• Download mobile app
09 Jun 2023, FridayEdition - 2676
FLASH NEWS
  • அதிமுக பொதுக்குழு வழக்கு : உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு – ஓ.பி.எஸ் அறிவிப்பு
  • தமிழகத்தில் 10 முதல் 11 நாட்கள் வரை நிலக்கரி கையிருப்பில் உள்ளது-அமைச்சர் செந்தில் பாலாஜி
  • அக்னிபாத் திட்டத்தின்கீழ் இந்திய விமானப்படையில் சேர்வதற்கு ஜூன் 24ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்!
  • தமிழக நிதிநிலை அறிக்கை ஏமாற்றமே – தேமுதிக தலைவர் விஜயகாந்த்
  • 14.40 லட்சம் பேரின் நகைக்கடன்கள் தள்ளுபடி அதிரடி அறிவிப்பு
  • 12 டூ 18 வயசுக்கு இனி கோவாக்சின்.. அனுமதி கொடுத்தது மத்திய அரசு!
  • 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் மசோதா மக்களவையில் நிறைவேற்றம்
  • “பாஜகவை விட வேளாண் சட்டங்களை பழனிசாமிதான் அதிகமாக ஆதரித்தார்!” – முதலமைச்சர் ஸ்டாலின்
  • ஏன் இந்தி மொழியை கற்க கூடாது? – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள்
  • 3 வேளாண் சட்டங்களும் வாபஸ் – பிரதமர் மோடி அறிவிப்பு !

தமிழ்நாடு சைக்கிளிங் லீக் இறுதிப்போட்டி – கோவை பெடல்ஸ் அணி முதல் சீசனை வென்றது

November 23, 2022 தண்டோரா குழு

சைக்கிளிங் ஃபெடரேஷன் ஆஃப் இந்தியா, தமிழ்நாடு சைக்கிளிங் அசோசியேஷன், அண்ணாநகர் சைக்கிள்ஸ் மற்றும் பிராண்ட் பிளிட்ஸ் இணைந்து தமிழ்நாடு சைக்கிளிங் லீக் (டிசிஎல்) முதல் சீசனின் இறுதிப்போட்டியை ஞாயிற்றுக்கிழமை (நவ20), மெட்ராஸ் இண்டர்நேஷனல் சர்க்யூட்டில் நடத்தியது. டிசிஎல் போட்டி இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்டது.

முதல் கட்டம் ஆகஸ்ட் மாதம் (சென்னையில்) நடைபெற்றது. இதன் இறுதிப் போட்டி 20 நவம்பர் 2022 அன்று சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்டது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட டிசிஎல் இறுதிப்போட்டியில் கோவை பெடல்ஸ் அணி வெற்றி பெற்று கோப்பையை வென்றது. வெற்றி பெற்ற அணிக்கு சாம்பியன்ஷிப் கோப்பையுடன் 3 லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டது. முதல் ரன்னர் அப் வென்ற ரேன்சைக்கர்ஸ் அணிக்கு ரூபாய் 2 லட்சம் ரொக்கப்பரிசும், இரண்டாவது ரன்னர் அப் வென்ற மெட்ராஸ் ப்ரோ ரேசர்ஸ் அணிக்கு ரூபாய் 1 லட்சம் ரொக்கப்பரிசும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராக நிப்பான் பெய்ன்ட் இந்தியா நிறுவனத்தின் அசோக் பங்கேற்று போட்டியில் வெற்றி பெற்றவர்கள் மற்றும் பங்கு பெற்றவர்களை கௌரவித்தார். மேலும் பெரும்பாலான இளைஞர்களை கொண்ட புதுமையான லீக்கின் ஒரு பகுதியாக இருப்பதற்காக தனது மகிழ்ச்சியை தெரிவித்தார். வரும் ஆண்டுகளில் இந்த லீக் வளர்ந்து சைக்கிளிங் செய்பவர்களுக்கு அதிக பயனளிக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற கோவை பெடல்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரீநாத், டிசிஎல் கோப்பையை வென்றது எங்கள் அணிக்கு பெருமையான தருணம் என்றார். ஒவ்வொரு அணி வீரர்களின் பங்களிப்பும், கடின உழைப்பும் வெற்றிக்கு உதவியது. மேலும் அவர் கூறுகையில் டிசிஎல் போன்ற போட்டிகள் சைக்கிளிங்கை ஒரு தொழில்முறை விளையாட்டாக எடுத்துக்கொள்ளவும், பல தேசிய மற்றும் சர்வதேச நிகழ்வுகளில் பங்கேற்கவும் ரைடர்களை ஊக்குவிக்கிறது. சாம்பியன்களாக, அவர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்தவும், ஒலிம்பிக் போன்ற பெரிய இலக்குகளை நோக்கி செல்லவும் ஒரு தளமாக உள்ளது.

அண்ணாநகர் சைக்கிளிங் நிறுவனரும், மோட்டார் சைக்கிள் பந்தய வீரருமான சுதாகர்,

கிரிக்கெட்டுக்கு ஐபிஎல், கபடிக்கு கபடி பிரிமியர் லீக், கால்பந்து போட்டிக்கு லீக் இருப்பதைபோல சைக்கிளிங்குக்கும் லீக் போட்டி நடத்த வேண்டும் என்று நினைத்தார். இதை பிராண்ட் பிளிட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் டாக்டர் ஜே பி லீலாராம் ஆதரவுடனும், சைக்கிளிங் ஃபெடரேஷன் ஆஃப் இந்தியா, தமிழ்நாடு சைக்கிளிங் அசோசியேஷன் இணைந்து நடத்த திட்டமிட்டு, அனைவரது கூட்டு முயற்சியுடனும் தமிழ்நாடு சைக்கிளிங் லீக் போட்டியை வெற்றிகரமாக நடத்தினார்.

டிசிஎல் வெற்றிகரமாக நடத்தப்பட்டது தொடர்பாக டிசிஎல் இணை நிறுவனர் டாக்டர் ஜே பி லீலாராம் கூறுகையில்,

டிசிஎல் போன்ற போட்டிகள் விளையாட்டின் தொழில்முறை திறனை ஆராய்வதற்கு உதவுகின்றன. இந்த சைக்கிளிங் லீக் போட்டி, புதிய திறமைகளை வெளிக்கொண்டு வருகிறது. இது உலக அரங்கில் விளையாட்டை உயர்த்துகிறது. இந்தியாவில் ஒரு விளையாட்டாக சைக்கிளிங் ஆரம்ப கட்டத்தில் இருப்பதாகவும், பெரிய பிராண்டுகளின் ஸ்பான்சர்ஷிப்பும், ஆதரவும் சைக்கிளிங் போட்டிக்கு பெரிதும் பயனளிக்கும் என்று கூறினார்.

வெற்றி பெற்ற கோவை பெடல்ஸ் அணிக்கு, அணியின் உரிமையாளர் திருமதி ரேக்கா வாழ்த்துக்களை தெரிவித்தார். கோவை பெடல்ஸ் அணி 14 உறுப்பினர்களை கொண்ட புத்துணர்ச்சியூட்டும் இளம் அணியாகும். அதில் 4 ரைடர்கள் 18 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர். அணியில் இரண்டு தேசிய வீரர்களான கேசவராஜ் மற்றும் புருஷோத்தமன் ஆகியோரும் உள்ளனர். எலைட் தேசிய பிரிவு வீரர் ஸ்ரீநாத் அணியின் கேப்டனாக உள்ளார். அல்ட்ரா சைக்கிள் வீரர் பிரசாந்த் துணை கேப்டனாக உள்ளார்.

இந்திய சைக்கிள் கூட்டமைப்பின் (CFI) தலைவர் திரு ஓன்கார் சிங், அணிகளை பாராட்டியதுடன், இந்த லீக்கின் முக்கிய குறிக்கோள், தமிழ்நாட்டின் சைக்கிள் ஓட்டும் திறமைகளையும் எதிர்கால சாம்பியன்களையும் கண்டறிந்து அவர்களின் திறமைகளை அணுகுவதாகும் என்றார். சிஎஃப்ஐ ஆனது சைக்கிளிங்கை ஒரு விளையாட்டாக ஒழுங்குபடுத்தவும், ஊக்குவிக்கவும் உதவுகிறது. மேலும் தகுதியான சைக்கிள் ஓட்டுபவர்களை தேர்வு செய்து சர்வதேச போட்டிகளில் பங்கேற்க வீரர்களை ஊக்குவிக்கிறது.

மேலும் படிக்க