• Download mobile app
09 Jun 2023, FridayEdition - 2676
FLASH NEWS
  • அதிமுக பொதுக்குழு வழக்கு : உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு – ஓ.பி.எஸ் அறிவிப்பு
  • தமிழகத்தில் 10 முதல் 11 நாட்கள் வரை நிலக்கரி கையிருப்பில் உள்ளது-அமைச்சர் செந்தில் பாலாஜி
  • அக்னிபாத் திட்டத்தின்கீழ் இந்திய விமானப்படையில் சேர்வதற்கு ஜூன் 24ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்!
  • தமிழக நிதிநிலை அறிக்கை ஏமாற்றமே – தேமுதிக தலைவர் விஜயகாந்த்
  • 14.40 லட்சம் பேரின் நகைக்கடன்கள் தள்ளுபடி அதிரடி அறிவிப்பு
  • 12 டூ 18 வயசுக்கு இனி கோவாக்சின்.. அனுமதி கொடுத்தது மத்திய அரசு!
  • 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் மசோதா மக்களவையில் நிறைவேற்றம்
  • “பாஜகவை விட வேளாண் சட்டங்களை பழனிசாமிதான் அதிகமாக ஆதரித்தார்!” – முதலமைச்சர் ஸ்டாலின்
  • ஏன் இந்தி மொழியை கற்க கூடாது? – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள்
  • 3 வேளாண் சட்டங்களும் வாபஸ் – பிரதமர் மோடி அறிவிப்பு !

தமிழகத்தில் சிறுதானியங்கள் பயரிட ஊக்கவிக்கப்பட்டு வருகிறது – அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்

May 24, 2023 தண்டோரா குழு

தமிழகத்தில் சிறுதானியங்கள் பயரிட ஊக்கவிக்கப்பட்டு வருவதாகவும்,10 லட்சம் ஹெக்டர் பரப்பளவில் சிறு தானியம் பயிர் செய்யப்பட்டுள்ளதாக ,தமிழ்நாடு வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கோவையில் தெரிவித்துள்ளார்.

கோவை தமிழ்நாடு வேளான்மைப் பல்கலைக்கழகத்தில் சர்வதேச சிறுதானிய கருத்தரங்கு மற்றும் எதிர்காலம் சார்ந்த சிறுதானிய உணவுப் பொருட்கள் கண்காட்சியை தமிழக,வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் துவக்கி வைத்தார். சிறுதானிய கண்காட்சியில் அமைக்கப்பட்டு இருந்த அரங்குகளை அமைச்சர் பார்வையிட்ட அவர், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.

கண்காட்சியில் புதிய ரக சிறு தானியங்கள், விவசாயிகளுக்கு அதிக லாபம் தரக்கூடிய விதைகள் காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ளது எனவும், சிறு தானியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது எனவும் தெரிவித்தார்.தமிழகத்தில் சிறுதானியங்கள் பயரிட ஊக்கவிக்கப்பட்டு வருகிறது எனவும்,10 லட்சம் ஹெக்டர் பரப்பளவில் சிறு தானியம் பயிர் செய்யப்படுகிறது எனவும் தெரிவித்தார்.

38.2 மெட்ரிக் டன் சிறுதானிய உற்பத்தி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்த அவர்,வேளாண்மை பல்கலைக்கழகத்தில் புதிய ரகங்கள், அதிக லாபம் தரக்கூடிய பயிர்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது எனவும்,
வெளிநாடுகளில் புதிய பயிற்சியை மேற்கொள்ள ஆராய்ச்சி மாணவர்களை அனுப்பும் திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது எனவும் தெரிவித்தார். துபாய், கனடா போன்ற நாடுகளில் மாணவர்கள் அங்குள்ள புதிய முறைகள் அறிந்து பயிலக்கூடிய பயிற்சி மேற்கொள்ள வசதியாக இந்த திட்டம் பல்கலைக்கழகத்தில் துவங்கப்பட்டு உள்ளதாக கூறிய அவர், இந்தாண்டு 50 கோடி ரூபாய் தமிழக அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது எனவும் தெரிவித்தார்.

சிறு தானிய வளர்ச்சிக்காக தரமான விதைகள் உள்ளிட்ட செயல்பாட்டிற்காக 82 கோடி ரூபாய் அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.தென்னை கள் இறக்க விவசாயிகளின் கோரிக்கை தொடர்பாக அனைத்து தரப்பினரிடையும் கலந்தாலோசித்து அரசு முடிவு எடுக்கும் எனவும் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் தெரிவித்தார்.

தொடர்ந்து நடைபெற்ற கருத்தரங்க நிகழ்ச்சியில் வேளாண்மை துறை சார்ந்த ஓய்வு பெற்ற விஞ்ஞானிகளுக்கு அமைச்சர் நினைவு பரிசுகள் வழங்கி கவுரவித்தார்.

மேலும் படிக்க