• Download mobile app
20 Oct 2025, MondayEdition - 3540
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தனியார் பள்ளி , கல்லூரிகள் 3 மாதங்கள் கட்டணங்கள் செலுத்த சொல்லி நிர்பந்தம் செய்ய கூடாது – ஆட்சியரிடம் மனு

May 22, 2020 தண்டோரா குழு

தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகள் மூன்று மாத காலத்திற்க்கு கட்டணங்களை செலுத்த சொல்லி நிர்பந்தம் செய்ய கூடாது.பா.ஜ.க சார்பில் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

பாரதிய ஜனதா கட்சியின் மாநில இளைஞர் அணி செயலாளர் மகேஷ்குமார் தலைமையில் 25 மண்டல தலைவர்களுடன் வந்திருந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

கொரோனா தொற்று காரணமாக பொருளாதார ரீதியாக மக்கள் பாதிக்கபட்டு உள்ள நிலையில் தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளில் நடப்பு ஆண்டிற்கான கல்வி கட்டணத்தை உடனடியாக கட்ட சொல்லி அலைபேசி மற்றும் குறுஞ்செய்தி மூலம் நிர்பந்தம் செய்யவதாக இது மனிதாபிமானமற்ற செயல் என குற்றம சாட்டினார். பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கபட்ட பின்னர் 3 மாத கால அவகா அளித்து அவர்கள் பணம் செலுத்தும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொண்டு அதற்கான உத்தரவை மாவட்ட நிர்வாகம் வழங்க வேணும் என கோரிக்கை விடுத்தனர்.

மேலும் கடனுதவி பெற்ற சுயஉதவி குழுவினர் மற்றும் தொழில் கடன் வாங்கியவர்கள் கடனை திருப்பி செலுத்த நிர்பந்தம் செய்வதை தவிர்த்து அவர்களுக்கு கால அவகாசம் வழங்க வேண்டும் எனவும் கேட்டு கொண்டனர்.

மேலும் படிக்க