• Download mobile app
21 Oct 2019, MondayEdition - 1349
FLASH NEWS
  • தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்த விசாரணைக்கு ஆஜராக சீமானுக்கு சம்மன்!
  • “2000 ரூபாய் நோட்டு அச்சடிப்பு நிறுத்தம்” – ரிசர்வ் வங்கி
  • நாங்குநேரி தொகுதிக்குட்பட்ட களக்காட்டில் திமுக தலைவர் ஸ்டாலின் பிரசாரம்

தமிழக அரசின் நீட் விலக்கு மசோதா நிராகரிப்பு!

July 6, 2019 தண்டோரா குழு

நீட் தேர்வில் தமிழக மாணவர்களுக்கு விலக்கு தரக் கோரிய 2 சட்ட மசோதாக்கள் நிரக்கரிக்கப்பட்டதாக மத்திய அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

நீர் தேர்வில் இருந்து விலக்கு அளிக்குமாறு தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. அதனை மத்திய அரசு ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று வலியுறுத்தி சென்னை உயர்நீதி மன்றத்தில் பெற்றோர் ஆசிரியர் கழகம் உள்ளிட்ட 4 பேர் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

இந்நிலையில், இம்மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீட் தேர்வில் தமிழக மாணவர்களுக்கு விலக்கு தரக் கோரிய 2 சட்ட மசோதாக்கள் நிரக்கரிக்கப்பட்டதாக மத்திய அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. தமிழக அரசின் 2 சட்ட மசோதாக்களை குடியரசுத் தலைவர் நிராகரித்துள்ளார் என நீட் விலக்கு மசோதாக்களுக்கு விரைந்து ஒப்புதல் பெற உத்தரவிடும் வழக்கில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதையடுத்து, சட்ட மசோதாக்கள் பெறப்பட்டது, நிராகரிக்கப்பட்ட தேதிகளுடன் அறிக்கையாக தாக்கல் செய்ய நீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

மேலும் படிக்க