• Download mobile app
31 Mar 2023, FridayEdition - 2606
FLASH NEWS
  • அதிமுக பொதுக்குழு வழக்கு : உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு – ஓ.பி.எஸ் அறிவிப்பு
  • தமிழகத்தில் 10 முதல் 11 நாட்கள் வரை நிலக்கரி கையிருப்பில் உள்ளது-அமைச்சர் செந்தில் பாலாஜி
  • அக்னிபாத் திட்டத்தின்கீழ் இந்திய விமானப்படையில் சேர்வதற்கு ஜூன் 24ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்!
  • தமிழக நிதிநிலை அறிக்கை ஏமாற்றமே – தேமுதிக தலைவர் விஜயகாந்த்
  • 14.40 லட்சம் பேரின் நகைக்கடன்கள் தள்ளுபடி அதிரடி அறிவிப்பு
  • 12 டூ 18 வயசுக்கு இனி கோவாக்சின்.. அனுமதி கொடுத்தது மத்திய அரசு!
  • 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் மசோதா மக்களவையில் நிறைவேற்றம்
  • “பாஜகவை விட வேளாண் சட்டங்களை பழனிசாமிதான் அதிகமாக ஆதரித்தார்!” – முதலமைச்சர் ஸ்டாலின்
  • ஏன் இந்தி மொழியை கற்க கூடாது? – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள்
  • 3 வேளாண் சட்டங்களும் வாபஸ் – பிரதமர் மோடி அறிவிப்பு !

தலைகவசம் அணியாத 474 நபர்கள் மீது வழக்கு பதிவு

March 17, 2023 தண்டோரா குழு

கோவை மாநகரத்தை “விபத்தில்லா கோவையாக ” உருவாக்கும் பொருட்டு, கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவுப்படி கோவை மாநகரில் ரத்தினம் காலேஜ் பொள்ளாச்சி ரோடு, கிருஷ்ணா காலேஜ் பாலக்காடு ரோடு, பேரூர் பைபாஸ் ரோடு ஜங்ஷன், சீ-3 சாய்பாபா காவல் நிலையம் முன்பு, மருதமலை ரோடு அக்ரி 7-வது கேட், அவிநாசி ரோடு சின்னியம்பாளையம் ஐங்ஷன், காளப்பட்டி ரோடு நேரு நகர் பஸ் ஸ்டாப், கொடிசியா ஜங்ஷன், சத்தி ரோடு அத்திபாளையம் பிரிவு சிக்னல், சரவணம்பட்டி – தூடியலூர் ரோடு உள்ளிட்ட 10 இடங்களில் சிறப்பு வாகன தனிக்கை முகாம் நடத்தப்பட்டது.

இந்த சிறப்பு வாகன தணிக்கை முகாமில், தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டிய 596 இருசக்கர வாகன ஓட்டிகளில், 474 நபர்கள் மீது மோட்டார் வாகன சட்டப்படி வழக்கு பதிவு செய்யப்பட்டு, 122 நபர்கள் எச்சரித்து அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும், 1010 இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு அந்தந்த சிறப்பு வாகன தணிக்கை முகாமில், தன்னார்வ அமைப்புகள் மூலம் விழிப்புணர்வு வகுப்புகள் நடத்தப்பட்டு, அதன் தொடர்ச்சியாக, சிறுவர்கள் போக்குவரத்து பூங்காவில் உள்ள பயிற்சி மையத்தின் மூலமும், விழிப்புணர்வு வகுப்புகள் நடத்தப்பட்டது.

மேலும், தலைக்கவசம் அணிந்து பயணம் செய்த 414 இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டு, தொடர்ந்து வாகனங்களை இயக்கும் போது பாதுகாப்பு வழிமுறைகளை முழுமையாக பின்பற்றுமாறு அறிவுரைகள் வழங்கப்பட்டது.

மேலும் படிக்க