• Download mobile app
31 Aug 2025, SundayEdition - 3490
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

த்ரீ டாட்ஸ் அண்ட் ஏ டேஷ் என்னும் தலைப்பில் நடைபெற்ற கோவை ஸ்டேன்ஸ் சி.பி.எஸ்.இ. பள்ளியின் ஆண்டு விழா

July 27, 2025 தண்டோரா குழு

கோவையில் ஸ்டேன்ஸ் சி.பி.எஸ்.இ. பள்ளியின் ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் வெகு விமரிசையாக நடைபெற்றது.

கோவையில் நூற்றாண்டுகளை கடந்த பள்ளியாக அவினாசி சாலையில் உள்ள ஸ்டேன்ஸ் பள்ளி செயல்பட்டு வருகின்றது.
பல்வேறு சிறப்புகளை கொண்டுள்ள ஸ்டேன்ஸ் சி.பி.எஸ்.இ. பள்ளியின் ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

(Three Dots And A Dash) த்ரீ டாட்ஸ் அண்ட் ஏ டேஷ் எனும் தலைப்பில் நடைபெற்ற இதில்,ஸ்டேன்ஸ் பள்ளியின் தாளாளர் பிலிப் ஆர்.ஜே. ஃபெளலர் தலைமை தாங்கினார்.முன்னதாக விழாவில் பள்ளியின் முதல்வர் ஐலின் ஜெத்ரோ விழாவிற்கு வந்த அனைவரையும் வரவேற்று பேசினார்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ஸ்டேன்ஸ் பள்ளியில் கடந்த 1953 ஆம் ஆண்டு பயின்ற முன்னாள் மாணவர் ஓய்வு பெற்ற லெப்டினன்ட் ஜெனரல் கிரிஷ் மற்றும் அவரது துணைவியார் ஜோதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய ஓய்வு பெற்ற லெப்டினன்ட் ஜெனரல் கிரீஷ், இந்த பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர் என்பதில் தாம் பெருமிதம் கொள்வதாக கூறிய அவர் கடந்த 1953 ஆம் ஆண்டு முதல் 1961 வரை தாம் பள்ளியில் பயின்றதை நினைவு கூர்ந்தார்.

இந்த பள்ளியில் பயின்ற மாணவர்கள், அவர்களின் மதிப்புகள், பொறுப்புகள், தலைமைத்துவ குணங்கள் மற்றும் சவால்களை எதிர்கொள்ளும் திறன்களை அறிந்து கொள்ளும் வகையில் திறமையான மற்றும் அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள், நிர்வாகப் பணியாளர்கள் இங்கு இருப்பதாக தெரிவித்தார்.

மாணவர்கள் கல்வி பயிலும் போது தாங்கள் பெற்ற திறமைகளை சிறந்த முறையில் பயன்படுத்தி நமது நாட்டின் வளர்ச்சியில் பங்கு பெற வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

தொடர்ந்து நடைபெற்ற விழாவில், ஸ்டேன்ஸ் சி.பி.எஸ்.இ. பள்ளியில் பயின்று சிறந்த மதிப்பெண்கள் மற்றும் விளையாட்டு,கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட போட்டிகளில் மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில்,கருவூலர் டாக்டர். ஜேம்ஸ் ஜே. ஞானதாஸ்,ஐலின் ஜெத்ரோ, முதல்வர் ஸ்டேன்ஸ் CBSE பள்ளி,ஸ்டேன்ஸ் ஆங்கில இந்தியன் உயர்நிலை பள்ளியின் முதல்வர் செலின் வினோதினி, ஸ்டேன்ஸ் பள்ளியின் முதல்வர் (designate) ஜான் ஸ்டீபன், ஸ்டேன்ஸ் ICSE / ISC பள்ளியின் முதல்வர் ஜெனெட் ஜெயப்பிரகாஷ், ஸ்டேன்ஸ் இன்டர்நேஷனல் பள்ளியின் முதல்வர் ஜார்ஜினா எவிட்டா சிமன்ஸ், முதன்மை நிர்வாக அதிகாரி வி.எம்.ஜான் உட்பட பெற்றோர்கள்,முன்னாள் மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க