• Download mobile app
21 Nov 2025, FridayEdition - 3572
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நான் சொன்னது சரித்திர உண்மை எனது நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை – கமல்

May 15, 2019 தண்டோரா குழு

நான் சொன்னது சரித்திர உண்மை எனது நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என கமல்ஹாசன் பேசியுள்ளார்.

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்ற சர்ச்சை கருத்துக்கு பிறகு திருப்பரங்குன்றம் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர்,

அநீதி எங்கு நடந்தாலும் அதை தட்டிக்கேட்பேன்.சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என நான் கூறியது சரித்திர உண்மை.கோட்ஸே குறித்த எனது நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை.எனது பேச்சை முழுமையாக புரிந்துகொள்ளவில்லை, நான் யாரையும் சண்டைக்கு இழுக்கவில்லை.யாரையும் புண்படுத்தும் வகையில் நான் பேசுவதில்லை. ஆனால் சரித்திர உண்மையை பேசினால் புண்ணாகும் என்றால் அதை ஆற்ற வேண்டும்.

உண்மை கொஞ்சம் கசக்கும். ஆனால் கசப்பு மருந்தாகும்.மதச் செருக்கு , சாதிச் செருக்கு எல்லாம் நிற்காது ; நான் சொன்னது சரித்திர உண்மை. இந்த அரசு வீழும். வீழ்த்தப்பட வேண்டும். வீழ்த்துவோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் படிக்க