• Download mobile app
07 Dec 2022, WednesdayEdition - 2492
FLASH NEWS
  • அதிமுக பொதுக்குழு வழக்கு : உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு – ஓ.பி.எஸ் அறிவிப்பு
  • தமிழகத்தில் 10 முதல் 11 நாட்கள் வரை நிலக்கரி கையிருப்பில் உள்ளது-அமைச்சர் செந்தில் பாலாஜி
  • அக்னிபாத் திட்டத்தின்கீழ் இந்திய விமானப்படையில் சேர்வதற்கு ஜூன் 24ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்!
  • தமிழக நிதிநிலை அறிக்கை ஏமாற்றமே – தேமுதிக தலைவர் விஜயகாந்த்
  • 14.40 லட்சம் பேரின் நகைக்கடன்கள் தள்ளுபடி அதிரடி அறிவிப்பு
  • 12 டூ 18 வயசுக்கு இனி கோவாக்சின்.. அனுமதி கொடுத்தது மத்திய அரசு!
  • 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் மசோதா மக்களவையில் நிறைவேற்றம்
  • “பாஜகவை விட வேளாண் சட்டங்களை பழனிசாமிதான் அதிகமாக ஆதரித்தார்!” – முதலமைச்சர் ஸ்டாலின்
  • ஏன் இந்தி மொழியை கற்க கூடாது? – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள்
  • 3 வேளாண் சட்டங்களும் வாபஸ் – பிரதமர் மோடி அறிவிப்பு !

சர்க்கரை நோய் விழிப்புணர்வுக்காக ரூபாய் 10 லட்சம் செலவிடும் கோவை மருத்துவ தம்பதி

November 25, 2022 தண்டோரா குழு

சர்க்கரை நோய் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பொதுமக்கள் பயனுள்ள தகவலை பங்கேற்று பயன் பெற நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் டாக்டர் வேலுமணி ஜெயலட்சுமி தம்பதியினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

140 கோடி மக்கள் தொகையில் 10 கோடி மக்களுக்கு மேல் இரண்டாம் வகை நீரழிவு நோயின் பாதிப்பு உள்ளது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.40 ஆண்டுகளுக்கு முன்பு சக்கர நோய் என்றால் ஒரு சிலருக்கு இருக்கும் பணக்கார வியாதி என்று சொல்லுவார்கள் இன்று நாட்டில் பெரும்பாலானோருக்கு சர்க்கரை நோய் ஏற்பட்டு விட்டது. இதற்கு நமது வாழ்க்கை முறையில் ஏற்பட்ட பெரும் மாற்றங்கள் உணவு பழக்க வழக்கங்கள் மற்றும் உடல் உழைப்பு இல்லாததால் ஏற்படும் விளைவுகள் சர்க்கரை நோயில் கொண்டு போய் விடுகிறது உடலின் ஒவ்வொரு உறுப்பாக ஊடுருவிச் சென்று பெரும் பாதிப்பை உருவாக்குவதால் மனித சமுதாயத்தை வாழும் முறையை சீர்குலைப்பதோடு பொருளாதாரத்தையும் சீரழிக்கிறது என்பது வருத்தத்திற்குரியது.

சர்க்கரை நோயிலிருந்து விடுபடவும் சர்க்கரை நோய் வராமல் தடுக்கவும் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை அவிநாசி ரோட்டில் உள்ள சுகுணா கல்யாண மண்டபத்தில் சிறுதானிய பொருட்காட்சி ஏற்பாடு செய்துள்ளோம் இதில் கம்பு ராகி சோளம் திணை உள்ளிட்ட எட்டு வகையான சிறு தானிய பொருட்களைக் கொண்டு உணவுப் பொருள்கள் தயாரித்து வைக்கின்றோம் பொது மக்களுக்கு இது குறித்த விளக்கமும் அளிக்கப்படும். தொடர்ந்து பங்கேற்கும் பொதுமக்களுக்கு சர்க்கரை நோய் குறித்த பட்டிமன்றமும் மருத்துவர் சிவராமன் பங்கேற்று பேசும் நீரழிவை கட்டுப்படுத்தும் நல் உணவுகள் தலைப்பில் பங்கேற்று பேசுகிறார்.

நிகழ்ச்சியில் பங்கேற்ப நுழைவு கட்டணம் இல்லை பொதுமக்கள் இந்த பயனுள்ள நிகழ்ச்சியில் திரளாக பங்கேற்க வேண்டும் என்று அதிக பொருளாதாரத்தை செலவு செய்துள்ளோம்.சக்கரை நோய் குறித்த விழிப்புணர்வை பெற்றிட பிரத்யோகமான புத்தகம் எழுதப்பட்டு அவற்றை வெளியிட உள்ளோம் புத்தகத்தில் சக்கர நோய் தாக்கம் என்ன அவற்றிலிருந்து விடுபடுவது எப்படி உணவு பழக்கங்கள் முறை படுத்துவது எப்படி என்பது குறித்து எழுதப்பட்டுள்ளது இவற்றை ஓய்வு பெற்ற நீதிபதி தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவர் கோவிந்தராஜ் வெளியிடுகிறார்.

முன்னாள் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தலைவர் அசோக் பெற்றுக் கொள்கிறார்.இதில் பல்வேறு நிபுணர்கள் பங்கேற்று சக்கரை நோய் குறித்த தகவல்களை சந்தேகங்களை வெளிப்படுத்துகின்றனர்.பொதுமக்களுக்கு இது நல்ல வாய்ப்பு இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது எங்களது அன்பான வேண்டுகோள் என்று டாக்டர் வேலுமணி ஜெயலட்சுமி தம்பதியினர் தெரிவித்தனர்.

மேலும் படிக்க