• Download mobile app
31 Mar 2023, FridayEdition - 2606
FLASH NEWS
  • அதிமுக பொதுக்குழு வழக்கு : உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு – ஓ.பி.எஸ் அறிவிப்பு
  • தமிழகத்தில் 10 முதல் 11 நாட்கள் வரை நிலக்கரி கையிருப்பில் உள்ளது-அமைச்சர் செந்தில் பாலாஜி
  • அக்னிபாத் திட்டத்தின்கீழ் இந்திய விமானப்படையில் சேர்வதற்கு ஜூன் 24ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்!
  • தமிழக நிதிநிலை அறிக்கை ஏமாற்றமே – தேமுதிக தலைவர் விஜயகாந்த்
  • 14.40 லட்சம் பேரின் நகைக்கடன்கள் தள்ளுபடி அதிரடி அறிவிப்பு
  • 12 டூ 18 வயசுக்கு இனி கோவாக்சின்.. அனுமதி கொடுத்தது மத்திய அரசு!
  • 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் மசோதா மக்களவையில் நிறைவேற்றம்
  • “பாஜகவை விட வேளாண் சட்டங்களை பழனிசாமிதான் அதிகமாக ஆதரித்தார்!” – முதலமைச்சர் ஸ்டாலின்
  • ஏன் இந்தி மொழியை கற்க கூடாது? – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள்
  • 3 வேளாண் சட்டங்களும் வாபஸ் – பிரதமர் மோடி அறிவிப்பு !

சேரன் செவிலியர் கல்லூரி இணைந்து வழங்கிய மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம்!

March 17, 2023 தண்டோரா குழு

சேரன் செவிலியர் கல்லூரியுடன், சத்யன் கண் மருத்துவமனை மற்றும் கோயமுத்தூர் க்ளாக்கோமா அறக்கட்டளை இணைந்து பொதுமக்களுக்கான மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாமை இன்று நடத்தின.சேரன் செவிலியர் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற முகாமில்,கல்லூரி முதல்வர் டாக்டர்.மீனாகுமாரி, சேரன் பார்மசி கல்லூரியின் டீன் டாக்டர். சிவகுருநாதன், சத்யன் கண் மருத்துவமனையின் கண் மருத்துவ நிபுணர் டாக்டர். அருணா ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர்.

மேலும், தெலுங்குப்பாளையம், ஆண்டிபாளையம் சுற்றுவட்டாரப் பகுதி மக்களுக்கு ஏதுவாக கல்லூரி சார்பில் இலவச பேருந்துகள் இயக்கப்பட்டன.குழந்தைகள் உட்பட 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்ட இந்த முகாமில், கண்புரை, மாறுகண், டயாபடிக் ரெட்டினோபதி, கண்நீர் அழுத்தம் உள்ளிட்ட நோய்களுக்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. ”ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 12-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை உலக க்ளாக்கோமா வாரமாக அனுசரிக்கப்படுகிறது. க்ளாக்கோமா என்னும் கண்நீர் அழுத்த நோய் எவ்வித அறிகுறியின்றி கண் இழப்பை ஏற்படுத்தும். ஆகையால், க்ளாக்கோமா வாரத்தை முன்னிட்டு பொதுமக்களுக்காக இலவச கண் பரிசோதனை முகாம் நடத்துகின்றோம்” எனக் கல்லூரி முதல்வர் கூறினார்.

முகாமில் கலந்து கொண்ட சுப்பிரமணியம் பேசுகையில், ”சென்ற ஆண்டு கண் சிகிச்சை செய்து கொண்டதால், இந்த இலவச முகாமில் கண் பரிசோதனை செய்து கொண்டேன், என்னுடன் எனது மனைவியும் கண் பரிசோதனை செய்து கொண்டார்” என்றார்.

மேலும் படிக்க