• Download mobile app
14 Aug 2022, SundayEdition - 2377
FLASH NEWS
  • அக்னிபாத் திட்டத்தின்கீழ் இந்திய விமானப்படையில் சேர்வதற்கு ஜூன் 24ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்!
  • தமிழக நிதிநிலை அறிக்கை ஏமாற்றமே – தேமுதிக தலைவர் விஜயகாந்த்
  • 14.40 லட்சம் பேரின் நகைக்கடன்கள் தள்ளுபடி அதிரடி அறிவிப்பு
  • 12 டூ 18 வயசுக்கு இனி கோவாக்சின்.. அனுமதி கொடுத்தது மத்திய அரசு!
  • 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் மசோதா மக்களவையில் நிறைவேற்றம்
  • “பாஜகவை விட வேளாண் சட்டங்களை பழனிசாமிதான் அதிகமாக ஆதரித்தார்!” – முதலமைச்சர் ஸ்டாலின்
  • ஏன் இந்தி மொழியை கற்க கூடாது? – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள்
  • 3 வேளாண் சட்டங்களும் வாபஸ் – பிரதமர் மோடி அறிவிப்பு !

தமிழகத்தில் ஒரு கோடி கொடி ஏற்றுவதற்கு பாரதிய ஜனதா கட்சி ஏற்பாடு – வானதி ஸ்ரீனிவாசன்

August 2, 2022 தண்டோரா குழு

நாட்டின் 75 வது சுதந்திர தினத்தை அனைவரும் வீடுகளில் தேசிய கொடி ஏற்றி கொண்டாட வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ள நிலையில் தமது சட்டமன்ற தொகுதி அலுவலகத்தில் தேசிய கொடி விநியோகத்திற்கான பிரத்யேக கவுண்டர் அமைக்கப்பட்டுள்ளதாக பாஜக மகளிர் அணி தேசிய தலைவரும் கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

கோவை சித்தாபுதூர் பகுதியில் உள்ள பாஜக மாவட்ட தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வானதி சீனிவாசன்,

75 வது சுதந்திர தினத்தை ஒட்டி கடந்த ஓராண்டாக நாடு முழுவதும் பல்வேறு அமைப்புகள் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வரும் நிலையில் வருகிற 15 ஆம் தேதி நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் தேசிய கொடியேற்றி 75 வது சுதந்திர தினத்தை கொண்டாட வேண்டும் என பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருப்பதாகவும் அதற்கு ஏற்றார் போல் தேசிய கொடி ஏற்றுவது தொடர்பாக விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

இதுவரை கதர் துணியை கொண்டு மட்டுமே தேசியக்கொடி தயாரிக்க வேண்டும், மாலை 6:00 மணிக்கு மேல் தேசியக்கொடி பறக்க விடக்கூடாது என்பது போன்ற விதிகள் சற்றே மாற்றப்பட்டு எம்மாதிரி துணிலும் தேசிய கொடிக்கான அளவு மாறாமல் தயாரிக்க வேண்டும், அதற்குரிய மரியாதையுடன் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும், மாலை 6:00 மணிக்கு மேலும் தேசிய கொடியை பறக்க விடலாம், ஆனால் தேசியக் கொடிக்கு மேலாக எந்த கொடியும் பறக்க விடக்கூடாது என்பது போன்ற வரையறைகள் வகுக்கப்பட்டுள்ளதாக கூறியதுடன், நாடு முழுவதும் 20 கோடி தேசிய கொடிகள் தயாராகி வருவதாகவும் ஜெம் போர்டல் என்ற நிறுவனத்திற்கு மட்டும் 2 கோடி கொடிகள் உற்பத்தி செய்ய ஆர்டர் கிடைத்துள்ளதாகவும் கூறினார்.

கோவை மாவட்டத்திலும் 75 வது சுதந்திர தினத்தை சிறப்பாக கொண்டாட பாஜக ஏற்பாடு செய்து வருவதாகவும் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் தேசியக்கொடி விநியோகத்திற்கான சிறப்பு கவுண்டர் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் ஒரு கோடி கொடி ஏற்றுவதற்கு பாரதிய ஜனதா கட்சி ஏற்பாடு செய்துள்ளதாகவும் வருகிற ஒன்பதாம் தேதி முதல் பாஜகவின் இளைஞர் அணி மற்றும் மகளிர் அணி சார்பில் பல நிகழ்ச்சிகள் நடத்த இருப்பதாகவும் குறிப்பிட்டார். இதேபோல் கோவை அட்டுக்கல் பகுதியில் கருணை பயணம் என்ற அமைப்பு ஆதரவற்றோர் இல்லம் என்ற பெயரில் ஏற்கனவே சட்ட விரோத செயல்பாடுகள் நடப்பதாக கூறி சீல் வைக்கப்பட்ட கட்டிடத்தை தொண்டாமுத்தூர் பகுதி திமுக பிரமுகர்கள் உதவியுடன் மீண்டும் திறந்து சட்டவிரோத செயல்பாடுகளில் ஈடுபட்டு வருவதாகவும் கடந்த வாரம் சாலையோரம் படுத்து உறங்கியவர்கள் ,இரவு நேர காவலாளி ,நல்ல ஆரோக்கியத்துடன் குடும்பத்துடன் உள்ளவர்கள் என பலரையும் வலுக்கட்டாயமாக தங்கள் வாகனத்தில் ஏற்றி தங்களது இல்லத்தில் அடைத்து வைத்து சட்டவிரோத செயலில் ஈடுபட்டனர் என்றார்.

இந்த சம்பவத்திற்கு எதிராக பாஜக போராட்டம் நடத்திவரும் நிலையில் காவல்துறையினர் இத்துடன் இப்பிரச்சினையை கைவிடுமாறு அழுத்தம் தருவதாகவும் கிறிஸ்தவர்கள் நடத்தும் அமைப்பு என்பதால் திமுக நியாயமாக நடவடிக்கை எடுக்குமா என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது எனவும் கூறிய அவர், மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளித்தும் அங்கு அடைக்கப்பட்டவர்கள் இதுவரை எங்கு இருக்கிறார்கள் என்பது குறித்த தகவல் வரவில்லை எனவும் அவர்கள் அனைவரும் விழுப்புரம் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தற்போது தகவல் வந்துள்ளது எனவும் தெரிவித்தார்.

மேலும் மனிதர்களை கடத்தும் இது போன்ற நடவடிக்கைகளுக்கு காவல்துறை மற்றும் அரசு துணை போய் உள்ளது என்றும் காவல்துறையினர் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் விரைவில் வெளிவரும் பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர் எனவும் குற்றம் சாட்டியதுடன், இதற்கு பின்னால் யாரோ பெரிய ஆட்கள் இருக்கின்றனர் எனவும் எனவே இந்த வழக்கு விசாரணையை சிபிசிஐடி க்கு மாற்றி உத்தரவிட வேண்டும் எனவும் வலியுறுத்தினார். கோவையில் பாஜக சார்பில் பிரதமர் நரேந்திர மோடி செஸ் விளையாடுவது போன்ற போஸ்டர் ஒட்டப்பட்டு அதில் *தமிழகத்தில் தலைவரின் ஆட்டம் துவங்கிவிட்டது* என்ற வாசகம் இடம் பெற்றிருப்பது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு,இதில் எவ்வித தவறுல் இல்லை எனவும் மாநில அரசுகள் ஜனநாயகத்திற்கு புறம்பாக செயல்பட்டால் நாட்டில் எந்த மாநிலத்திற்கும் மகாராஷ்டிராவின் நிலை வரலாம் என்று பதில் அளித்தார்.

கோவையில் மழை பெய்யும் நேரத்தில் பல இடங்களில் தண்ணீர் தேங்குவது குறித்து மாநகராட்சி நிர்வாகம் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அமைச்சர் கோவை மாநகராட்சியில் 200 கோடி செலவிடப்பட்டுள்ளது என கூறுவது நடிகர் கவுண்டமணி காமெடி போன்று உள்ளது என்றும் விமர்சித்தார். கோவை மாநகராட்சியில் கவுன்சிலர்கள், மேயர் என அனைவரும் பதவிக்கு வந்த பிறகும் எவ்வித மேம்பாடும் ஏற்படவில்லை எனவும் திமுகவிற்கு ஏன் வாக்களித்தோம் என மக்கள் இன்று கண்ணீர் விடும் நிலை தான் இருக்கிறது என்றும் வானதி சீனிவாசன் கூறினார்.

மேலும் படிக்க