• Download mobile app
07 Feb 2023, TuesdayEdition - 2554
FLASH NEWS
  • அதிமுக பொதுக்குழு வழக்கு : உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு – ஓ.பி.எஸ் அறிவிப்பு
  • தமிழகத்தில் 10 முதல் 11 நாட்கள் வரை நிலக்கரி கையிருப்பில் உள்ளது-அமைச்சர் செந்தில் பாலாஜி
  • அக்னிபாத் திட்டத்தின்கீழ் இந்திய விமானப்படையில் சேர்வதற்கு ஜூன் 24ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்!
  • தமிழக நிதிநிலை அறிக்கை ஏமாற்றமே – தேமுதிக தலைவர் விஜயகாந்த்
  • 14.40 லட்சம் பேரின் நகைக்கடன்கள் தள்ளுபடி அதிரடி அறிவிப்பு
  • 12 டூ 18 வயசுக்கு இனி கோவாக்சின்.. அனுமதி கொடுத்தது மத்திய அரசு!
  • 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் மசோதா மக்களவையில் நிறைவேற்றம்
  • “பாஜகவை விட வேளாண் சட்டங்களை பழனிசாமிதான் அதிகமாக ஆதரித்தார்!” – முதலமைச்சர் ஸ்டாலின்
  • ஏன் இந்தி மொழியை கற்க கூடாது? – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள்
  • 3 வேளாண் சட்டங்களும் வாபஸ் – பிரதமர் மோடி அறிவிப்பு !

தீபாவளியையொட்டி சொந்த ஊர் சென்ற தொழிலாளர்களில் 40 சதவீதம் பேர் திரும்பி வரவில்லை

November 9, 2022 தண்டோரா குழு

தென் இந்தியாவின் மான்செஸ்டர் என அழைக்கப்படும் கோவை மாவட்டத்தில் சுமார் 1 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிகமான சிறு குறு, நடுத்தர மற்றும் பெரும் தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

பவுண்டரி, டெக்ஸ்டைல்ஸ், பவர்லூம், வெட் கிரைண்டர்ஸ், பம்புகள், பிளாஸ்டிக் தொழிற்சாலைகள் என சுமார் 60 சதவீதம் தொழிற்சாலைகள் கிராமப்புறங்களிலும், 40 சதவீதம் தொழிற்சாலைகள் நகர்புறங்களிலும் செயல்படுகின்றன. இதில் கிராமப்புறங்களை சுற்றி சுமார் 325 பெரிய தொழில்நிறுவனங்களும், மாநகராட்சி பகுதிகளை சுற்றி சுமார் 100 பெரிய தொழில் நிறுவனங்களும் உள்ளன. கோவையில் உள்ள இத்தொழில் நிறுவனங்களில் சுமார் 5 லட்சம் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

கோவையில் சிறு குறுந்தொழில் முனைவோர்கள் மட்டும் 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் பேர் வரை உள்ளனர். அவர்களது தொழில்நிறுவனங்களில் 1 லட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். குறுந்தொழில்கள் முக்கியமாக ஜாப் ஆர்டர்களை நம்பியே உள்ளனர். ஆட்டோ மொபைல் தொழில் சார்ந்த உதிரிபாகங்கள் தயாரிப்பு, பம்புசெட் உதிரிபாகங்கள் தயாரிக்க தேவைப்படும் பொருட்கள் தயாரிப்பது, ஜவுளி தொழில்துறையில் உள்ள இயந்திரங்களுக்கு தேவையான பொருட்களை தயாரிப்பது உள்ளிட்டவை ஜாப் ஆர்டர்களாக பெற்று தயாரிப்பார்கள்.

அதேபோல் கோவை ராஜா வீதி, பெரியகடை வீதி, இடையர் வீதி, வைசியாள் வீதி, கெம்பட்டி காலனி, செட்டி வீதி, அசோக் நகர், அய்யப்பா நகர், செல்வபுரம், சலீவன் வீதி, காந்திபார்க், சாய்பாபா காலனி, கிராஸ்கட் காலனி உள்ளிட்ட பகுதிகளில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நகைப்பட்டறைகளும், நகை தயாரிப்பு தொழிற்சாலைகளும் உள்ளன. இதில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மறைமுகமாகவும், நேரடியாகவும் பணியாற்றி வருகின்றனர். இதேபோல் கோவை மாவட்டத்தில் ஜவுளி தொழில்நிறுவனங்கள், நூற்பாலைகள், விசைத்தறி கூடங்கள் என ஏராளமான தொழில் நிறுவனங்கள் உள்ளன. இதில் லட்சக்கணக்கான உள்ளூர் மற்றும் பிற மாவட்ட, மாநில தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இதுதவிர ஐ.டி. நிறுவனங்கள், கட்டுமான நிறுவனங்கள், இதர அலுவலகங்கள் என பல ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணி புரிந்து வருகின்றனர். இதில் பணியாற்றி வரும் தொழிலாளர்கள் சுமார் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தீபாவளியையொட்டி சொந்த ஊர் சென்றனர்.

கோவையில் பீகார், ஒடிசா, ஜார்கண்ட், மகாராஷ்டிரா, உத்தர பிரதேசம், குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் வேலை செய்து வருகின்றனர். இவர்களில் பலர் தீபாவளி கொண்டாட சொந்த ஊர் சென்று விட்டனர். கட்டுமானம், ரயில்வே பொருட்கள் உற்பத்தி, இரும்பு நிறுவனங்கள், காஸ்டிங் நிறுவனம், ஏற்றுமதி நிறுவனங்களில் வடமாநில தொழிலாளர்கள் அதிகளவு வேலை செய்து வருகின்றனர். குறிப்பாக கோவை ரயில்களில் 3 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் வெளி மாவட்டங்களுக்கும், வடமாநிலங்களுக்கும் சென்றுள்ளனர்.

இந்நிலையில் தீபாவளிக்காக சொந்த ஊர் சென்ற தொழிலாளர்களில் 60 சதவீதம் பேர் மட்டுமே திரும்ப வந்துள்ளனர். மீதம் உள்ள 40 சதவீதம் பேர் இன்னமும் பணிக்கு வரவில்லை. தொழிலாளர்கள் அதிகளவு விடுப்பு எடுத்துவிட்டதால் சில தொழில் நிறுவனங்கள் தொழிலாளர்கள் வரும் வரை இயக்கத்தை நிறுத்தி வைக்கவும் முடிவு செய்துள்ளது. கோவை மாவட்டத்தில் பெரும்பாலான தொழில்நிறுவனங்கள் ஆட்கள் பற்றாக்குறையால் தடுமாறி வருகின்றனர்.

இதுகுறித்து தொழில் துறையினர் கூறுகையில்,

‘‘கோவை மாவட்டத்தில் பெரும்பாலான உற்பத்தி தொழில் நிறுவனங்களில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் வடமாநிலத்தில் இருந்து வந்து தங்கி வேலை செய்கிறார்கள். இவர்கள் தீபாவளிக்கு சொந்த ஊர் சென்றுவிட்டனர். ஒரு வாரம் கடந்த பின்னர்தான் வருவார்கள். அதே போல் 40 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் தென் மாவட்டங்களை சேர்ந்தவர்கள். அவர்களும் சொந்த ஊர் சென்றுவிட்டனர். இவர்களில் 60 சதவீதம் பேர் திரும்பி வந்துள்ளனர். மீதம் உள்ள 40 சதவீதம் பேர் இன்னமும் வரவில்லை. ஆட்கள் பற்றாக்குறையால் ஜாப் ஆர்டர்கள் உற்பத்தி செய்வதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. புதிய ஆட்கள் அதிக அளவில் பணிக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது,’’ என்றனர்.

மேலும் படிக்க