• Download mobile app
31 Aug 2025, SundayEdition - 3490
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நவீன இரு சக்கர வாகன ஹேண்டில்பார் கட்டுப்பாட்டு கூறுகளுக்கான மூலோபாய தொழில் நுட்ப கூட்டணி – பிரிகோல் லிமிடெட் மற்றும் டோமினோ எஸ். ஆர். எல். நிறுவனங்கள் கூட்டாண்மை

July 16, 2025 தண்டோரா குழு

ஒரு முன்னணி ஆட்டோ மொடிவ் தொழில் நுட்ப வழங்குநரான பிரிகோல் லிமிடெட், மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டு அமைப்புகளில் ஒரு உலகளாவிய முன்னணி நிறுவனமான இத்தாலியை தளமாக கொண்ட டோமினோ எஸ். ஆர். எல். நிறுவனத்துடன் ஒரு தொழில் நுட்ப உரிம ஒப்பந்தத்தினுள் நுழைந்துள்ளது.

பிரிகோல் நிறுவனத்தின்க ண்டுபிடிப்பு-சார்ந்த வளர்ச்சி உத்தியில் ஒரு முக்கியமான படியைக்குறிக்கின்ற இந்த கூட்டாண்மை இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசியா முழுவதும் த்ரோட்டில்கள், சுவிட்ச்கள் மற்றும் தொடர்புடைய தயாரிப்புகள் போன்ற மேம்பட்ட ஹேண்டில் பார்கண்ட்ரோல் தொழில்நுட்பங்களை விரிவுபடுத்த நோக்கம் கொண்டுள்ளது.

பிராந்தியத்திற்கு ஏற்றவாறு புதிய தலைமுறை தயாரிப்புகளை உருவாக்கி அளவிடுவதற்கு, குறிப்பிட்ட தயாரிப்புகளுக்காக டொமினோ நிறுவனத்தின் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டு அமைப்புகளில் உள்ள நிபுணத்துவத்தையும் மற்றும் பிரிகோல் நிறுவனத்தின் வலுவான உற்பத்தி மற்றும் வாடிக்கையாளர் வலையமைப்பையும் இந்த கூட்டாண்மை பயன்படுத்தும். கண்டுபிடிப்பு, செயல்பாட்டு சிறப்பு மற்றும் உலகளாவிய கூட்டாண்மைகள் மூலம் நிலையான வளர்ச்சியை ஊக்குவிக்கிற இந்த ஒத்துழைப்பு, அதிநவீன தொழில்நுட்பத்தை உள்ளூர் மயமாக்கப்பட் டசெயலாக்கத்துடன் இணைப்பதன் மூலம், ஒரு முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்ட தொழில்நுட்ப தீர்வுகள் வழங்குநராக பரிணமிக்க பிரிகோல் நிறுவனத்தின் மூலோபாய தொலை நோக்கை வலுப்படுத்துகிறது.

மேலும், இந்த கூட்டாண்மை ஐரோப்பிய மற்றும் அமெரிக்க சந்தைகளில் டொமினோ நிறுவனத்தின் வலுவானசந்தைக்கு பிந்தைய இருப்பைப்பயன்படுத்துவது உட்பட ஒருங்கிணைந்த ஒத்துழைப்புக்கான ஒத்திசைவை செயல்படுத்துகிறது.

இந்த கூட்டு முயற்சி குறித்து பேசிய பிரிகோல் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் விக்ரம்மோகன் கூறுகையில்,

” டோமினோ எஸ்.ஆர்.எல். நிறுவனத்துடன் இணைந்திருப்பது உலகத்தரமான தொழில்நுட்ப தீர்வுகளை வழங்கும் எங்கள் பயணத்தில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை குறிக்கிறது. இரு-சக்கர கட்டுப்பாட்டு அமைப்புகளில் அவர்களின் கண்டுபிடிப்பு மரபும், எங்கள் ஆழமான சந்தை புரிதல் மற்றும் உற்பத்தி வலிமையும் நிறைவாக பூர்த்தி செய்கிறது.

இந்த ஒத்துழைப்பு எங்கள் வாடிக்கையாளர்களுக்கு அதிக மதிப்பை வழங்குவதற்கும் புதிய தயாரிப்பு வழங்கல்களில் எங்கள் வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்குமான ஒரு பகிரப்பட்ட உறுதிப்பாடாக இருக்கிறது.” என்று தெரிவித்தார்.”

மேலும் படிக்க