• Download mobile app
07 Dec 2021, TuesdayEdition - 2127
FLASH NEWS
  • 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் மசோதா மக்களவையில் நிறைவேற்றம்
  • “பாஜகவை விட வேளாண் சட்டங்களை பழனிசாமிதான் அதிகமாக ஆதரித்தார்!” – முதலமைச்சர் ஸ்டாலின்
  • ஏன் இந்தி மொழியை கற்க கூடாது? – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள்
  • 3 வேளாண் சட்டங்களும் வாபஸ் – பிரதமர் மோடி அறிவிப்பு !

தமிழகத்தில் இன்று 744 பேருக்கு கொரோனா பாதிப்பு – 14 பேர் உயிரிழப்பு !

November 24, 2021 தண்டோரா குழு

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 744 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில்,

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 744 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக கோவையில் 117 பேருக்கு கொரோனா பாதிப்பு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் ஒட்டுமொத்தமாக கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 27,22,506 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதித்தவர்களில் 14 பேர் உயிரிழந்தனர்.இதன் மூலம் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 36,415 ஆக உள்ளது.அதேசமயம் இன்று மட்டும் 783 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 26,77,607 ஆக அதிகரித்தது.

தமிழகத்தில் இன்று 1,01,624
மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை 5,36,62,064 லட்சம் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.

மேலும் படிக்க