• Download mobile app
02 Jul 2025, WednesdayEdition - 3430
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்

May 20, 2025 தண்டோரா குழு

இரு சக்கர மற்றும் மூன்று சக்கர வாகனப் பிரிவுகளில் உலகளாவிய முன்னணி வாகன உற்பத்தியாளரான டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் தனது கனெக்டெட் தொழில்நுட்ப அடிப்படையிலான பயணிகளுக்கான மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ்-ஐ தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தி உள்ளது.

டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ்,புதுமையான நவீன தொழில்நுட்பத்தை சுற்றுச்சூழலுக்கு ஏற்ற பசுமைத் தீர்வுகளுடன் ஒருங்கிணைத்து பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.இதனால் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலுடன் கூடிய நகர்ப்புற போக்குவரத்து தேவைகளைப் பூர்த்தி செய்யும் மூன்று சக்கர மின்சார வாகனமாக டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் களமிறங்கியுள்ளது.

டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – மிகச்சிறந்த அம்சங்கள்,அசத்தலான பிக்அப் / அருமையான ஆக்ஸலரேஷன், அதிகப்பட்ச வேகம் மணிக்கு 60 கிமீ, உத்திரவாதம் 6 வருடங்கள் / 1.5 லட்சம் கிமீ, க்ரேடபிலிட்டி – 31%,வாட்டர் வேடிங் 500 மிமி,சார்ஜிங் நேரம் – 3 மணி & 30 நிமிடங்கள். இப்பிரிவு வாகனங்களிலேயே முதல் முறையாக அறிமுகமாகும் அம்சங்கள், எல்.இ.டி ஹெட் லேம்ப் மற்றும் டெய்ல் லேம்ப் , ப்ளூடூத்தினால் இணைக்கப்படும் டிவிஎஸ் ஸ்மார்ட் எக்ஸ்சோநெக்ட் மூலம் கனெக்டட் அம்சங்கள் ஆகும்.

டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் அறிமுக நிகழ்ச்சியில் பேசிய டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் வணிக வாகனப் பிரிவான கமர்ஷியல் மொபிலிட்டி பிரிவின் வர்த்தக தலைவர்ரஜத் குப்தா, “தமிழ்நாட்டில் டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பது, லாஸ்ட் மைல் வசதி வாய்ப்பை வழங்குவதற்கு சுற்றுச்சூழலுக்கு உகந்த நிலையான தீர்வுகளை முன்னெடுப்பதில் டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் கொண்டிருக்கும் அக்கறையையும், அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது.நகர்ப்புறங்களின் பரப்பளவு தொடர்ந்து வளர்ச்சிக்கண்டு வருவதால், சுற்றுச்ச்சூழலுக்கு உகந்த தூய்மையான போக்குவரத்து வாய்ப்புகளுக்கான தேவை இதுவரை இல்லாத அளவுக்கு முக்கியத்துவம் பெற்று வருகிறது.டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ், உயரிய செளகரியம் மற்றும் மிகச்சிறப்பான கனெக்ட்டிவிட்டி உடன் மிகவும் மேம்பட்ட மின்சார உந்துவிசையை ஒருங்கிணைக்கிறது.

ஒரு முறை சார்ஜ் செய்தால் நீண்ட தூர பயணிக்கும் வசதி, அசத்தலான ஆக்ஸலரேஷன் மற்றும் மிகத்துரிதமாக சார்ஜ் ஏறும் குறைவான சார்ஜிங் நேரம் போன்ற அம்சங்களின் தனித்துவமான கலவையானது அதிக நேரம் இவ்வாகனம் முழுவீச்சில் செயல்படுவதை உறுதி செய்கிறது.மேலும்,அதிக எண்ணிக்கையிலான சவாரிகளை மேற்கொள்ளவும் உதவுகிறது. இதனால் ஒன்றுக்கு மேற்பட்ட வாகனங்களை இயக்கிவரும் ஃப்ளீட் ஆபரேட்டர்கள் உட்பட இதர வாடிக்கையாளர்களுக்கும் அதிக வருவாய் ஈட்டும் வாய்ப்புகளை அளிக்கிறது.’’என்றார்.

ஒருமுறை சார்ஜ் செய்தால் 179 கிமீ தூரம் எந்தவித தடைகளும் இல்லாமல் பயணிக்கும் வசதி; வெறும் 2 மணி நேரம் 15 நிமிடங்களில் 0 – 80% வரை விரைவாக சார்ஜ் ஆகும் வசதி;வெறும் 3.5 மணி நேரத்தில் 100% சார்ஜ் ஆகும் வசதி; டிவிஎஸ் ஸ்மார்ட் எக்ஸ்சோநெக்ட் மூலம் பயன்படுத்தும் ஸ்மார்ட் சிறப்பம்சங்கள் என அசத்தலான அம்சங்களுடன் டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் உற்சாகமூட்டுகிறது. டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் தற்போது தமிழ்நாட்டில் விற்பனைக்கு கிடைக்கிறது. இதன் விலை ரூ. 2,95,000/- (எக்ஸ்-ஷோரூம்).

இவ்வாகனம் 6 ஆண்டுகள் / 150,000 கிமீ (எது முந்தையதோ அதுவரை) என்ற கவர்ச்சிகர்மான உத்தரவாதத்துடன் கிடைக்கிறது. மேலும் முதல் 3 ஆண்டுகளுக்கு 24/7 சாலையோர உதவிக்கான அம்சங்களை வழங்குகிறது.

மேலும் படிக்க