October 17, 2020
தண்டோரா குழு
நீட் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சியடைய, மாணவர்கள் மேல்நிலை பள்ளி துவக்கதிலிருந்தே தங்களை தயார் செய்தால் உறுதியாக சாதிக்க முடியும் என கோவையில் நீட் தேர்வில் 700 மதிப்பெண்கள் பெற்ற மாணவி தெரிவித்துள்ளார்.
கோவை பீளமேடு பகுதியை சேர்ந்தவர் மாணவி தங்கம்.தனியார் பள்ளியில் பயின்று வந்த இவர்,அண்மையில் வெளியான நீட் தேர்வில் 720க்கு 700 மதிப்பெண்கள் பெற்று சாதனை புரிந்துள்ளார்.இந்நிலையில் பீளமேடு பகுதியில் உள்ள ஆகாஷ் நீட் தேர்வு பயிற்சி மையத்தில் இவருக்கான பாராட்டு விழா நடைபெற்றது. மையத்தின் இயக்குனர் நரேஷ் தலைமையில் நடைபெற்ற இதில்,இதே பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று நீட் தேர்வில் அதிக மதிப்பெண்கள் கிஷன், அவனிஷ், வைபவ் மற்றும் வசந்த் ஆகிய மாணவர்களுக்கும் ஆகாஷ் அகாடமி சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.
அகில இந்திய அளவில் 91 வது இடம் பிடித்த கோவை மாணவி தங்கம் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
நீட் கஷ்டமான தேர்வு இல்லை. எனவும், மருத்துவம் பயில விரும்பும் மாணவ,மாணவிகள் தங்களை இந்த தேர்வுக்கென தயார் படுத்தினால் தேர்வில் எளிதாக வெற்றி பெற முடியும் என தெரிவித்தார். மேலும்இணைதளத்தில் நிறைய பாடக்குறிப்புகள் உள்ளன. அதனை வைத்து படித்தாலே நிறைய மதிப்பெண்கள் எடுக்க முடியும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.