• Download mobile app
15 Sep 2025, MondayEdition - 3505
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஜே.என்.யூ பல்கலைகழகம் மூடப்பட வேண்டிய ஒன்று – குர்மூர்த்தி

January 14, 2020 தண்டோரா குழு

துக்ளக் பத்திரிக்கையின் 50-வது ஆண்டு விழா சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயூடு கலந்துகொண்டு துக்ளக் 50-வது ஆண்டு விழா மலரை வெளியிட்டார். முதல் பிரதியை நடிகர் ரஜினிகாந்த் பெற்றுகொண்டார்.

விழாவில் துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி பேசியதாவது:-

தனக்கு முன் இருக்கும் பொறுப்பு என்ன என்பது நடிகர் ரஜினிக்கு தெரியும். நாத்திக அரசியலுக்கு எதிரான இந்து அரசியலை உருவாக்கியவர் எம்.ஜி.ஆர் தான். குடியுரிமை சட்ட விவகாரத்தில் நாட்டில் கலவரத்தை ஏற்படுத்தும் நிலையை எதிர்கட்சிகள் கொண்டுவந்துள்ளனர். இது ஆபத்தானது. ஜேஎன்யூ பல்கலைக்கழகம் திருத்தப்பட வேண்டிய ஒன்று. திருத்த முடியவில்லை எனில் மூடப்பட வேண்டிய ஒன்று. குடியுரிமை சட்டத்தை முதலில் மாற்ற வேண்டும் என சொன்னவர் ஜவஹர்லால் நேரு . லஞ்சத்தில் திமுக, அதிமுக இரண்டு கட்சிகளுக்கும் வேறுபாடு இல்லை. இன்னும் மூன்று அல்லது ஆறு மாதத்தில் நாட்டின் பொருளாதார நிலை மாறும்.நான் எதையும் வெளிப்படையாக செய்ய மாட்டேன். அதனால் அது பற்றி இங்கு சொல்ல மாட்டேன். தமிழ்நாட்டில் இந்து எதிர்ப்பு அரசியல் இருக்கிறது என்பதை நான் ஏற்றுகொள்ளமாட்டேன்’

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் படிக்க