• Download mobile app
19 Apr 2024, FridayEdition - 2991
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பசுமை தமிழ்நாடு கொள்கைக்காக எச்.டி. எப்.சி. வங்கி சார்பில் மாபெரும் மரம் நடும் விழா

December 16, 2023 தண்டோரா குழு

பசுமை தமிழ்நாடு கொள்கைக்காக எச்.டி. எப்.சி. வங்கி சார்பில் இன்று மாபெரும் மரம் நடும் விழா நடைபெற்றது. தமிழ்நாட்டில் கோவை, மதுரை மற்றும் சென்னை ஆகிய 3 இடங்களில் மொத்தம் 75,000 மரக்கன்றுகளை நடுவதை நோக்கமாக கொண்டு இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

டிசம்பர் 16 -ந் தேதி கோவை எல்காட்டில் 10,000 மரங்கள் நடும் பணியுடன் திட்டத்தின் தொடக்க விழாவும் நடைபெற்றது. மேலும் இந்த இடத்தில் மொத்தம் 25,000 மரக்கன்றுகள் நட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எல்காட் மூன்று திட்ட இடங்களுக்கும் நிலத்தை வழங்கி ஆதரவை வழங்குகிறது.

இந்த பசுமைப்பணிக்காக பார்ட்னராக ரவுண்ட் டேபிள் இந்தியா மற்றும் ஹோம் டு ஹோப் உடன் இணைந்து கோயம்புத்தூர் ரவுண்ட் டேபிள் ஸ்பார்க் 323 மற்றும் கோயம்புத்தூர் ஸ்மார்ட் சிட்டியின் ரோட்டரி கிளப் ஆகியவற்றுடன் இணைந்து செயல்படுத்த உள்ளது. 3 இடங்களில் பசுமைதோட்டம் கம்யூனிட்ரீ மூலம் செயல்படுத்தப்படுகிறது.

தொலைநோக்குப் பார்வையில் செயல்படுத்தப்பட உள்ள இந்த திட்டத்தில் தோட்ட முறையைப் பயன்படுத்தி மரச் சூழலை நிறுவுதல், இழந்த பல்லுயிர்ப் பெருக்கத்தை மீண்டும் கொண்டு வருதல், நகர்ப்புற வனச் சூழலைப் பாதுகாத்தல் மற்றும் அறிமுகப்படுத்துதல் ஆகும்.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கோவை மாநகர காவல் துறை ஆணையாளர் வி.பாலகிருஷ்ணன் பங்கேற்றார்.மேலும்,கவுரவ விருந்தினராக தமிழ்நாடு,எஸ்.வி.பி.,மாநில தலைவர் கேசவன் ரங்காச்சாரி, மற்றும் எல்காட், நிர்வாக அதிகாரி,தனலட்சுமி, திட்ட ஒருங்கிணைப்பாளர்,ரோட்டேரியன் மணீஷ் வியாஸ், ஹெச்ஓஹெச், தலைவர் – பகுதி 7, பங்கஜ் பாய்யா, கோயம்புத்தூர் ரவுண்ட் டேபிள் ஸ்பார்க் 323, தலைவர் பாவுக் பைட், கோயம்புத்தூர் வட்ட 323, திட்ட ஒருங்கிணைப்பாளர் கோகுல்ராஜ், என்.ஜி.ஓ. ஒருங்கிணைப்பாளர் மற்றும் திட்ட பங்குதாரர் கௌசிக், உதவி ஆளுநர் ஆர்ஐடி 3201 வெங்கட், தலைவர், ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் ஸ்மார்ட் சிட்டி, டாக்டர் ரோகினி ஷர்மா ஆகியோர் கலந்து கொண்டனர்.

சமூக நலம் சார்ந்த எச்டிஎப்சி வங்கி பசுமை திட்டத்துக்கான ஏற்பாடுகளை செய்துள்ளது. இந்த வங்கி கிராமப்புற சமூகங்க மக்களுக்கு அதிக உதவிகளை செய்து வருகிறது. விவசாயம் மற்றும் வேலை வாய்ப்பு தொடர்பான பயிற்சிகளை வழங்குகிறது. புவனேஷ்வரில், இந்த வங்கியின் பயிற்சி மையம் பல்வேறு துறைகளில் 1,272 இளைஞர்களுக்கு திறன் மேம்பாடு அளித்து வருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, ஏற்கனவே 1.24 லட்சம் தனிநபர்களுக்கு உதவி செய்துள்ளது மேலும் 7.65 லட்சம் பெண்களுக்கு தொழில் தொடங்குவதற்கும் வேலைவாய்ப்புக்கும் உதவி வாழ்வாதாரத்தை பெருக்க உதவி உள்ளது. 27 மாநிலங்களில் இந்த வங்கி நிர்வாகம் நிதி உதவிக்கான நோக்கமாக கொண்டு செயல்படுகிறது. 96 லட்சத்திற்கும் அதிகமான குடும்பங்களுக்கு நிதி சார்ந்த உதவி அளித்து நிலையான சமூக வளர்ச்சியில் கவனம் செலுத்துகிறது.

விழாவில் எல்காட், நிர்வாக அதிகாரி, தனலட்சுமி பேசும் போது :-

எல்காட் நிறுவனம் தமிழகத்தில் 8 இடங்களில் உள்ளது. அதில் 1 லட்சம் மரக்கன்றுகளை நடுவதற்காக திட்டமிட்டுள்ளோம். அதன் முதற்கட்டமாக இன்று இங்கு 10,000 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது. விரைவில் 15,000 மரக்கன்றுகள் நடப்பட உள்ளது. எல்காட் மற்றும் டைடல் பார்க் மூலம் 25,000 நபர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது. மேலும் எல்காட் விரிவுபடுத்தப்பட்டு வருகின்றது இதன் மூலம் மேலும் 25,000 நபர்களுக்கு மேல் வேலை வாய்ப்பு கிடைக்கவுள்ளது. இதன் மூலம் கோவையின் பொருளாதாரமும், வேலை வாய்ப்பும் மேம்படும் என்று பேசினார்.

இந்த நிகழ்வில் பாதாம்,புங்கை, மகாகனி,ரோஸ்வுட், வேங்கை, இலுப்பை, நீர்மருது, பூவரசு, புலா மற்றும் வாகை ஆகிய மரக்கன்றுகள் நடப்பட்டது.

மேலும் படிக்க