• Download mobile app
26 May 2024, SundayEdition - 3028
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

டாக்டர்.என்.மகாலிங்கம் விருது பேராசிரியர் டாக்டர் விஸ்வநாத் காரட்டுக்கு வழங்கப்பட்டது

April 7, 2024 தண்டோரா குழு

குமரகுரு நிறுவனத்தின் 2024 ஆம் ஆண்டுக்கான அருட்செல்வர் டாக்டர்.என்.மகாலிங்கம் விருது, புனேவில் உள்ள எம்ஐடி குழும நிறுவனங்களின் நிறுவனர்-தலைவர் பேராசிரியர் டாக்டர் விஸ்வநாத் காரட்டுக்கு மதிப்பு அடிப்படையிலான கல்வி, சமயங்கள், உலகளாவிய சகோதரத்துவம், மனித நலன் மற்றும் அவரது இணையற்ற பங்களிப்புகளுக்காக வழங்கப்பட்டது.

குமரகுரு நிறுவனங்களின் தலைவர் டாக்டர்.பி.கே.கிருஷ்ணராஜ் வாணவராயர், இவ்விழாவின் பிரதம விருந்தினர் இந்திய உச்சநீதிமன்றம் நீதிபதி சுந்திரேஷ், குமரகுரு கல்வி நிறுவனங்களின் தாளாளர் பாலசுப்ரமணியம் மற்றும் குமரகுரு கல்வி நிறுவனங்களின் இணை தாளாளர் சங்கர் வாணவராயர் முன்னிலையில் நிறுவனர் மற்றும் தலைவர் எம்ஐடி குழும நிறுவனங்கள், பேராசிரியர் டாக்டர் விஸ்வநாத் டி கரட் அவர்களுக்கு மதிப்புமிக்க விருதை வழங்கினார்.

கல்வி, தொழில் மற்றும் சமூகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தேசத்தைக் கட்டியெழுப்புவதில் அளப்பரிய பங்களிப்பைச் செய்த சிறப்புமிக்க நபர்களை அங்கீகரிப்பதற்காக, அதன் புகழ்பெற்ற நிறுவனர் டாக்டர்.என்.மகாலிங்கத்தின் நினைவாக, 2014 ஆம் ஆண்டு, குமரகுரு கல்வி நிறுவனங்களால் இந்த மதிப்புமிக்க விருது உருவாக்கப்பட்டது.

அருட்செல்வர் டாக்டர். என். மகாலிங்கம் விருது, சமூகத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்திய மற்றும் தேசிய, தொழில், சமூக, கலாச்சார மற்றும் தலைசிறந்த நபர்களின் சாதனைகளை அங்கீகரிப்பதற்காக நிறுவப்பட்டது. அருட்செல்வர் அய்யாவின் பார்வை, பணி, வாழ்க்கை ஆகியவற்றுடன் தொடர்புடையது. இந்த விருது, மாற்றத்திற்கு வழிவகுப்பதிலும், சிறந்த மற்றும் வலிமையான இந்தியாவை உருவாக்குவதற்கான ஆற்றல்மிக்க பார்வையை செயல்படுத்துவதிலும் முக்கிய பங்காற்றிய ஆளுமைகளை கவுரவிக்கிறது.

இதுவரை, 2014 முதல் 7 ஆளுமைகளுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. தொழிலதிபர், கல்வியாளர் டாக்டர் பழனி ஜி பெரியசாமி மற்றும் திரு ஏ.வி. வரதராஜன்ஆகியோர் 2014 இல் இந்த விருதை முதன்முதலில் பெற்றவர்கள்.

2016 ஆம் ஆண்டில் சிறந்த கல்வியாளர் டாக்டர் கே. ஆறுமுகம் அவர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டது. திரு மானுவல் ஆரோன், முதல் இந்திய சர்வதேச செஸ் மாஸ்டர் இவ்விருதனை 2017 ஆம் ஆண்டு பெற்றார். திரு ஜி.டி. கோபால் தொழில்முனைவோர் மற்றும் சர்வதேச உறவுகளின் ஊக்குவிப்பாளர் மற்றும் தலைசிறந்த தமிழ் அறிஞர் டாக்டர் அவ்வை நடராஜன் 2018 இல் இவ்விருதால் கவுரவிக்கப்பட்டனர். டி.வி.எஸ் மோட்டார் நிறுவனத்தின் தலைவர் டாக்டர் வேணு சீனிவாசன் 2022 இல் விருதைப் பெற்றார்.

இந்நிகழ்ச்சியில் நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் பேசுகையில், டாக்டர் என்.மகாலிங்கம் மற்றும் பேராசிரியர் டாக்டர் காரட் ஆகியோர் தங்கள் சொந்த வெற்றிகளுக்கு அப்பால் சிந்திக்கும் திறனை வெளிப்படுத்தி, மாற்றத்திற்கு வழி வகுத்த சிறந்த மனம் படைத்தவர்கள் என்றும், அவர்களைப் போன்ற ஆளுமைகள் இப்பகுதி இளைஞர்களிடமிருந்து இன்னும் உருவாக வேண்டும் என்றும் அவர் வாழ்த்தினார்.

விருதை ஏற்றுக்கொண்ட டாக்டர் விஸ்வநாத் காரட், “அவர் (டாக்டர். என். மகாலிங்கம்) ஒரு தெய்வீக ஆன்மாவாக இருந்தார், அவர் பணிந்து ஆசி பெறுவதற்காகவே நான் இங்கு வந்தேன், என்றார்.

மேலும் அவர் பேசுகையில்,மற்ற நாடுகளுக்கு அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கான பாதையை காட்டும் உலகளாவிய தலைவராக இந்தியா உருவெடுக்கும் என சுவாமி விவேகானந்தர் உறுதியாக நம்புவதாகவும், அதுபோன்ற தருணம் தற்போது வந்துள்ளது என்றும், அது நமது கடமை என்றும் வலியுறுத்தினார். நாம் அனைவரும் இந்தியாவை விஸ்வகுருவாக மாற்றுவோம், இதன் மூலம் அடிப்படையில் ஒரே குடும்பமாக இருக்கும் இந்த உலகம் முழுவதும் பயன்பெறும், என்றார்.

மேலும் படிக்க