• Download mobile app
31 Mar 2023, FridayEdition - 2606
FLASH NEWS
  • அதிமுக பொதுக்குழு வழக்கு : உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு – ஓ.பி.எஸ் அறிவிப்பு
  • தமிழகத்தில் 10 முதல் 11 நாட்கள் வரை நிலக்கரி கையிருப்பில் உள்ளது-அமைச்சர் செந்தில் பாலாஜி
  • அக்னிபாத் திட்டத்தின்கீழ் இந்திய விமானப்படையில் சேர்வதற்கு ஜூன் 24ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்!
  • தமிழக நிதிநிலை அறிக்கை ஏமாற்றமே – தேமுதிக தலைவர் விஜயகாந்த்
  • 14.40 லட்சம் பேரின் நகைக்கடன்கள் தள்ளுபடி அதிரடி அறிவிப்பு
  • 12 டூ 18 வயசுக்கு இனி கோவாக்சின்.. அனுமதி கொடுத்தது மத்திய அரசு!
  • 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் மசோதா மக்களவையில் நிறைவேற்றம்
  • “பாஜகவை விட வேளாண் சட்டங்களை பழனிசாமிதான் அதிகமாக ஆதரித்தார்!” – முதலமைச்சர் ஸ்டாலின்
  • ஏன் இந்தி மொழியை கற்க கூடாது? – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள்
  • 3 வேளாண் சட்டங்களும் வாபஸ் – பிரதமர் மோடி அறிவிப்பு !

‘நாடாளுமன்றத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெறுவோம்’ -கோவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

March 11, 2023 தண்டோரா குழு

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தார்.பின்னர் கோவை சின்னியம்பாளையத்தில் ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக சார்பில் அதிமுக, மய்யம், தேமுதிக, அமுமுக உள்ளிட்ட பல்வேறு மாற்று கட்சியினர் 10 ஆயிரம் பேர் திமுகவில் இணையும் விழா தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.

இதில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. செல்வராஜ் அதிகார பூர்வமாக தனது ஆதரவாளர்களுடன் இன்று திமுகவில் இணைந்தார். அதே போல் பல்வேறு கட்சிகளின் முக்கிய பிரமுகர்கள் திமுகவில் இணைந்தனர்.

விழாவில் அமைச்சர் செந்தில்பாலாஜி பேசியதாவது:

வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலில் 40க்கு 40ம் வெற்றி பெறுவோம்.கோவையில் இருக்கக்கூடிய 10 சட்டமன்ற தொகுதிகளும் நாம் வெல்வோம். அதற்கு அனைவரும் இணைந்து பணியாற்றிட வேண்டும். இந்தியாவின் வழிகாட்டியாக திகழ்ந்து கொண்டிருக்கிற நாளை இந்திய தேசத்தின்பாரத பிரதமராக பொறுப்பேற்கக்கூடிய நம் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

இவ்வாறு அவர் பேசினார்.

இவ்விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

நாட்டில் இன்று எத்தனையோ கட்சிகள் இருக்கிறது வரலாற்றில் இடம்பெற்றிருக்கக் கூடிய கட்சிகளும் இருக்கிறது. அதே நேரத்தில் திடீர் திடீரென தோன்றக்கூடிய கட்சிகளையும் நாம் பார்க்கிறோம். அப்படி தோன்றக்கூடிய கட்சிகள் எல்லாம் தோன்றிய அடுத்த நாளே, ஏன் தோன்றிய அன்றைக்கு, தோன்றுவதற்கு முன்பே, நான் தான் அடுத்த முதலமைச்சர். நாங்க தான் ஆட்சிக்கு வருவோம் என்று சொல்லி அந்த உணர்வோடு தொடங்கப்படக்கூடிய கட்சிகள் எல்லாம் இன்றைக்கு எந்த நிலைமைக்கு போய்க் கொண்டிருக்கிறது.

அனாதையாக அழைந்து கொண்டிருக்கிற காட்சிகளை நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். ஆனால் திமுக அப்படி அல்ல. அதை தான் அண்ணா தொடங்குகின்ற போதே சொன்னார். ஆட்சிக்காக மட்டும் இல்லை நீங்கள் ஒன்றை மறந்து விடக்கூடாது.2006ல் மீண்டும் 5 வது முறையாக நமது தலைவர் கலைஞர் அவர்கள் தமிழ்நாட்டு முதல்வராக பொறுப்பேற்கிறார். அதற்குப் பிறகு பத்து வருஷம் இல்லை. 2021ல் ஆறாவது முறையாக எனது தலைமையில் திமுக ஆட்சியை நடைபெறுகிறது.எதற்காக சொல்கிறோம் என்றால் இந்த நாட்டிலே நம்மைப் போல் வெற்றி பெற்று இருக்க கூடிய கட்சி ஒன்று கிடையாது. நம்ம போல் தோற்றிருக்கக்கூடிய கட்சி ஒன்று கிடையாது.இரண்டிலும் நமக்கு தான் பெருமை. ஆக வெற்றி தோல்வியைப் பற்றி கவலைப்படாமல் பாடுபடக்கூடிய கட்சி திராவிட முன்னேற்றக் கழகம். அந்த திராவிட முன்னேற்ற கழகம் இன்றைக்கு ஆறாவது முறையாக மக்களுடைய அன்பைப் பெற்று ஆதரவை பெற்று ஆச்சி பொறுப்பேற்க்கிறது.

எங்கள் மீது இயக்கத்தின் மீது நம்பிக்கை வைத்து உறுதிமொழிகள் காப்பாற்றப்பட்டு கொண்டிருக்கிறது. தேர்தல் நேரத்தில் சொன்னோம், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இதெல்லாம் செய்வோம் என்று. கலைஞர் எப்படி தேர்தல் அறிக்கையை வெளியிடுகிற போகிறது திருக்குறள் போன்று இரண்டு வரியை சொல்வார்.அது சொன்னதை செய்வோம் செய்வதை சொல்வோம். இன்றைக்கு கலைஞரின் வழியில் நடைபெறக்கூடிய திராவிட மாடல் சொல்வது செய்வது மட்டுமல்ல, சொல்லாததையும் செய்யக்கூடிய ஆட்சியாக திமுக உள்ளது. பஸ்ல பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் இது சொன்னது. கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய மக்களுக்கு வந்தவுடன் நாங்கள் ரூ.4000 தருவோம் என்றும் சொன்னது.

சொல்லாதது பள்ளிக்கூடங்களில் இருந்து கல்லூரிகளுக்கு போகக்கூடிய மாணவிகள் அவர்களுக்கு உதவி தொகையாக மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். அதற்காக புதுமைப்பெண் மீது திட்டம். இது சொல்லாதது. ஆக எப்படி சொன்னது மட்டும் இல்ல சொல்லாததையும் செய்து கொண்டிருக்கிற ஆட்சி இன்றைக்கு நடக்கிறதா? இல்லையா?. ஈரோடு கிழக்கு தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் ஏற்கனவே நடந்த முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 10 ஆயிரத்துக்கு குறைவான வாக்கு வித்தியாசத்தில் தான் நாம் வெற்றி பெற்றிருக்கிறோம். தற்போது நமது கூட்டணி சார்பில் கிட்டத்தட்ட 66,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைச்சிருக்கோமா? இல்லையா? ஏற்கனவே 10 ஆயிரத்துக்கு கீழே தற்போது 66 ஆயிரத்திற்கும் மேல எவ்வளவு பெரிய வெற்றி. என்ன காரணம், இந்த ஆட்சியின் மீது மக்களுக்கு ஏற்பட்ட நம்பிக்கை. நாடாளுமன்றத் தேர்தலில் இதே போன்ற வெற்றியை நாம் பெற்றாக வேண்டும். அதற்கு உறுதி அளிக்கக்கூடிய நிகழ்ச்சியாக தான் இந்த நிகழ்ச்சி அமைந்திருக்கிறது.

திட்டங்கள் தொடர சாதனைகள் மலர, இந்த ஆட்சி தொடர்ந்து நாடாளுமன்றத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெறுவதற்கு நீங்கள் எல்லாம் இன்றைக்கு களம் இறக்க வேண்டும். ஏனென்றால் இன்றைக்கு பணத்தை பயன்படுத்தி, ஜாதியை பயன்படுத்தி, கலவரத்தை ஏற்படுத்தலாம். குழப்பத்தை ஏற்படுத்தலாம் அதன் மூலமாக இந்த ஆட்சியை கலைத்து விடலாம் என கனவு கொண்டிருக்கிறார்கள். அதற்கெல்லாம் கவலைப்படாமல் நம்முடைய இலக்கை நாடாளுமன்றத் தேர்தல் காட்ட வேண்டும். கடந்த முறை நாடாளுமன்றத் தேர்தல் ஒரே ஒரு இடத்தை தான் இழந்தோம். இப்ப வருகிற நாடாளுமன்றத் தேர்தல் அந்த இடத்தையும் இழக்கக்கூடாது 40க்கு 40 கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும். நாடும் நமதே நாளையும் நமதே. தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய மதசார்பற்ற கூட்டணி வெற்றி மட்டுமல்ல இந்தியா முழுமையும் இருக்கக்கூடிய அனைத்து மாநிலங்களிலும் நாம் மிகப்பெரிய வெற்றியை பெறுவதற்கான முயற்சியில் ஈடு பட போவதற்கு பக்கபலமாக அமையும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இவ்விழாவில் அமைச்சர்கள் முத்துசாமி, வெள்ளகோவில் சாமிநாதன், காந்தி, கயல்விழி செல்வராஜ், பொள்ளாச்சி எம்பி சண்முக சுந்தரம், மேயர் கல்பனா ஆனந்தகுமார், முன்னாள் அமைச்சர்கள் பொங்கலூர் பழனிசாமி, மு. கண்ணப்பன், முன்னாள் எம்பி நாகராஜ், திமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க