• Download mobile app
04 Nov 2025, TuesdayEdition - 3555
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பிளஸ் 1 பொதுத்தேர்வு தேர்ச்சி முடிவுகள் வெளியீடு – கோவை மாவட்டம் முதலிடம்.

May 14, 2024 தண்டோரா குழு

பிளஸ் 1 பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ள நிலையில், மாவட்ட வாரியான தேர்ச்சி விகிதத்தில் 96.02 சதவீதம் பெற்று கோயம்புத்தூர் மாவட்டம் தமிழக அளவில் முதலிடம் பிடித்துள்ளது.

பிளஸ் 1 பொதுத் தேர்வுகள் மார்ச் 4ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை நடைபெற்றது.கோயம்புத்தூர் மாவட்டத்தில் 16,484 ஆண்கள்,19,144 பெண்கள் என மொத்தம் 35,628 மாணவர்கள் இத்தேர்வினை எழுதினர்.இதற்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
இதில் கோயம்புத்தூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை 15,546 ஆண்கள், 18,664 பெண்கள் என மொத்தம் 34,210 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

அதாவது 94.31% ஆண்கள், 97.49 சதவீத பெண்கள் என மொத்தம் கோயம்புத்தூர் மாவட்டத்தின் தேர்ச்சி விகிதம் 96.02 சதவீதமாக, தமிழக அளவில் முதலிடம் பிடித்துள்ளது.அரசு பள்ளிகளுக்கான தேர்ச்சி விகிதத்தில் கோயம்புத்தூர் மாவட்டம் 4வது இடத்தை பிடித்துள்ளது.

மேலும் படிக்க