• Download mobile app
14 Oct 2024, MondayEdition - 3169
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர்கள் குலாலர் சங்கத்தின் 50வது ஆண்டு பொன்விழாவில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்

December 18, 2023 தண்டோரா குழு

தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர்கள் குலாலர் சங்கம்,கோவை மாவட்ட குலாலர் சங்கத்தின் 50வது ஆண்டு பொன்விழா கோவை சிங்காநல்லூர் திருச்சி சாலையில் உள்ள வெங்கடலட்சுமி திருமண மண்டபத்தில் சனி,ஞாயிற்றுக்கிழமைகளில் வெகு விமர்சியாக நடைபெற்றது. உள்ளது.மலர் வெளியீட்டு விழா,மாணவ, மாணவியருக்கு கல்வி பரிசளிப்பு விழா, மின்சக்கர திருவி வழங்கும் விழா ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

மாநிலத் தலைவர் டாக்டர் சேம.நாராயணன் பேசினார்.தொடர்ந்து விழாவில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.இதில்
மண்பாண்டத் தொழிலாளர்கள் பருவமழை பெய்கின்ற அந்த காலங்களில் மண்பாண்டத் தொழில் செய்ய முடியாது என்பதை
கருத்தில் கொண்டு மழைக்கால நிவாரண உதவித் தொகையாக மண்பாண்டத் தொழிலாளர் குடும்பங்களுக்கு தமிழக அரசு தலா ரூ.5 ஆயிரம் தமிழக அரசு வழங்கி வருகிறது.இந்த உதவித்தொகையை ரூ.10 ஆயிரமாக உயர்த்தி மண்பாண்டத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்திட்ட அனைத்து தொழிலாளர்கள் குடும்பங்களுக்கும் வழங்கிட வேண்டுகிறோம்.

மாவட்டங்கள் தோறும் கலை நயமிக்க மண்பாண்டங்கள் தயாரிக்க தொழிற் கூடங்களை அமைக்க தமிழக அரசை கேட்டுக் கொள்கிறோம்.மண்பாண்டத் தொழிலாளர்கள், மண்பாண்டங்கள், நாட்டுச்செங்கல்,சொருகுஓடு செய்வதற்குரிய களிமண்ணை இலவசமாக எடுத்துக்கொள்ள தமிழக அரசு அரசாணை வெளியிட வேண்டும்.

தமிழ்நாடு மண்பாண்டத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் இதுநாள் வரை பதிவு செய்திட்ட அனைத்து தொழிலாளர்களுக்கும் மின்சாரத்தால் இயங்கக்கூடிய மின்சக்கரம் இலவசமாக வழங்கிட மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.

தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பச்சை அரிசி, கரும்பு. சர்க்கரை, முந்திரி, ஏலக்காய் உள்ளிட்ட உணவுப்பொருள்களை ஆண்டுதோறும் தமிழக அரசு விலையில்லாமல் வழங்கி வருகிறது. புத்தாண்டில் விளைகின்ற புது அரிசியை அறுவடை செய்து புதுப்பானையில் பொங்கலிட களிமண்ணால் ஆன ஒரு புதுப்பானையும், ஒரு புது அடுப்பும் அரசு கொள்முதல் செய்து விலையில்லாமல் தந்து மண்பாண்டத் தொழிலாளர்கள் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும்
உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நிகழ்ச்சியில் சமுதாய சிற்பி கோவை மாவட்ட தலைவர் எம்.ராஜா கோபால், மாவட்டச் செயலாளர் முல்லை ஜி. பழனிசாமி, பொருளாளர் சண்முகசுந்தரம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து ஸ்ரீ வள்ளி முருகன் கும்மியாட்ட குழுவினரின் கும்மியாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.

மேலும் படிக்க