துச்செல்வம், மாவட்ட செயலாளர் ஈஸ்வரன், பொருளாளர் முருகேசன் மற்றும் நீலகிரி மாவட்ட தலைவர் ராஜ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் புதிய உறுப்பினர் சேர்க்கை சீட்டு ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு வழங்கப்பட்டது.

மேலும் படிக்க