• Download mobile app
19 Sep 2025, FridayEdition - 3509
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

டெங்குவை ஒழிக்க குப்பைகள், மழைநீரை உடனடியாக அகற்ற வேண்டும் – மாநகராட்சி கமிஷனர் அறிவுறுத்தல்

October 18, 2021 தண்டோரா குழு

டெங்குவை ஒழிக்க தேங்கும் குப்பைகள் மற்றும் மழைநீரை உடனுக்குடன் அகற்ற வேண்டும் என கோவை மாநாகராட்சி கமிஷனர் ராஜகோபால்‌ சுன்கரா அறிவுறுத்தினார்.

கோவை மாநகராட்சி நஞ்சுண்டாபுரம்‌ சுகாதார ஆய்வாளர்‌ அலுவலக வளாகத்தில்‌ தூய்மைப்பணியாளர்கள்‌ மேற்கொள்ளும்‌ பணிகளை மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால்‌ சுன்கரா நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

கொசுவினால்‌ ஏற்படும்‌ நோய்களை தவிர்க்க பொதுமக்களிடம்‌ விழிப்புணர்வை ஏற்படுத்துவது குறித்த அறிவுரைகளை தூய்மைப்பணியாளர்களுக்கு வழங்கினார். மேலும்,நஞ்சுண்டாபுரம்‌ நொய்யல்‌ பிரதான கால்வாயை நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதைத்தொடர்ந்து, சில தினங்களாக பெய்த கனமழையினால்‌ தெற்கு மண்டலம்‌, கரும்புக்கடை,சாரமேடு, பாத்திமா நகர்‌ போன்ற இடங்களில்‌ மழைநீர்‌, கழிவுநீர்‌ செல்லும்‌ கால்வாயில்‌ ஏற்பட்ட அடைப்புகளை போர்கால அடிப்படையில்‌ சரி செய்யும்‌ பணிகளையும், மோட்டார்‌ பொருத்தி அதன்‌ மூலமாக கழிவு நீர்‌ வெளியேற்றும்‌ பணிகளையும்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தற்போது பருவமழை தீவரமடைந்துள்ளதால்‌ தேவையில்லாத தேங்காய்‌ ஓடுகள்‌, பழைய டயர்கள்‌, ஆட்டுக்கல்‌ போன்றவற்றால்‌ கொசுப்‌ புழுக்கள்‌ உற்பத்தி ஆகும்‌ இடங்களை கண்டறிந்தும்‌, டெங்கு கொசுப்புழு உற்பத்தியாவதை தடுப்பது குறித்தும்‌, கொசு ஒழிப்பு பணியாளர்கள்‌ மற்றும்‌ சுகாதார பணியாளர்கள்‌ இப்பணிகளை திறம்பட செய்யப்பட வேண்டும்‌ எனவும் கூறினார்.

பள்ளிகள்‌,கல்லூரிகள்‌, திரையரங்குகள்‌, மருத்துவமனைகள்‌, இதர வணிக வளாகங்கள்‌ ஆகிய இடங்களை தொடர்ந்து ஆய்வு செய்திட வேண்டும்‌. டெங்கு கொசு ஒழிப்பு பணிகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும்‌. மேலும்‌, மாநகராட்சி பகுதிகளில்‌ தேங்கும்‌ குப்பைகள் மற்றும் மழைநீரை போர்கால அடிப்படையில்‌ உடனுக்குடன் அகற்ற வேண்டும் என அவர் அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின்போது கிழக்கு மண்டல உதவி கமிஷனர் செந்தில்குமார்‌ ரத்தினம்‌, நிர்வாகப்பொறியாளர்‌ ராமசாமி, உதவி பொறியாளர்‌ சத்யா மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உடனிருந்தனர்.

மேலும் படிக்க