• Download mobile app
14 Aug 2022, SundayEdition - 2377
FLASH NEWS
  • அக்னிபாத் திட்டத்தின்கீழ் இந்திய விமானப்படையில் சேர்வதற்கு ஜூன் 24ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்!
  • தமிழக நிதிநிலை அறிக்கை ஏமாற்றமே – தேமுதிக தலைவர் விஜயகாந்த்
  • 14.40 லட்சம் பேரின் நகைக்கடன்கள் தள்ளுபடி அதிரடி அறிவிப்பு
  • 12 டூ 18 வயசுக்கு இனி கோவாக்சின்.. அனுமதி கொடுத்தது மத்திய அரசு!
  • 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் மசோதா மக்களவையில் நிறைவேற்றம்
  • “பாஜகவை விட வேளாண் சட்டங்களை பழனிசாமிதான் அதிகமாக ஆதரித்தார்!” – முதலமைச்சர் ஸ்டாலின்
  • ஏன் இந்தி மொழியை கற்க கூடாது? – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள்
  • 3 வேளாண் சட்டங்களும் வாபஸ் – பிரதமர் மோடி அறிவிப்பு !

திருப்பூரில் ஸ்ரீகண்ணன் ஸ்மார்ட் சூப்பர் ஸ்டோர் திறப்பு

June 30, 2022 தண்டோரா குழு

ரிலையன்ஸ் ரிடெய்ல் குழுமத்தின் ஒரு அங்கமான ஸ்ரீ கண்ணன் ஸ்மார்ட் சூப்பர் ஸ்டோர் திருப்பூரில் துவக்கப்பட்டுள்ளது. மிக பிரமாண்டமாக காந்திநகர், அவினாசி பிரதான சாலையில் டாலர்சோன் அருகில் இந்த ஸ்டோர் திறக்கப்பட்டுள்ளது.

திருப்பூரில் இக்குழுமத்தின் சார்பில் துவக்கப்படும் முதல் ஸ்டோர் இதுவாகும். வாடிக்கையாளர்களுக்கு சிறந்த அனுபவத்தை வழங்கும் விதமாக இங்கு ஒரே இடத்தில் மளிகை பொருட்கள், காய்கறிகள் மற்றும் பழங்கள், பால் மற்றும் சமையலறைப்பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள், ஆடைரகங்கள் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் என ஏராளமான பொருட்கள் உள்ளன.இங்குள்ள அனைத்து பொருட்களுக்கும் ஏராளமான சலுகைகள் மற்றும் தள்ளுபடி ஆகியவை வழங்கப்படுகின்றன.
இங்கு ஆண்டு முழுவதும் அனைத்து பொருட்களுக்கும் அதன் விலையில் இருந்து 6 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

மேலும் 1499 ரூபாய்க்கு பொருட்கள் வாங்குபவர்களுக்கு 1 கிலோ சர்க்கரை 9 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. இது உங்களின் மாதாந்திர மளிகை பொருட்கள் வாங்குவதற்கான சிறந்த ஸ்டோராக இருக்கும். மேலும் இங்கு முக்கிய உணவு பொருட்கள் மற்றும் பழங்கள், காய்கறிகள் ஆகியவையும் ஒவ்வொரு நாளும் சலுகை விலையில் விற்பனை செய்யப்பட உள்ளது. வாடிக்கையாளர்கள் தாங்கள் விரும்பும் காய்கறி மற்றும் பழங்களை குறைந்த விலையில் இங்கு வாங்கி செல்லலாம்.

தமிழகத்தை பொறுத்தவரை திருப்பூரில் புதிதாக திறக்கப்படும் ஸ்ரீ கண்ணன் ஸ்மார்ட் ஸ்டோரை தொடர்ந்து ரிலையன்ஸ் ரிடெய்ல் குழுமத்தின் 46 வது ஸ்டோர் இதுவாகும். இங்கு இந்த ஸ்டோர் போதுமான இட வசதியுடன் 14 ஆயிரம் சதுர அடியில் திறக்கப்பட்டுள்ளது. இங்கு வாடிக்கையாளர்களை கவரும் வகையில் ஏராளமான தரமான பொருட்கள் சிறந்த விலையில் உள்ளன. இந்த ஸ்டோர் இப்பகுதி மக்களை வெகுவாக கவர்வதோடு அவர்களின் அன்றாட தேவைகளையும் பூர்த்தி செய்யும்.

மேலும் துவக்க விழா சலுகையாக ஐதராபாத் பிரியாணி பாஸ்மதி அரிசி 1 கிலோ 89 ரூபாய்க்கும், மிஸ்டர் கோல்டு ரிபைன்டு சன்பிளவர் எண்ணை 1 லிட்டர் 179 ரூபாய்க்கும், மில்கிமிஸ்ட் நெய் 1 லிட்டர் 499 ரூபாய்க்கும் மற்றும் ஏராளமான பொருட்கள் 1 வாங்கினால் 1 இலவசம் என்னும் சலுகை விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் படிக்க