• Download mobile app
13 May 2021, ThursdayEdition - 1919
FLASH NEWS
  • 16-வது சட்டப்பேரவையின் சபாநாயகராக அப்பாவு தேர்வு
  • மே 1ஆம் தேதி முதல் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி – மத்திய அரசு அனுமதி
  • ரஷ்யாவின் ‘Sputnik V’ தடுப்பூசிக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது !
  • நடிகர் ரஜினிக்கு தாதாசாகேப் பால்கே விருது அறிவிப்பு
  • அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 60 ஆக உயர்த்தி தமிழக அரசு அறிவிப்பு!
  • 2021 ஆண்டில் 9, 10, 11ஆம் வகுப்பு மாணவ-மாணவிகள் பொதுத்தேர்வு இன்றி தேர்ச்சி – முதலமைச்சர்
  • சசிகலா அ.தி.மு.க கொடியைப் பயன்படுத்துவது சட்டவிரோதம் – அமைச்சர் ஜெயக்குமார்
  • “அடக்குமுறைகளுக்கு அடிபணியமாட்டேன்” – சசிகலா

பறவைகள், விலங்குகள் தாகத்தை தணிக்க தண்ணீர் மண் குவளைகள் இலவசமாக வழங்கும் பணி துவக்கம்

April 21, 2021 தண்டோரா குழு

கோடை வெயிலில் பறவைகள், விலங்குகள் தாகத்தை தணிக்க தண்ணீர் மண் குவளைகள் இலவசமாக வழங்கும் பணி கோவையில் தொடங்கி உள்ளது.

கோடை வெயில் கோவை உள்பட தமிழகம் முழுவதும் கோடை வெயில் வாட்டி வதைக்க தொடங்கி உள்ளது.வெயிலின் கொடுமையில் இருந்து தப்பிக்க தர்பூசணி, இளநீர், பழச்சாறு உள்பட உடலுக்கு குளிர்ச்சியூட்டும் பொருட்களை பொதுமக்கள் நாட தொடங்கி உள்ளனர்.வெயில் காலத்தில் உடல் களைப்பு, உஷ்ணம் ஏற்படாமல் இருக்க சராசரியாக 4 முதல் 5 லிட்டர் தண்ணீரை மனிதன் அன்றாடம் அருந்த வேண்டும் என்பது டாக்டர்களின் பொதுவான அறிவுரையாக இருந்து வருகிறது.

விலங்குகளை பொறுத்தவரையில் நாய்கள் அன்றாடம் 2 லிட்டர் தண்ணீரும், பூனைகள் 30 மில்லி லிட்டர் தண்ணீரும் (பூனைகள் பாலை அதிகம் விரும்பும், தண்ணீரை விரும்பாது), பறவைகளை பொருத்தவரையில் காட்டுப் பறவைகள் 400 மில்லி லிட்டர் முதல் 1 லிட்டர் தண்ணீரும், வீட்டு பறவைகள் 300 முதல் 500 மில்லி லிட்டர் தண்ணீரும் பருக வேண்டும் என்று கால்நடைகள் மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

கோடைகாலத்தில் மனிதர்களை போன்று விலங்குகளும், பறவைகளும் வெயிலால் அதிகம் களைப்படைகின்றன. அவைகள் தண்ணீருக்காக அலைய வேண்டி உள்ளது. நவீன உலகின் வளர்ச்சி, கணினி மயமான மனித வாழ்க்கையால் விலங்குகள், பறவைகள் போன்ற உயிரினங்களை பராமரிக்கும் நடவடிக்கைகள் குறைந்து, மாறாக அவைகள் மக்களால் விரட்டியடிக்கப்படும் நிலைமையே இன்று சமூகத்தில் அதிகம் அரங்கேறி வருகின்றன.

இத்தகைய சூழலில் பறவைகளுக்கும், விலங்குகளுக்கும் கோடைகாலத்தில் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், வன உயிர் மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை -WNCT என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம், தண்ணீர் குவளைகள் வழங்கும் பணியை தொடங்கியது.

இது குறித்து அதன் நிர்வாகி சிராஜ்தீன் கூறுகையில்,

வெப்பம், அனைத்து உயிர்களையுமே தாக்கக்கூடியது.அதையுணர்ந்து நாம் நமக்குத் தேவையான தற்காப்புகளைச் செய்துகொள்கிறோம்.ஆனால்,விலங்குகளுக்குத் தேவைப்படும் அளவுக்குப் போதுமான வாழிடத்தையோ வளங்களையோ நாம் விட்டுவைக்கவில்லை.அதனால்,அவை பிழைத்திருக்கத் தேவையான சிறுசிறு உதவிகளைச் செய்ய மனிதர்கள் கடமைப்பட்டுள்ளோம்.

கோடை விடுமுறை என்றால் நம்மில் பலர் பகலில் வீட்டைவிட்டுக்கூட வெளியே வர மாட்டோம். அந்த அளவுக்குக் கோடையின் தாக்கம் இருக்கும்.காலநிலை மாற்றத்தால் தற்போது வருடா வருடம் அந்தக் கோடையின் வீரியம் அதிகரித்துக் கொண்டே போவதும் விளைவுகளை மோசமாக்குகிறது. அவ்வளவு ஏன், அதிகப்படியான வெப்பத்தாலும் தண்ணீர் தாகத்தாலும் சில நேரங்களில் உயிரிழப்புகள்கூட நடக்கிறது.

வெயிலின் தாக்கம் இந்தமுறையும் அதிகமாக உள்ளது.மனிதர்களால்கூடத் தாங்க முடியாத வெப்பம் சின்னஞ்சிறு பறவைகளை மட்டும் எப்படி விட்டுவைக்கும்? ஆம், விட்டுவைப்பதில்லை.இந்த வெயிலின் தாக்கம் பறவைகள், வனவிலங்குகளின் உயிரிழப்புகளுக்கும் காரணமாகிறது.
பறவைகள் தண்ணீர் அருந்துவதற்கும் , குளிப்பதற்கு , ஏற்றது போல் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி மொட்டை மாடியில் வையுங்கள் என்றார்.

மேலும் படிக்க