• Download mobile app
22 Oct 2025, WednesdayEdition - 3542
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

டாஸ்மார்க் கடையில் கத்தியை காட்டி மிரட்டி சரக்கு கேட்ட ஆசாமி கைது

February 12, 2020

கோவை அருகே போதை தலைக்கேறிய நிலையில் கத்தியை காட்டி மிரட்டி சரக்கு கேட்ட வாலிபர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.

ஈச்சனாரி பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவர் சவுரிபாளையம் சாலை புலியகுளம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறார். நேற்று இவரது கடைக்கு கத்தியுடன் வந்த வாலிபர் ஒருவர் குடிப்பதற்கு பிராந்தி வேண்டும் என்று கேட்டு மிரட்டியுள்ளார் . அதற்கு முருகேசன் பணம் கேட்டுள்ளார். பணம் கொடுக்க முடியாது என்று கூறி அந்த வாலிபர் தகராறில் ஈடுபட்டுள்ளார் .

இதையடுத்து முருகேசன் ராமநாதபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கத்தியுடன் டாஸ்மார்க் விற்பனையாளரை மிரட்டிய நபரை பிடித்து விசாரித்தனர். பிடிபட்ட நபர் அதே பகுதியை சேர்ந்த மணி என்பவரின் மகன் குழந்தை ராஜ்(25) என்பது தெரியவந்தது. இதையடுத்து டாஸ்மாக் ஊழியரை கத்தியை காட்டி மிரட்டிய வழக்கில் குழந்தை ராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் படிக்க