• Download mobile app
19 Apr 2024, FridayEdition - 2991
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 310 கோவையில் அறிமுகம்

December 4, 2023 தண்டோரா குழு

நாற்பது ஆண்டுகளுக்கும் மேலான ஒரு ஆழ்ந்த அனுபவமுள்ள ஸ்போர்ட்ஸ் பைக்குகளின் கம்பீரமான மரபை பின்னணியாகக் கொண்ட, டிவிஎஸ் மோட்டார் நிறுவனம், தனது அப்பாச்சி ரக பைக்குகளின் அணிவகுப்புக்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில் முற்றிலும் மாறுபட்ட புதிய டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 310-ஐ இன்று தமிழ்நாட்டில் கோயம்புத்தூரில் அறிமுகப்படுத்தியுள்ளது.

மிகப் பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த மாறுபட்ட ஸ்போர்ட்ஸ் பைக் தனது ஆற்றல், வேகம், ஸ்டைல் ஆகியவற்றின் மூலம் இருசக்கர வாகன ஆர்வலர்களின் உற்சாகத்தை முற்றிலும் மாற்றியமைக்கும் வகையில் நிபுணத்துவமுடன் உருவாக்கப்பட்டுள்ளது.

உலகெங்கிலும் உள்ள மோட்டார் சைக்கிள் ஆர்வலர்களையும் ஸ்போர்ட்ஸ் பைக் பிரியர்களையும் ஒரு சேர ஈர்க்கும் வகையில் இந்த பைக் தயாராகியுள்ளது. இது ஈடு இணையில்லாத ரைடிங் அனுபவத்தை உறுதி செய்வதுடன், ஃப்ரீஸ்டைல் ஸ்போர்ட்ஸ் பைக் ஆர்வலர்களுக்கு ஒரு புதிய அனுபவ உலகுக்கான ஆரம்பமாகவும் திகழ்கிறது. பைக் ரைடர்களை ஈர்க்க கூடிய விதத்திலும், பாதுகாப்பையும், செயல்திறனையும், செளகரியத்தையும் அளிக்கக் கூடிய தனித்துவமான வடிவமைப்பு, என்ஜின் தகவமைப்பு, வெப்ப கட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு மாறுபட்ட தொழில்நுட்பங்களை கொண்டதாக திகழும் டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 310 முற்றிலும் புதுமையான பைக்குகளின் வரிசையில் முன்னிலை வகிக்கிறது.

அறிமுக நிகழ்ச்சியில் டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் பிரீமியம் – பிரிவு வர்த்தகத் தலைவர், விமல் சும்ப்ளி கூறுகையில்,

“40 ஆண்டுகால ரேசிங் மரபையும், எங்களின் ட்ராக் டூ ரோடு கொள்கையை அடிப்படையாகக் கொண்டதாகவும் திகழக் கூடிய டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 310 பைக், அப்பாச்சி ரக பைக்குகளின் புதிய தலைமுறையைச் சேர்ந்த முதல் தயாரிப்பாக அறிமுகமாகியுள்ளது. இந்த புதிய டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 310 பைக் தமிழ்நாட்டில் அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

இதுவரையில் இல்லாத வகையில் உற்சாகத்தையும் உத்வேகத்தையும் அளிப்பதன் மூலமாக, இந்த பைக் ஃப்ரீ ஸ்டைல் செயல்திறன் கொண்ட ஸ்போர்ட்ஸ் பைக் சவாரிக்கான ஒரு புதிய தொடக்கமாக விளங்கும். பல்வேறு வகையான புதுமையான தொழில்நுட்பங்களின் மூலம், மற்ற அப்பாச்சி ரக பைக்குகளைப் போலவே, இந்த புதிய அப்பாச்சி ரக மோட்டார் சைக்கிளும் புதிய தொழில் நுட்பத்தை மாற்றியமைப்பதில் குறிப்பிடத்தக்க சாதனையை உருவாக்கும். ஸ்ட்ரீட் ஃபைட்டர் போன்ற அதன் (மனித-யந்திர கலவை) சைபோர்க் தொழில்நுட்பம், அனைத்து வகையான திறன் கொண்ட வேகத்துக்கான நொடிப்பொழுதில் முடுக்கும் ஆற்றலையும், சாலையில் உத்வேகத்துடன் பயணிக்கும் சுறுசுறுப்பபையும், புதிய யுகத்தின் பைக் ஆர்வலர்களுக்கு மோட்டார் சைக்கிள் சவாரிக்கான உற்சாகத்தையும் மேலும் அதிகரித்து கொடுக்கக் கூடியது – ஃப்ரீ ஸ்டைல் ஸ்போர்ட்ஸ் பைக் ஆர்வலர்களுக்கு ஆற்றல் மிக்க சவாரியை தரக் கூடியது.

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் வரிசை ரக பைக்குகள் ஏற்கனவே ப்ரீமியம் லைஃப் ஸ்டைல் இருசக்கர வாகனப் பிரிவில், அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் மாறுபட்ட ஸ்போர்ட்ஸ் பைக் வடிவமைப்புக் கொண்ட ஒரு வலிமை மிக்க, ஆற்றல் வாய்ந்த மோட்டார் சைக்கிள் என நிறுவப்பட்டுள்ளது. டிவிஎஸ் அப்பாச்சி ரக பைக்குகள் அண்மையில் சர்வதேச அளவில் விற்பனையில் 5 மில்லியனை கடந்து சாதனை படைத்துள்ளது. இந்த பிரிவில் மிக வேகமாக வளர்ந்து வரும் ப்ரீமியம் மோட்டார் சைக்கிள் பிராண்டாக டிவிஎஸ் அப்பாச்சி ரகங்கள் திகழ்கின்றன” என்றார்.

இந்த இருசக்கர வாகனப்பிரிவிலேயே முதல் முறையாக அறிமுகமாகி இருக்கும் அம்சங்கள், கன்ட்ரோல் ,டைனமிக் கிளாஸ் டி எல்இடி ஹெட் லேம்ப் ,டைனமிக் பிரேக் லேம்ப் என அம்சங்கள் உள்ளது.முற்றிலும் புத்தம் புதிய சூப்பர் மோட்டோ மோட் உள்பட 5 ரைட் மோடுகள். பருவ கால மாற்றத்திற்கேற்ப மாற்றிக்கொள்ள உதவும் க்ளைமாட்டிக் கன்ட்ரோல் சீட்கள்,என அம்சங்கள் உள்ளது.கோ புரோ கன்ட்ரோலுடன் கூடிய 5” டிஎஃப்டி க்ளஸ்டர், மியூசிக் கன்ட்ரோல், வாய்ஸ் அசிஸ்ட், ஸ்மார்ட் ஹெல்மெட் டிவைஸ் கனெக்டிவிட்டி டெலிபோனி & 6D IMU உடன் கூடிய ரேஸ் ட்யூன்டு டைனமிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல் கார்னெரிங் ஏபிஎஸ்,oகார்னெரிங் ட்ராக்‌ஷன் கன்ட்ரோல்,கார்னெரிங்க்ரூஸ்,கன்ட்ரோல், வீல்லி கன்ட்ரோல்,ஸ்லோப் டிபென்னெட் கன்ட்ரோல் , ரியர் லிஃப்ட்-ஆப் கன் ட்ரோல், ரியர் லிஃப்ட்-ஆப் கன் ட்ரோல் இவ்வாகனப்பிரிவை தனித்துவமிக்கதாக வரையறுக்கும் அசத்தலான அம்சங்கள் ,பைடைரக்ஷனல் குயிக் ஷிப்டர் ,ரேஸ் ட்யூன்ட் லீனியர் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல் ,லைட் வெயிட் அலுமினியம் சப் ஃப்ரேம் ,டயர் பிரஷ்ஷர் மானிட்டரிங் சிஸ்டம் , யுனிக் ரிவர்ஸ் இன்க்ளைன்ட் DOHC என்ஜின் அசத்தலான அம்சங்கள் உள்ளது.டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 310 மோட்டார் சைக்கிள் ரூ.2,42,990, ரூ.2,57,990,ரூ 2,63,990 என 3 கவர்ச்சிகரமான விலையில் கிடைக்கிறது என்றார்.

மேலும் படிக்க