August 13, 2020
தண்டோரா குழு
தமிழக முதலமைச்சர் மற்றும் தேசியக்கொடியை அவமதித்து வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் நடிகரும், பாஜக நிர்வாகியுமான எஸ்.வி.சேகர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நடிகரும், பாஜக நிர்வாகியுமான எஸ்.வி.சேகர் தமிழக முதலமைச்சரின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும், தேசியக் கொடியை அவமதித்தும் பேசி வீடியோ வெளியிட்டதாக அவர் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டிருந்தது. இந்த விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமி உட்பட அதிமுகவினர் பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் எஸ்.வி சேகர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தேசிய கொடியை மத அடையாளங்களுடன் ஒப்பிட்டு பேசியதாக, அவர்மீது 2 பிரிவுகளின் கீழ் மத்தியக் குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.