• Download mobile app
24 Mar 2025, MondayEdition - 3330
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் பள்ளி மாணவர்களால் குப்பை குவிப்பு – தூய்மையை கற்பிப்பது ஆசிரியர்களின் முக்கியப் பொறுப்பு

August 22, 2024 பா.ஸ்ருதி

பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் ஆகஸ்ட் முதல் வாரம் தொடங்கி நடைபெற்று வரும் பள்ளி மண்டல விளையாட்டு போட்டிகள் சமயத்தில், மாணவர்கள் காகிதங்கள், சாக்லேட் மற்றும் பிஸ்கெட் கவர்கள்,பிளாஸ்டிக் குடிநீர் மற்றும் பழச்சாறு பாட்டில்களை ஆங் ஆங்கே வீசி, வளாகத்தை அசுத்தம் செய்கிறார்கள் . இதனால் பல்கலைக்கழக தூய்மை பணியாளர்கள் தினமும் சிரமப்பட்டு இக்குப்பைகளை அகற்ற வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

இதை குறித்து பல்கலைக்கழக தூய்மை பணியாளர் கூறுகையில்,

பல்கலைக்கழக புல்வெளி மற்றும் சாலைகளில் மாணவர்கள் வீசும் குப்பைகளை சுத்தம் செய்வதில் நாங்கள் கடுமையாக உழைக்கிறோம். காலை 8 மணி அளவில் தொடங்கி பல்கலைக்கழக சாலை மற்றும் புல்வெளியை சுத்தம் செய்ய சுமார் இரண்டு மணி நேரம் ஆகிறது. வெயிலின் தாக்கமும் அதிகம்.

இந்நிலையில்,மாணவர்களுக்கு தூய்மையின் முக்கியத்துவத்தை உணர்த்துவது,அவர்களிடம் தகுந்த நடத்தையை வளர்ப்பது ஆசிரியர்களின் பொறுப்பாகும். எனவே பள்ளி மாணவர்களுடன் வரும் ஆசிரியர்கள் அவர்கள் அசுத்தம் செய்யாத்துவாரு பார்த்துக்கொண்டால் நன்றாக இருக்கும்.” என்றார்.

தூய்மையை கடைப்பிடிப்பது சிறுவயதிலிருந்தே ஆரம்பிக்கப்பட வேண்டிய அவசியம் உள்ளது என்பதால், ஆசிரியர்கள் மாணவர்களை தூய்மையான வாழ்க்கை முறைக்கு வழிநடத்த வேண்டியது அவசியம்.

மேலும் படிக்க