கோவை மாவட்டம் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் தேசிய தாழ்த்தப்பட்டோர் நிதி வளர்ச்சிக் கழகம் மற்றும் தேசிய துப்புரவுத் தொழிலாளர் நிதி (ம) வளர்ச்சிக் கழகம் ஆகிய கடன் நிதி உதவி திட்டத்தில் கீழ் 1990- 91 முதல் 2011-12 ஆண்டு வரை கடன் உதவி பெற்ற பயனாளிகள் அசல் தொகையினை செலுத்தினால் வட்டி மற்றும் அபராத வட்டி தள்ளுபடி செய்யப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி தகவல் தெரிவித்துள்ளார்.
தேசிய தாழ்த்தப்பட்டோர் நிதி வளர்ச்சிக் கழகம் மற்றும் தேசிய துப்புரவுத் தொழிலாளர் நிதி (ம) வளர்ச்சிக் கழகம் ஆகிய திட்டங்களில் பெற்ற கடன்தொகையினை ஒரே முறையில் செலுத்தி நேர் செய்யும் திட்டத்தில் கீழ் அசல் தொகையினை செலுத்தும் பயனாளிகளுக்கு வட்டி மற்றும் அபராத வட்டி தள்ளுபடி செய்து கடன் தொகை நிலுவையில்லா சான்று தாட்கோ, மாவட்ட மேலாளர்களால் வழங்கப்படும்.
இத்திட்டம் 31.12.2023 வரை செயல்படுத்தப்படும் எனவும் தாட்கோ மாவட்ட மேலாளர்கள் மேற்படி தெரிவிக்கப்பட்டுள்ளபடி அசல் தொகையினை பயனாளிடமிருந்து வசூல் செய்ய விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.
கோவையில் ராயல்ஓக் ஃபர்னிச்சரின் இரண்டாவது புதிய புதிய ஸ்டோர் திறப்பு !
டிவிஎஸ் மோட்டார் நிறுவனம், ஊர் கேப்ஸ் இணைந்து தமிழ்நாட்டில் 500 மின்சார மூன்று சக்கர வாகனங்களை களமிறங்குகின்றன!
கோவை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் – 45 மனுக்கள் மீது சுமூகமான தீர்வு
கோவையில் அன்னையர் நினைவாக, தாய்மையை போற்றும் விதமாக தாய் – சேய் சிலை திறப்பு
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்