• Download mobile app
07 Feb 2023, TuesdayEdition - 2554
FLASH NEWS
  • அதிமுக பொதுக்குழு வழக்கு : உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு – ஓ.பி.எஸ் அறிவிப்பு
  • தமிழகத்தில் 10 முதல் 11 நாட்கள் வரை நிலக்கரி கையிருப்பில் உள்ளது-அமைச்சர் செந்தில் பாலாஜி
  • அக்னிபாத் திட்டத்தின்கீழ் இந்திய விமானப்படையில் சேர்வதற்கு ஜூன் 24ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்!
  • தமிழக நிதிநிலை அறிக்கை ஏமாற்றமே – தேமுதிக தலைவர் விஜயகாந்த்
  • 14.40 லட்சம் பேரின் நகைக்கடன்கள் தள்ளுபடி அதிரடி அறிவிப்பு
  • 12 டூ 18 வயசுக்கு இனி கோவாக்சின்.. அனுமதி கொடுத்தது மத்திய அரசு!
  • 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் மசோதா மக்களவையில் நிறைவேற்றம்
  • “பாஜகவை விட வேளாண் சட்டங்களை பழனிசாமிதான் அதிகமாக ஆதரித்தார்!” – முதலமைச்சர் ஸ்டாலின்
  • ஏன் இந்தி மொழியை கற்க கூடாது? – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள்
  • 3 வேளாண் சட்டங்களும் வாபஸ் – பிரதமர் மோடி அறிவிப்பு !

தமிழ்நாட்டில் இரண்டாவது டீலர்ஷிப்பை கோவையில் துவக்கியுள்ளது அல்டிகிரீன்

November 30, 2022 தண்டோரா குழு

இந்தியாவின் முன்னணி வணிக மின்வாகன உற்பத்தியாளரான அல்டிகிரீன், கோவையில் புதிய அனுபவ மையத்தை துவக்கியுள்ளது. நாடு முழுவதும் 90 நாட்களில் துவக்கப்பட்ட சில்லறை விற்பனை டீலர்களில் இது 10வது ஆகும். வணிக பயன்பாட்டிற்கு மின்வாகனம் வாங்க விரும்புவோருக்கு இந்த மையம் புதிய அனுபவத்தை தரும்.சக்தி சாரதா நிறுவனத்தை பங்குதாரராக கொண்டு கோவை கணபதியில் இந்த மையம் துவக்கப்பட்டுள்ளது.

கோவையில் துவக்கப்பட்டுள்ள அல்டிகிரீன் அனுபவ மையத்தினை,சக்தி குழுமத்தின் தலைவர் டாக்டர் என்.எம் மாணிக்கம் துவக்கி வைத்தார்.
வாகன விநியோக டீலர்ஷிப்பில் சக்தி சாரதா குழுமம்,சக்தி சாரதா என்டர்பிரைசஸ் எல்எல்பி மற்றும் சக்தி சாரதா ஆட்டோ ஏஜென்ஸி எல்எல்பி பன்னோக்கு முறையில் வாகனங்கள் மற்றும் அது சார்ந்த பொருள் விற்பனையில் வேகமான வளர்ச்சியை பெற்று வருகிறது. கோவையில் நான்கு ஷோரும்களையும், 3 சேவை மையங்களையும் கொண்டுள்ளது. தமிழ்நாட்டில் 17 மாவட்டங்களில், டிவிஎஸ் மோட்டார் கம்பெனியின் விநியோகஸ்தராக செயல்பட்டு வருகிறது.

அல்டிகிரீன் தலைமை செயல் அதிகாரி மற்றும் நிறுவனர் டாக்டர் அமிதாப் சரண் பேசுகையில்,

“கோவையில் துவக்கப்பட்டுள்ள இந்த புதிய அனுபவ மைய விரிவாக்கத்தின்படி, ஒரு வலுவான தேசிய அளவிலான விநியோக தொடரினை அல்டிகிரீன் வாகனங்கள் விற்பனைக்கு உருவாக்கி வருகிறது. தமிழ்நாட்டில் துவக்கப்பட்டுள்ள இந்த இரண்டாவது டீலர்ஷிப்,இந்த மாநிலத்தில் உள்ள விற்பனை வாய்ப்புகளை பயன்படுத்தும் வகையில் அமையும்.இதற்கு ஏற்ப அமைந்துள்ள அரசுகளின் ஆதரவான கொள்கைகளுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இந்தியாவில் இரண்டாம் நிலை நகரங்களில் அதிகரித்து வரும் மின்வாகன விற்பனையை உயர்த்த இது பெரிதும் உதவும்.சர்வதேச தரம் வாய்ந்த பன்னோக்கு வாகனங்களின் விற்பனையை கோவையில் சக்தி சாரதா ஏஜென்சியுடன் இணைந்து செயல்படுவதில் பெரும் மகிழ்ச்சியடைகிறோம்,” என்றார்.

சக்திசாரதா நிர்வாக இயக்குனர் டி.கே தனசேகரன் பேசுகையில்,

“கோவையில் மின்சார வாகன புரட்சியை அல்டிகிரீன் உடன் இணைந்து மேற்கொள்வதில் பெரும் மகிழ்ச்சியடைகிறோம். சில்லறை விற்பனை மற்றும் ஒரு முன்னணி விநியோகஸ்தராகவும்,புதுமையான யோசனைகளை செயல்படுத்துவதிலும் போட்டிகளை சமாளிக்கும் திறன்களையும் பெற்ற நிறுவனமாக உயர்வதில் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்வாடிக்கையாளர்களின் தேவைகளை அறிந்து திருப்திகரமான சேவையை அளித்து, சர்வதேச வாய்ப்புகளை முதலீடுகளாக மாற்றுவோம்.அல்டிகிரீன் உடன் இணைந்து செயல்பட்டு, நிலையான மகிழ்வான வாழ்க்கையை மக்களுக்கு வழங்கவும், மின்வாகனங்களுக்கு அவர்கள் எளிதாக மாறவும் செயல்படுவோம்,” என்றார்.
தற்போது தமிழ்நாடு மின்வாகன தீர்வுகளுக்கு மாற்றம் பெற்று வருகிறது.தொழில்நுட்ப ரீதியாகவும், ஆராய்ச்சி மற்றும் தீர்வுகளை தருவதிலும்,வாகன உதிரி பாகங்கள் தயாரித்து வழங்குவதிலும், உற்பத்தியிலும் நிபுணத்துவம் பெற்று வருகிறது. உலோக தொழிலிலும், முலதன கருவிகள், டிரக்குகள், குடோன்கள், போக்குவரத்திலும் முன்னேற்றம் பெற்று வருகிறது.

மேலும், சில்லறை விற்பனை, விநியோகம், கடன் மற்றும் நிதியுதவி, பழுது நீக்குதல், பராமரித்தல், கேஸ் ஸ்டேஷன் மற்றும் சவைகளிலும் நல்ல முன்னேற்றம் பெற்று வருகிறது. மின்வாகன மேம்பாட்டிற்கு தமிழ்நாடு ஒரு நல்ல சூழலை பெற்றுள்ளது.
மின்வாகனங்கள் பயன்பாட்டினை மாநில அரசு ஊக்குவித்து வருகிறது.3 சக்கர ஆட்டோக்களுக்கு அனுமதி கட்டணம், சாலை வரி, பதிவு கட்டணம் போன்றவைகளில் சலுகைகளை அளித்து வருகிறது.3 சக்கர மின் சரக்கு வாகனங்களுக்கு 100 சதவீத சாலை வரி, பதிவுக்கட்டணம் இல்லை. இந்த சலுகை 2022 டிசம்பர் 30 வரை மட்டுமே.

மேலும் படிக்க